- Saturday
- July 25th, 2026
கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்த குடும்பத்தலைவரை நேரடியாக காலதாமதமின்றி அரச வைத்தியசாலையில் சேர்த்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். “அவருக்கு சுவாசக் கோளாறு எனத் தெரிவித்து தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மறுநாளாநேற்று முன்தினமே நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு கோரோனா வைரஸ் தொற்று இருப்பதாகத்...
சமுர்த்தி பயனாளிகளுக்கு ஐந்தாயிரம் ரூபா வீதம் இரண்டு தவணைககளில் நிவாரண உதவிகள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதோடு அதன் முதற் கட்ட கொடுப்பனவுகள் தற்போது வழங்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்த அமைச்சரவையின் போது கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பாக அமைச்சரவை...
கொரோனா வைரசின் தாக்கம் பாரதூரமாக அமையலாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் யாரும் சமூக இடைவெளியை பேணுவதாக இல்லை. உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவில் பெப்ரவரி 27 இல் 60 நோயாளிகள். 3 வாரங்களுக்கு முன்னர், மார்ச் 3 இல் எம்மைப் போல் அவர்களும் 100 நோயாளிகள் தானே என்று...
கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கான சிகிச்சைகளை வழங்கும் எவிகன் என்ற மருந்து வகை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இன்று(செவ்வாய்கிழமை) அவை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டு குறித்த மருந்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்திருந்தது. இதன்படி, முதற்கட்டமாக 5 ஆயிரம் மருந்துகள்...
கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்கு மத்தியில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை மேற்கொள்வதில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று பதிவாளர் நாயகம் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.. இந்த விடயங்கள் தொடர்பாக பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: பதிவாளர் நாயகம் திணைக்களம் எனது இலக்கம் :...
கண், மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்கள் சமகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்கள் பலவற்றை வழங்கியுள்ளனர். கொரோனா-வைரஸ் பரவியுள்ள காலகட்டத்தில் பொதுமக்களையும், குறிப்பாக பிள்ளைகளையும், முறையாக பாதுகாப்பது இதன் நோக்கமாகும். மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் கொவிட்-நைன்ரீன் வைரஸ் பரவக்கூடிய அபாயம் காரணமாக, மருத்துவமனைகளில் ENT சிகிச்சை சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. எனவே, கண், மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட...
கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது. தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி விஞ்ஞானி மைக்கேல் லெவிட் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வுகானில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிர் இயற்பியலாளரும், வேதியலுக்கான...
மார்ச் மாதம் 10ஆம் திகதிக்குப் பின்னர் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வந்த அனைவரையும் நாளை முதலாம் திகதி புதன்கிழமைக்கு முன்னர் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார். பதிவு செய்யாமல் மறைந்திருந்தை தொடர்பில் கண்டறியப்படுவோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மார்ச் மாதம் 10ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டுக்கு...
புதிய கோரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும் இடர் நிலைமைக்குள்ளான குடும்பங்கள் மற்றும் நபர்களுக்கு மேலும் பல பண மற்றும் பொருள் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளன என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஒரே தடவையில் வழங்கப்படும் கொடுப்பனவாக 5000...
நாட்டில் நேற்றையதினம் கோரோனா வைரஸால் உயிரிழந்த நீர்கொழும்பு வாசி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன. நீர்கொழும்பு கொச்சிக்கடையைச் சேர்ந்த 64 வயதுடையவர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோரோனா தொற்றுக்குள்ளாகியதால் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு நேற்று மாற்றப்பட்டார். அவர் இருதய நோயாளி என்பதுடன் சுவாசக் கோளாறு காரணமாக...
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இறுதித்திகதி நாளையாகும். இத்திகதி மேலும் நீடிக்கப்பட மாட்டாது எனப் பரீட்சைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் எஸ்.பிரணவதாசன் தெரிவித்தார். கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதித்திகதி கடந்த 13 ஆம் திகதியுடன் முடிவடைந்தது என்று குறிப்பிட்ட பிரதி ஆணையாளர் நாயகம், கொரோனா வைரஸ் பரவல்...
கொரோனா வைரஸ் தொற்றுக் காலப்பகுதியில் பின்பற்றப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி சில விடயங்களை அறிவித்துள்ளார். அதன்படி, ஒரு நாளில் ஒரு சில தடவைகள் மாத்திரம் இந்நோய் நிலை பற்றிய தகவல்களுக்காக நம்பிக்கையான வலைதளங்களை பார்வையிடுங்கள். அளவுக்கு அதிகாமாக நோய்பற்றிய செய்திகளையும் வீடியோக்களையும் பார்வையிடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும். மன உளைச்சல்...
கொரோனா தொற்றுநோய் தொடர்பான விபரங்கள் மற்றும் அறிவித்தல்களுக்காக வடக்கு மாகாணத்தில் 24 மணி நேர உதவி அழைப்பெண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், 021-2217982 மற்றும் 021-2226666 ஆகிய தொலைபேசி இலக்கங்க்ள அறிடுகப்படுத்தப்பட்டுள்ளன. வடமாகாணத்தில் கொரோனா தொற்றுநோயினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், இவை தொடர்பாக சுகாதார ரீதியில் பொதுமக்கள் தமக்குத் தேவையான ஆலோசனைகளையும், தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும்...
கொரோனா வைரசு தொற்றை தடுப்பதற்காக அரசாங்கம் பொலிஸ் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இலங்கையில் மாத்திரமின்றி பெரும்பாலான நாடுகளில் இந்த நடைமுறை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது ஆயூதங்களை பயன்படுத்தி மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையல்ல. மக்கள் நலத்தை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையின் ஒரு கட்ட நடவடிக்கை. இதன் கீழ் நாம் வீட்டில் தங்கியிருப்பதுபோல் நோய் எதிர்ப்பு சக்தி நமது...
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார். அத்துடன், ஓகஸ்ட் மாதம் நடைபெறும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்கு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2019 டிசெம்பரில் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மார்ச் 28ஆம் திகதி வெளியிடுவது...
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளமையால் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சிறப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று திங்கட்கிழமை நண்பகல் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பரிசோதனைக்காக கோரோனா சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது....
கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் மேலும் இருவர் இன்று (மார்ச் 30) திங்கட்கிழமை பிற்பகல் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 122ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது. அவர்களில் 11 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர்....
கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து, எட்டு மாதங்களுக்கு முன்பே கணித்த, 14 வயது இந்திய சிறுவன், கொரோனா தொற்று, மே, 29ல் முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளான். இந்தியாவை சேர்ந்த, 14 வயது சிறுவன், அபிக்யா ஆனந்த். சிறு வயதிலேயே ஜோதிடத்தில், வானவியல் சாஸ்திரத்தில், நிபுணத்துவம் பெற்றான். தன் ஜோதிட அறிவுக்காக, பல்வேறு பதக்கங்களையும், விருதுகளையும்...
யாழ். மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக உடன் நிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநரிடம் யாழ். மாநகர முதல்வர் ஆர்னோல்ட் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிற்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். குறித்த கடிதத்தில், “உலக அளவில் பாரிய சவாலாக மாறியுள்ள கொரோனா வைரஸினால் ஏற்படும்...
நாட்டில் கோரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு ஏப்ரல் 27ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கவேண்டும் என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். “கோரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ‘எவிகன்’ எனப்படும் 5 ஆயிரம் மருந்து வில்லைகளை இலங்கைக்கு ஜப்பான் வழங்கியுள்ளது. இந்த மருந்து எதிர்வரும்...
Loading posts...
All posts loaded
No more posts
