லண்டனில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய யாழ் யுவதி கொரோனாவினால் உயிரிழப்பு!

லண்டனில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வந்த யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த யுவதி கொரோனாவினால் உயிரிழந்துள்ளார். லண்டனில் முத்து எயில்மெண்ட என்ற அங்காடி நடத்தி வரும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட யாழினி என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். தான் நடாத்தும் அங்காடி ஊடாக லண்டனில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு...

புதிய தொலைக்காட்சி கல்வி அலைவரிசை இன்று முதல் ஆரம்பம்!!

இலங்கை அனைத்து பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் 'குருகெதர' புதிய தொலைக்காட்சி அலைவரிசை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் கருத்திட்டத்திற்கு அமைவாக உயர் கல்வி மற்றும் வெகுசன ஊடக...
Ad Widget

அபாயம் நீங்கவில்லை ! யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் முக்கிய வேண்டுகோள்!!

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குத் தளர்த்தப்பட்டாலும் அபாயம் நீங்காததால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானமாக பொது மக்கள் செயற்பட வேண்டுமென யாழ் போதான வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் போதனாவில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன் போது இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.. கொரோனோ வைரஸ்...

இன்று மட்டும் இதுவரையில் புதிய நோயாளர்கள் 24 பேர்!! மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 295!!

இன்றைய தினம் (2020.04.20) இதுவரையில் கொரோனா வைரசு தொற்றுக்கு உள்ளாகி உறுதி செய்யப்பட்ட புதிய நோயாளர்கள் 24 பேர் பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதி செய்தார். இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 295 ஆகும். இன்றை தினத்தில் பதிவான அனைத்து நோயாளர்களும் கொழும்பு...

நாடுமுழுவதும் வெள்ளி இரவு 8 மணி முதல் திங்கள் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு!!

நாடுமுழுவதும் வரும் 24ஆம் திகதி இரவு 8 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் ஏப்ரல் 27ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை நடைமுறையில் இருக்கும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த சில மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் மற்றும் தளர்த்தப்படும்...

ஊரடங்கு இல்லை என்ற எண்ணம் எமக்கு வேண்டாம் – மக்களிடம் யாழ்ப்பாணம் ஆயர் கனிவான வேண்டுகோள்

யாழ்ப்பாணம் மாவடத்தில் ஊரடங்கு இல்லை என்ற எண்ணம் எமக்கு வேண்டாம் என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை கேட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கடந்த ஒரு மாத காலமாக வீட்டோடு வாழ்ந்து எமது சமூக சூழமைவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை நாம் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்துள்ளோம். பெரிதும்...

அராலியில் பொலிஸார் குடும்பஸ்த்தர் மீது தாக்குதல்!!

உரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அயல் வீட்டாருடன் பேசியதற்காக இளம் குடும்பஸ்தரின் வீட்டுக்குள் நுழைந்து பொலிஸார் அட்டகாசம் புரிந்திருப்பதுடன், குடும்ப தலைவரை பொலிஸ் நிலையத்திற்கு இழுத்து சென்றுள்ளனர். [caption id="attachment_101888" align="aligncenter" width="1254"] crime scene tape focus on word 'crime' in cenematic dark tone with copy space[/caption] இந்த சம்பவம்...

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும், சுகாதார அறிவுறுத்தல்களை கடைப்பிடிப்பது அவசியம்

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட வேளையில், கொரோனா வைரஸ் அபாயத்தை கருத்திற் கொண்டு, இனைவரும் செயற்படவேண்டும' கொரோனா வைரசு தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார். தமது சுகாதார பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி, பணிகளை ஆரம்பிக்குமாறு தொழில்புரிவோருக்கு இராணுவத்...

யாழ்ப்பாணத்தில் குறைந்தது 7 நாள்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை நீடிக்கவேண்டும்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் குறைந்தது 7 நாள்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வைத்திருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்டச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பான எழுத்துமூலக் கோரிக்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளருக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அதன் வடமாகாண இணைப்பாளர் மருத்துவர் த. காண்டீபன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த அறிக்கையில்...

ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கான நோக்கம் பொருளாதாரத்தை மீண்டும் வலுப்படுத்துவதே – ஜனாதிபதி

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கான நோக்கம் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கே என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது குறித்து, தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டு மக்கள் சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிப்பது மற்றும் சமூக பாதுகாப்பிற்காக பொறுப்புடன் செயற்படுவதும் கட்டயமாகுமென தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தை...

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நான்கு யாழ்ப்பாணத்தவர்கள் குணமடைந்தனர்!

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிப்பிலிருந்த நிலையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு பேர் முழுமையாகக் குணமடைந்து வீடுதிரும்பினர் இந்தத் தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அரியாலையைச் சேர்ந்த நான்கு பேரே இவ்வாறு முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பும் அவர்களை வெலிகந்தையிலிருந்து...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 269 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மாத்திரம் 15 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் பழகிய சிலரே அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள்...

ரயில் பயணிகள் பின்பற்றவேண்டிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு – மீறுவோர் திரும்பி அனுப்பப்படுவர்

நாளை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும்போது தொடருந்து சேவைக்கான டிக்கெட் வழங்கும்போது சிறப்பு முறை பின்பற்றப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் திலந்தா பெர்னாண்டோ தெரிவித்ததாவது; ரயில்வே திணைக்களம் பல அலுவலக தொடருந்து சேவைகளை நாளை மீண்டும் ஆரம்பிக்கின்றது. அதனால் பயணிகளுக்கு சிறப்பு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு பெட்டியின்...

தேர்தலை நடாத்துவது பல்வேறு வகையிலும் மக்களின் நலனுக்குப் பாதிப்பாகவே அமையும் – கூட்டமைப்பு

எதிர்வரும் சில மாதங்களுக்கு வைரஸ் அச்சுறுத்தல் நிலை தொடரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது தேர்தலை நடாத்துவது பல்வேறு வகையிலும் மக்களின் நலனுக்குப் பாதிப்பாகவே அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த...

அரசாங்க அலுவலகங்களினால் கடைபிடிக்கப்படவேண்டியவை – அரசாங்கம்

கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் வழமையான நாளாந்த செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்காக மாவட்டங்களை திறக்கும் காலப்பகுதியில் அரசாங்க அலுவலகங்களினால் கடைபிடிக்கப்படவேண்டிய வழிகாட்டுநெறிகள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றுநிருபம் மூலம் அமைச்சுச் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேசச் செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்களின்/நியதிச் சட்டச் சபைகளின்...

அன்னை பூபதியை நினைவில் கொள்வோம் – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

அன்னை பூபதியை நினைவில் கொள்வோம் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறித்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அன்னை பூபதியின் 32வது நினைவு தினம் இன்றாகும். தமிழ் மக்களின் விடுதலை யாகம் ஒரு இக்கட்டான காலகட்டத்தை அடைந்தபோது அதனை முன்னகர்த்த அந்த வேள்வித்தீயில்...

கொரோனா வைரஸ் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றத் தேர்தல்

அமெரிக்கா, இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் அண்மைக் காலத்தில் துரிதமான பொருளாதார வளர்ச்சியை அடைந்துக் கொண்டு, பலமாக காணப்பட்ட நிலையிலேயே அந்த நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பாதிப்பு ஏற்பட்டது. எனினும், இலங்கை கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் மத்தியிலேயே இந்த பேரிடருக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை...

தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படும் நபர்களைக் கண்காணிப்பதற்கான பாதுகாப்பான கை வளையல் தொடர்பாக பிரதம அமைச்சர் அவர்கள் கவனஞ் செலுத்தியுள்ளார்

தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படும் நபர்களைக் கண்காணிப்பதற்குப் பயன்படுத்த முடியுமான உபகரணமொன்றைப் பன்னிபிட்டியவைச் சேர்ந்த அமில சமீர ரத்நாயக்க அவர்கள் உருவாக்கியுள்ளார். கை வளையலாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய தயாரிப்பு நேற்று (2020.04.17) பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கவனத்திற்கு முன் வைக்கப்பட்டது. கை வளையலாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த உபகரணத்தை உயர்ந்த முடிவாக்கத்துடன் தயாரிப்பதற்குத் தேவையான...

கோரோனா அச்சம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை!!; ஊரடங்கு தொடர்பில் முக்கிய அறிவித்தல்

கோரோனா தொற்று அபாயம் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை. எனவே வைரஸ் பரவுவதற்கு மீண்டும் இடமளிக்காத வகையில் அனைத்து சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி பொறுப்புடனும் பொறுமையாகவும் செயற்படுமாறு அரசு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் தொழிலுக்காக சென்றுவருவதை தவிர வேறு சந்தர்ப்பங்களில் வீடுகளில் இருந்துகொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள் மற்றும் ஏனைய...

நாட்டினை நாசமாக்க எம்மால் இடமளிக்க முடியாது – வைத்தியர் ஹரித அழுத்கே

நாட்டினை நாசமாக எம்மால் இடமளிக்க முடியாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா தோற்றுநோய் குறித்த பரிசோதனைகள் முடிந்த பின்னர் அதன் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே அடுத்த வாரம்...
Loading posts...

All posts loaded

No more posts