Ad Widget

கோரோனா பரிசோதனையை யாழ்.பல்கலை மருத்துவபீடத்தில் முன்னெடுக்க ஏற்பாடு!!

கோரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான ஆய்வு கூடப் பரிசோதனை அடுத்த வாரம் தொடக்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தத் தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அனலைதீவில் உள்ள ஒருவருக்கு கோரோனா தொற்று சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வை்ததியசாலைக்கு அனுப்பிவைக்கப்படுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு மருத்துவர்கள் தயார்ப்படுத்திக்கொண்டுள்ளனர்.

அவரது மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி ஆய்வு கூடப் பரிசோதனைக்கு உள்படுத்தப்படும். எனினும் அடுத்த வாரம் தொடக்கம் கோரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான ஆய்வு கூடப் பரிசோதனை அடுத்த வாரம் தொடக்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் உள்ள பிசிஆர் இயந்திரத்தை இயக்குவதற்கு போதிய ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.எனவே வரும் புதன்கிழமை இந்தப் பரிசோதனைகளை அங்கு செய்ய முடியும் என்று நம்புகின்றேன்.

Related Posts