திருநெல்வேலி சந்தை இடம் மாறுகிறது – யாழில் அவசர நடவடிக்கை!

நல்லூர் பிரதேச எல்லைக்கு உட்பட்ட பிரதான பொதுச் சந்தையான திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம் செய்யப்பட்டு பல குழுக்களாக வெவேறு இடங்களில் இயங்கவைக்க ஆவன செய்யப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்தார். யாழ்ப்பணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது நல்லூர் எல்லைக்குள் இருக்கும் திருநெல்வேலி சந்தைக்கு மக்கள் நெருக்கடியை...

யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்படும்போது புதிய நடவடிக்கைகள்- யாழ். அரச அதிபர் அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது பிரதான சந்தைகள் மூடப்படும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார். இதற்கு மாற்றீடாக பொது மைதானங்கள், பொது இடங்கள் போன்றவற்றில் பரந்த வெளியில் வியாபாரங்களை நடத்துமாறு அறிவுறுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில்நேற்று (புதன்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத்...
Ad Widget

இலங்கையில் 500 இற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம்!!

இலங்கையில் 500 இற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று(புதன்கிழமை) காலை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவர் வைத்தியர் அனுரத்த பாதனிய இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ஒருவரிடமிருந்து ஏனையவர்களுக்கு கொரோனா பரவுகின்ற விகிதத்தினை...

ஒசுசல மருந்தகங்கள் திறக்கப்படும்!

ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியிலும் நாட்டிலுள்ள சகல 'ஒலுசல' மருந்தகங்களும் திறந்திருக்குமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வைத்தியசாலைகள், மருந்தகங்கள் என்பனவற்றிலிருந்து நாளாந்தம் மருந்துகளை கொள்வனவு செய்வோர் ஊரடங்குச்சட்டத்தினால் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். இந்த விடயத்தைக் கருத்திற் கொண்டு சுகாதார அமைச்சு இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது. நோயாளர்களின் நோய் தொடர்பான அட்டை, மருந்துச் சீட்டு என்பனவற்றை ஊரடங்குச்...

காய்ச்சல், இருமல் ,தொண்டை வலி, இசுவாசிப்பதில் சிரமம் முதலான அறிகுறிகள் உங்களிடம் காணப்பட்டால்!!

காய்ச்சல், இருமல் ,தொண்டை வலி, இசுவாசிப்பதில் சிரமம் முதலான அறிகுறிகள் உங்களிடம் காணப்பட்டால் நீங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் எனக் கூற முடியாவிட்டாலும், இவை கொரோனா வைரஸ் தொற்றின் போது ஏற்படும் அறிகுறிகள் என்பதால் உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க கீழே குறிப்பிட்டுள்ள படிகளைப் பின்பற்றவும். இலங்கை நாட்டின் குடிமகனாக இது உங்கள் தேசிய பொறுப்ப்பாகும். மருத்துவ...

யாழ்.மாநகரத்தில் கிருமி தொற்று நீக்கி விசிறும் பணி ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தப் பணி மாநகரில் பொதுமக்கள் கூடும் இடங்களில் முன்னேடுக்கப்படவுள்ளது. சிறப்பு அதிரடிப் படையினரின் கொழும்பிலிருந்து வருகை தந்த...

இல்லாதவர்களுக்கு உதவுவோம் – விக்னேஸ்வரன் அழைப்பு

இல்லாதவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமூக பொறுப்புடன் உதவுவோம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கோரோனா தோற்று நோய் பரவலைத் தடுக்கும் பொருட்டான ஊரடங்கு உத்தரவு காரணமாகவும், வர்த்தக, விவசாய, மீன்பிடி மற்றும் உற்பத்தி செயற்பாடுகளின் இடைநிறுத்தம் காரணமாகவும், தொழில் வாய்ப்புக்களை இழந்து...

கடன் நிலுவை செலுத்ததால் பணம் மீள எடுக்க மறுத்த அரச வங்கி!!

வறுமைக்கோட்டுக்கு உள்பட்ட குடும்பம் ஒன்றுக்கு தனிநபர் கடன் தவணைக் கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தைக் காண்பித்து வைப்பிலிட்ட பணத்தை மீளப்பெறுவதற்கு வங்கி முகாமையாளர் மறுத்துள்ளார். இந்தச் சம்பவம் இலங்கை வங்கியின் வட்டுக்கோட்டை கிளையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட தாயார் தெரிவித்தார். ஒரு மில்லியன் ரூபாவுக்கு உள்பட்ட வங்கிக் கடன் நிலுவைகள் அறவீட்டை 3 மாதங்களுக்கு இடைநிறுத்தி...

தாவடி – சுதுமலை வீதி போக்குவரத்துக்கு தடை!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் வீடு அமைந்துள்ள தாவடிக் கிராமம் முழுமையான கண்காணிப்பில் உள்ள நிலையில் இன்று (24.03.2020) காலை 8.30 மணியில் அப்பகுதியில் இருந்து வெளியேறவோ அல்லது உள் நுழையவோ அனுமதி மறுக்கப்பட்டது. கிராம சேவகர் , பிரதேச செயலாளர் , உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் , பொதுச் சுகாதார அதிகாரி , பொலிஸார்...

ஊரடங்கு வேளையில் மருந்தகங்களைத் திறப்பதற்கு அனுமதியளிக்க முடிவு!!

நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள வேளையில் மருந்தகங்களைத் திறப்பதற்கு அனுமதியளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் பொதுமக்கள் மருந்தகங்களிலும் கூடுவதால் ஏற்படும் நெருக்கடியைக் குறைக்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடமாடும் மருந்துப் பொருள்கள் விநியோகத்தை முன்னெடுக்க மாவட்ட...

சுவிஸ் போதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் காப்பாற்றியது பொலிஸாரே!!! – ஆளுநர்

சுவிட்ஸர்லாந்தில் இருந்து வந்த மதபோதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரே காப்பாற்றினார்கள் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியுள்ளார். யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களை சந்தித்து கருத்துக் கூறியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் கூறுகையில், “சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் யாழ்ப்பாணத்தில் பாதுகாத்தது பொலிஸாரே. மேலும் பொலிஸார் வடமாகாண சுகாதார...

சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்!

யாழ்ப்பணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான சுவிஸ் மதபோதகருடன் நேரடித் தொடர்பிலிருந்ததாக அடையாளம் காணப்பட்ட 18 பேர் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். பலாலியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு இரண்டு கட்டங்களாக இவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பான மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத்...

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 101ஐ எட்டியது!!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் 04 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் அப்பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும்போதும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மருந்தகங்களையும் திறக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நேரம் வடக்கில் அலைமோதிய மக்கள்!

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுக்கடுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு வடக்கு மாகாணத்திலும் கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருந்து. இந்நிலையில் மக்கள் அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக நகர் பகுதிகளில் திரண்டிருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில்...

வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் திட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் உதவித் திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில், “யாழ். மாவட்டத்தில் அனைத்துப் பிரதேச செயலர் பிரிவுகளிலும் அன்றாடம் கூலித்தொழில் செய்துவரும் வருமானம் குறைந்த குடும்பங்களின் விபரம் அந்தந்த கிராம சேவகர் ஊடாகத் திரட்டப்பட்டது. இந்நிலையில்...

கொரோனா தொற்றுக்குள்ளான உள்ளூர் முதலாவது நோயாளர் குணமடைந்தார்!!

கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது நோயாளர் குணமடைந்து IDH வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க COVID 19 பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் இதனநேற்று தெரிவித்தார்.

வீடுகளிலிருந்து பயனுள்ள பணிகளைச் செய்யுங்கள் – ஜனாதிபதியின் செயலர் அறிவுரை

கொவிட் 19 என்ற கோரோனா வைரஸ் தொற்று நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்துவதுடன், அரச பொறிமுறையினை தடையின்றி பேணுவதற்காக பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள் அரச நிறுவன தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தரவால் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபை பிரதம செயலாளர்கள், மாவட்ட...

வடக்கில் ஊரடங்குச் சட்டம் பிற்பகல் 2 மணிக்கே மீள நடைமுறைப்படுத்தப்படும்

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்கள் மற்றும் கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2 மணிக்கு மீள நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. முன்னர் நண்பகல் 12 மணிக்கு மீள நடைமுறைப்படுத்தப்படும் என தீர்மானிக்கப்பட்ட போதும் பிற்பகல் 2 மணிக்கே நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி...

சமுர்த்தி பயனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்க ஏற்பாடு!! – அமைச்சர் டக்ளஸ்

கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு வறிய மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாக சமுர்த்திப் பயனாளிகளுக்கு முற்பணமாக 10 ஆயிரம் ரூபா நிதியை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம்...

தனிநபர் கடன்களுக்கு 3 மாதங்கள் விடுவிப்பு; லீசிங்கள் 6 மாதங்களுக்கு விடுவிப்பு – ஜனாதிபதி

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஒரு மில்லியன் ரூபாயுக்கு உள்பட்டு பெறப்பட்ட அனைத்து தனிநபர் கடன்களையும் திருப்பச் செலுத்தும் காலம் 3 மாதங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். அத்துடன், அதிகூடிய எல்லை 50 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட அனைத்துக் கடனட்டைகளுக்குமான கொடுப்பனவு வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும்...
Loading posts...

All posts loaded

No more posts