- Sunday
- May 3rd, 2026
கொழும்பில் கொரோனா வைரஸ் பரவல் அபாய பகுதியில் இருந்து பாரவூர்தி ஒன்றில் யாழ்ப்பாணத்துக்கு தப்பிவந்த 8 பேரையும் அவர்களை சட்டத்துக்குப் புறம்பாக ஏற்றிவந்த பாரவூர்தி சாரதியையும் விடத்தல்பளை படைமுகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து கண்காணிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கு, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார். நாட்டில் கோரோனா...
கொரோனா வைரஸ் தொடர்பான PCR பரிசோதனைக்காக தனியார் வைத்திய சாலைகளையும் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளொன்றுக்கு ஆயிரம் பேரிடம் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இலங்கையில் குறிப்பாக கொழும்பில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கொழும்பில் உள்ள தோட்டப்புறங்களில் உள்ள மக்களிடம் கொரோனா தொற்று குறித்த...
வடமாகாணத்தில் அடுத்தக்கட்டமாக வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்களுக்கும் அத்தியாவசிய சேவைகளுக்காக வெளிமாவட்டங்களுக்குச் சென்று வருபவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதேவேளை, இதுவரை வடக்கு மாகாணத்தில் 346 பேருக்கு வைரஸ் தொற்றுத் தொடர்பான பரிசோனை நிறைவுபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்...
கொழும்பிலிருந்து வடமாகாணத்தில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு சுமார் 1100 பேர் அழைத்துவரப்பட்டமை தொடர்பாக தமக்கு எதுவும் தொியாது. என மாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். கொழும்பு- பண்டாரநாயக்க மாவத்தை, மருதானை, ஹசல்வத்தை போன்ற பகுதிக ளை சேர்ந்தவர்கள் மற்றும் பாகிஸ்த்தானிலிருந்து நாடு திரும்பிய 1100 பேர் வடக்கு மாகாணத்தில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு...
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அகற்றப்பட்ட, அகற்றப்படாத பகுதிகளில் நடமாடும் வர்த்தகர்கள் பின்பற்ற வேண்டிய விசேட வழிமுறைகளை பொலிஸார் அறிவித்துள்ளனர். நடமாடும் வர்த்தகர்கள் ஊடாக கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதால், இந்த விசேட வழிகாட்டல் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. வீடுகளுக்கு சென்று மீன், மரக்கறி, பழங்கள் மற்றும் பேக்கரி உற்பத்திகளை விற்பனை செய்வோருக்கே...
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் சமூகத் தொற்றாக ஏற்படவில்லை என யாரும் கூறிவிட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் வைத்திய கலாநிதி த. காண்டீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (புதன்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் குறிப்பிடுகையில், “யாழ்ப்பாணத்தில் சமூகத் தொற்று ஏற்படவில்லை எனவும் வெளிநாட்டிலிருந்து...
கொழும்பில் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த 7 பேர் தொடர்பில் விவரங்கள் கிடைத்துள்ளன. அந்த விவரங்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளன என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு நடத்திய அவசர ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்....
கொழும்பிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த இரண்டாவது நபரும் சங்கானையில் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சங்கானை தேவாலய வீதியில் அவரது வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு மாவட்டம் டாம் வீதியில் தங்கியிருந்த ஒருவர், பாரவூர்தியில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த நிலையில் அவரை உடனடியாக தேடிக் கண்டறிந்த...
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவரும்,தெல்லிப்பழை ஶ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவருமான கலாநிதி.ஆறு.திருமுருகன் அவர்களின் அன்பான வேண்டுதல். உலகம் முழுவதும் வாழும் மக்கள் கொரோணா என்னும் கொடிய நோயின் துன்பத்திலிருந்து விடுபட அனைவரும் தொடர்ந்து பிரார்த்தியுங்கள்.உயிர்களைக் காப்பதற்காக தமது உயிரையும் பொருட்படுத்தாது மனித நேயத்தோடு செயற்படும் மருத்துவ சமூகத்துக்கும் ஏனையவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு அவர்களின் வாழ்வுக்காகவும்...
வட்டுக்கோட்டை பொலிஸார் இளம் குடும்பத்தலைவர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து அவரை சரமாரியாகத் தாக்கி பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேலும் மேற்படி சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக விளக்க தருமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது....
யாழ்ப்பாணத்தில் கொடையாளர்களால் வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகளை அரசியல்வாதி ஒருவருக்கு வழங்குமாறு பணித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் பதிலளித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டம் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. குறித்த கூட்டத்தின்போது தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன்...
"கோவிட் 19 வைரஸ் கிருமியால் ஏற்படுகின்ற தொற்றுநோயாகும். இது உலகளாவிய ரீதியிலும், எமது நாட்டிலும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதை அனைவரும் அறிவீர்கள். இந்த ஆபத்தான தருணத்தில் முக்கியமான பாதுகாப்பு நடைமுறைகளை வேலைத்தலங்களில் கட்டாயமாகப் பின்பற்றுவதனை உறுதி செய்து கொள்வதன் மூலமாகவே எம்மையும் எமது சமூகத்தையும் நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்" என்று வடக்கு...
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைக் கருத்திற்கொண்டு முச்சகர வண்டிகள் மற்றும் வாடகைக் கார்களில் (Taxis) சாரதி தவிர்ந்து இருவர் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று பதில் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார். நாட்டில் 18 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் போக்குவரத்துச் சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முச்சக்கர வண்டிகள் மற்றும் வாடகைக் கார்கள் சேவைகளுக்கு...
ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியதன் பின்னர் கோரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையில் குறைந்தளவானோரின் பங்குபற்றுதலுடன் அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார். அரச மற்றும் தனியார் துறைகளின் சேவைகளை மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலையில் பேணுவதற்கு உதவும் வகையில் திட்டமிடுமாறும் ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்....
மஞ்சள் தூள் ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச சில்லறை விலையாக 750 ரூபாய் என பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் தூளுக்கான இந்த விலை நிர்ணயம் இன்று ஏப்ரல் 21ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அதிசிறப்பு வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோரோனா வைரஸ் பரவலையடுத்து சந்தையில் மஞ்சள் மற்றும்...
கொரோனா வைரஸ் நெருக்கடியின் மிக மோசமான விடயங்கள் இனிமேல்தான் இடம்பெறப்போகின்றன என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்டிரோஸ் அட்ஹனோம் கெப்ரெயேசஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். எங்களை நம்புங்கள் ,மோசமான விடயங்கள் இனிமேல் தான் இடம்பெறப்போகின்றன என அவர் தெரிவித்துள்ளார். இது இன்னமும் பலர் புரிந்துகொள்ளாத வைரஸ் என தெரிவித்துள்ள அவர் இந்த துயரத்தினை தடுத்துநிறுத்வோம்...
யாழ்ப்பாணம் மிருசுவில் படுகொலை விவகாரத்தில் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விஷேட படைப் பிரிவின் ஸ்டாப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மன்னிப்பளித்து விடுவித்தமைக்கு எதிராக, கொலையுண்டோர் குடும்பத்தார் சார்பில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி அளித்த மன்னிப்பை மீள் பரிசீலனை செய்யுமாறும்...
இலங்கையின் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் யூன் மாதம் 20 ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்பிரல் 25 ஆம் திகதி இடம்பெற இருந்த பொதுத் தேர்தல் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக ஏற்பட்ட அசாதாரண நிலையை அடுத்து பிற்போடப்பட்டு இருந்தது. எனினும் பொதுத்தேர்தலை திகதி குறிக்காமல் பிற்போட முடியாது என எழுந்த...
இலங்கை நடுத்தர மற்றும் சிறிய ஆடை உற்பத்தியாளர்கள் சங்கத்தினால் சுகாதாரப் பாதுகாப்புமிக்க ஆடைகள் தொகுதியொன்று பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த சுகாதாரப் பாதுகாப்புமிக்க ஆடைகள் வைத்தியசாலைச் சேவைகள் சபையின் பணிப்பாளர் சங்கைக்குரிய ரஜவெல்ல சுபுதி தேரர் அவர்களின் ஆலோசனைப்படி கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர் பந்துல குணவர்தன அவர்கள் மற்றும் இலங்கை...
சுய அரசியல் இலாபத்திற்காக குடாநாட்டு மக்களை பிழையாக வழிநடத்த எத்தனிக்கும் “உதயன்” பத்திரிகை தொடர்ச்சியாக பிழையான மற்றும் பொய்யான செய்திகளையே வெளியிட்ட வண்ணம் உள்ளது. ஊரடங்கு அமுலில் இருந்த போதும் இப்பத்திரிகை அச்சடித்து பத்திரிகைகளை வெளியிட்டு விநியோகித்து வந்தது. இதன் மூலம், அரசாங்கம் ஊரடங்கு சட்டம் நடைமுறைகளை முழுமையாக புறந்தள்ளி செயற்பட்டுள்ளதோடு, கொரோனா தொற்றை தடுக்கும்...
Loading posts...
All posts loaded
No more posts
