வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஒரு மில்லியன் ரூபாயுக்கு உள்பட்டு பெறப்பட்ட அனைத்து தனிநபர் கடன்களையும் திருப்பச் செலுத்தும் காலம் 3 மாதங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

அத்துடன், அதிகூடிய எல்லை 50 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட அனைத்துக் கடனட்டைகளுக்குமான கொடுப்பனவு வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முச்சக்கர வண்டிக் கொள்வனவுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனக் குத்தகை (லீசிங்) கொடுப்பனவை 6 மாதங்களுக்கு இடைநிறுத்திவைக்கவும் ஜனாதிபதி முடிவெடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட கோரோனா தொற்று பரம்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையால் ஏற்பட்ட தொழில் இழப்புகளுக்கு நிவாரணம் வழங்கும் ஜனாதிபதியின் தீர்மானங்களில் இந்த சலுகைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.