Ad Widget

வடக்கில் இணைய கல்வி தொலைபேசி இலக்கங்களை திருடி ஆசிரியர், மாணவர்களிற்கு தவறான படங்கள்!!

அதிபர்களுடைய தொலைபோசி இலக்கத்தினை ஹக் செய்து தரவுகளை திருடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் எனைய உறுப்பினர்களுக்கு தவறான பொருத்தமில்லாத தகவல்கள், படங்களை அனுப்பி அதிபர்கள், ஆசிரியர்களின் புனிதத் தன்மைக்கு கலங்கம் ஏற்படுத்தப்படுவதாக வட மாகாண அதிபர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வட மாகாண அதிபர்கள் சங்கத்தின் தலைவர் வே.த.ஜெயந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸ் காரனமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை zoom மற்றும் viber ஊடாக முன்னெடுத்திருந்தோம்.

அந்த மூன்று மாத காலத்திலே அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி நலன் கருதி குறித்த செயலிகளின் ஊடாக கற்றல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தற்போது அதனுடாக எங்களுடைய அதிபர்கள் சங்க உறுப்பினர்களாக இருக்கின்றவர்களும் அத்தோடு இல்லாதவர்களுடைய தொலைபோசி இலக்கத்தினை ஹக் செய்து அதாவது இடைமறித்து எங்களுடைய தரவுகளை திருடி அந்த குழுவுக்குள் இருக்கின்ற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் எனைய உறுப்பினர்களுக்கு தவறான தகவலினை அதாவது பொருத்தமில்லாத தகவல்கள், படங்களை அனுப்பி அதிபர்கள், ஆசிரியர்களின் புனிதத் தன்மைக்கு கலங்கம் ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.

இதன் காரனமாக எங்களுடைய அதிபர்கள், ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும், விரத்திக்கும் ஆளாகியிருக்கின்றார்கள்.

இனிவரும் காலங்களிலும் இப்படியானதொரு நிகழ்வு கல்வி புலத்திலே நடைபெறுமாக இருந்தால் மாணவர் சமுதாயத்தை பெரியதொரு பாதிப்பை ஏற்படுத்தும்.

076 5628297, 076 2138291, 0764909561, 076 69416303 என்ற இலக்கங்களிலிருந்தே இந்த காரியம் நடந்தது.

Related Posts