- Saturday
- July 25th, 2026
கொரோனா வைரஸ் காரணமாக ஆபத்தை எதிர் நோக்கியுள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி ஒட்டுமொத்த மக்கள் வாழ்வினையும் உரிய முறையில்நடாத்திச் செல்வதற்கு அத்தியாவசியமான பொதுச் சேவைகளை வழங்குதல், வழிநடாத்தல்,ஒருங்கிணைத்தல் மற்றும் பின்தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதிமேதகு ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால்நியமிக்கப்பட்ட விசேட செயலணி தற்போது தனது பணிகளை ஆரம்பித்துள்ளது. கௌரவ பிரதம அமைச்சர் அவர்களின் முழுமையான கண்காணிப்பின்...
மத்திய வங்கியால் 24.03.2020 வெளியிடப்பட்ட சுற்று நிருபம் இது. சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு Working Capital தேவைக்காக 4 வீத வட்டியுடனான கடன்களை 6 மாதம் வட்டியின்றியதாகவும் வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது அதற்கான விண்ணப்பங்களை 30.4.2020 வரை வழங்க வங்கிகளை அறிவுறுத்தியுள்ளது. கிடைக்கும் விண்ணப்பங்களை 45 நாட்களுக்குள் இறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்று நிருபத்தினை பார்வையிடுவதற்கு
அரச துறை உத்தியோகத்தர்களில் ஏப்ரல் மாத சம்பளம் வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட்டும் என்று திறைசேரியின் செயலாளர் அறிவித்துள்ளார். அரச துறை உத்தியோக்கத்தர்களின் ஏப்ரல் மாதம் சம்பளம் வரும் 7 ஆம் திகதி என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் கோரோனா வரைஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டத்தால் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த...
யாழ்.போதனா வைத்தியசாலை மாதாந்த கிளினிக் ஊடாக பயன் பெறும் யாழ்.தீவக மக்கள் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். கொரோனோ தொற்று தாக்கம் காணரமாக ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளதால் நோயாளர் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக மருத்துவ கிளினிக்கில் சிகிச்சை பெறுகின்றவர்கள் எதிர்நோக்கும் பாதிப்பையடுத்து யாழ் போதனா வைத்தியசாலை...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உலர் உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துகளை வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் வியாபார நிலையங்கள் மற்றும் மருந்தகங்களின் விவரம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப்பொருள்கள் மற்றும் மருந்துகள் தொடர்பில் தொலைபேசி ஊடாக ஓடர் வழங்கினால் வீடுகளுக்கு கொண்டு அவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரோனா வைரஸ்...
எதிர்வரும் 30 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 3 ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த காலப்பகுதி அரசாங்க விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னரும் இதுபோன்றதொரு காலப்பகுதி அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட் 19 வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசியமான மருந்துப் பொருட்களைச் சிரமமின்றி பெற்றுக்கொள்ளும் முறைமையொன்றைத் தயாரிப்பது தொடர்பாக அரசாங்கம் கவனஞ் செலுத்தியுள்ளது. அத்தியாவசிய பொதுச் சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்குதல், வழிநடாத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பின் தொடர் நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் மற்றும்...
அரசாங்கம் வழங்கும் நிவாரணங்கள் தொடர்பாக போலியான பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என பிரதம அமைச்சர் மஹிந்த அவர்கள் சமூக ஊடகங்களிடம் வேண்டிக்கொள்கிறார். கோவிட் 19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதுடன், மக்களுக்கு அத்தியாவசியமான நுகர்வுப் பொருட்களை வழங்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டம் தொடர்பாக போலியான தகவல்களை சமூகமயப்படுத்துவோருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக கவனஞ்...
நாட்டில் இன்று (மார்ச் 26) வியாழக்கிழமை மாலை 4.45 மணிவரையான 48 மணிநேரத்தில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார். நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 102 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் 3 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றனர். அவர்களில் 7 பேர் சிகிச்சை பெற்று...
ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்தில் மிக அவசர தேவையின்றி வெளியில் செல்வதற்கு அனுமதி இல்லை என்றும், ஒரு பிரதேசத்திருந்து இன்னொரு பிரதேசத்திற்கு செல்வதற்கு அனுமதி இல்லை எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்hறு தெரிவித்தார். ‘ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் ஒரு...
மருந்துகள் முதலான அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு விசியோகிக்க தபால் ஊழியாகளின் உதவியை பெற்றுக்கொள்ள முடியுமா என்பது குறித்து அவசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆராயுமாறு தபால் மா அதிபருக்கு தாம் ஆலோசனை வழங்கியிருப்பதாக உயர்கல்வி, தொழில் நுட்பம் புத்தாக்க மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல்...
வட மாகாணத்தின் வவுனியா, யாழ்ப்பாண மாவட்டத்தில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை, 27காலை 06.00மணிக்கு நீக்கப்படவிருந்தது. எனினும் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மட்டும் மறு அறிவித்தல் வரை அதனை...
மக்கள் வங்கியின் யாழ்ப்பாணம் பிரதான வீதிக் கிளை நாளைக் காலை 8 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை வாடிக்கையாளர் சேவைக்காக திறந்திருக்கும் என்று யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் அறிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கி, வர்த்தக வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் அத்தியாவசி சேவைகளாக ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் அவை ஊரடங்கு நடைமுறையில் உள்ள...
மிருசுவில் படுகொலை சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி யாழ். மிருசுவில் இராணுவ முகாமுக்கு அருகில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, 8 அப்பாவி தமிழர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில்...
சுதந்திரமாக நடமாடும் ஒருவரால் 30 நாட்களில் குறைந்தபட்சம் 500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் டொக்டர் ஹரித அளுத்கே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் கடைப்பிடிக்காவிட்டால் மார்ச் 25 தொடக்கம் ஏப்ரல் 7ஆம் திகதி வரையான காலப்பகுதியில்...
யாழ்ப்பாணம் நகரப் பகுதியை சுத்தமாக்கும் பணி யாழ். மாநகர சபையின் சுகாதார ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டது. ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவகற்றும் செயற்பாடு மந்தகதியில் இடம்பெற்று வந்தது. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலையிலிருந்து யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட யாழ்ப்பாண நகர்ப் பகுதி சுத்தம் செய்யப்பட்டதோடு கழிவகற்றும் செயற்பாடும்...
கொரோனா வைரஸ் பரவரை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவியரீதியில் அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை அமுல்ப்படுத்தியிருக்கும் நிலையில், மதுபோதையில் வீதியில் அலைந்து திரிந்த பொதுஜன பெரமுன கட்சியின் யாழ்.வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவ்வாறு கைது செய்யப்பட்டவர் வட்டுக்கோட்டைத் தொகுதியின் அமைப்பாளர் திருலோகநாதன் என பொலிசார் தெரிவித்தனர். நேற்று இரவு பொலிஸார் ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த பொழுது...
வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்கள் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் நணபகல் 12 மணிக்கு மீள நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களான அபாய வலயத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தளர்த்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய 16 மாவட்டங்களில்...
சமூக வலைத்தளங்களில் மற்றும் உடனடி தகவல் சேவைகளாக வைபர், வட்ஸ்அப் செயலிகளில் வெளியிடப்படும் போலிச் செய்திகள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார். “சமூக வலைத்தளங்களான முகநூல், இணையத்தளங்கள் மற்றும் உடனடி தகவல் சேவைகளாக வைபர், வட்ஸ்அப், மெசெஞ்ஜர் உள்ளிட்ட செயலிகளில் கோரானா வைரஸ்...
Loading posts...
All posts loaded
No more posts
