கலாநிதி குருபரன் என்னிடமும் சட்ட ஆலோசனை கோரினார். அவருக்கு அதனை வழங்கியுள்ளேன் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் விரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டு, சட்டத்தரணியாகவும் பணியாற்ற வேண்டுமென கோரும், கலாநிதி கு.குருபரன் விவகாரம் அண்மை நாட்களில் சூடு பிடித்திருந்தது.
குருபரனிற்கு இழைக்கப்பட்டது அநீதி என ஒரு தரப்பும், ஒரு அலுவலக நேரத்தில் இன்னொரு சம்பளம் பெறும் தொழிலுக்கு செல்வது மாணவர்களிற்கும், இன்னொரு தொழில் தேடுபவருக்கும் இழைக்கப்படும் அநீதி என்றும் இரு வேறு விதமான கருத்துக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், இன்று யாழில் செய்தியாளர்களை சந்தித்த எம்.ஏ.சுமந்திரனிடமும் இந்த விடயம் குறித்து கேட்கப்பட்டது.
“திரு குருபரன் என்னிடமும் இது விடயமாக பேசி சட்ட ஆலோசனை கோரினார். நான் அவருக்கு சில சட்ட ஆலோசனைகள் வழங்கியுள்ளேன். அதனால் இது குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிப்பது சரியல்ல“ என்றார்.