கொரோனா தொற்றுநோய் தொடர்பான விபரங்கள் மற்றும் அறிவித்தல்களுக்காக வடக்கு மாகாணத்தில் 24 மணி நேர உதவி அழைப்பெண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், 021-2217982 மற்றும் 021-2226666 ஆகிய தொலைபேசி இலக்கங்க்ள அறிடுகப்படுத்தப்பட்டுள்ளன.
வடமாகாணத்தில் கொரோனா தொற்றுநோயினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், இவை தொடர்பாக சுகாதார ரீதியில் பொதுமக்கள் தமக்குத் தேவையான ஆலோசனைகளையும், தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் செயற்படும் வண்ணம் உதவி அழைப்பெண் சேவையானது இன்று (திங்கட்கிழமை) முதல் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
					



 
												
							 
												
							 
												
							 
												
							 
												
							