- Sunday
- May 3rd, 2026
உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் போன்ற அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமே எவரும் தமது வீடுகளில் இருந்து வெளிச்செல்ல வேண்டும். அத்தகைய பொருள்களை கொள்வனவு செய்வதற்கு நடந்து சென்றடைய முடியுமான அருகில் உள்ள விற்பனை நிலையங்களை தெரிவுசெய்ய வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்க்ப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;...
இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்றிரவு 8 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், ஆகிய மாவட்டங்களிலும் கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி,...
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலகுநாதன் செந்தூரன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் அவரது உடலில் அடிகாயங்கள் எவையும் இல்லை என சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலகுநாதன் செந்தூரன், நேற்று மாலை முதல்...
கோரோனா வைரஸ் தொற்றுள்ள அபாய வலயங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் நடைமுறையில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் வரும் மே 4ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்குவரை நீடிக்கப்படுல் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு பிரவேசிப்பது மற்றும் அங்கிருந்து வெளியேறிச் செல்வது...
ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நேரத்தில் வீதிகளில் நடமாடினார்கள் என குற்றம் சாட்டி முதியவர்கள் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் மூர்க்கத்தனமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். [caption id="attachment_101888" align="aligncenter" width="1254"] crime scene tape focus on word 'crime' in cenematic dark tone with copy space[/caption] நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள...
காப்புறுதி நிறுவனத்திடமிருந்து தப்புவதற்காக கொரோனாவை பயன்படுத்திய பெண்ணால் நல்லூர்ப் பகுதியில் நேற்றுக் காலை பரபரப்பு நிலவியது. நுல்லூர்ப் பகுதியில் வசிக்கும் ஒருவர் காப்புறதி நிறுவனம் ஒன்றிலிருந்து காப்புறதியைப் பெற்றுள்ளார் இதற்காக மாதத் தவணை பணம் செலுத்தும் நிலையில் அவரது வீட்டுக்கு நேற்றுக்காலை காப்புறதி நிறுவனத்தினர் பணம் ஆறவீட்டுக்குச் சென்றுள்ளனர். இதன்போது தனது கணவருக்கு அதிக இருமலும்...
நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் இன்று ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் வரும் ஏப்ரல் 27 திங்கட்கிழமை காலை 5.00 மணி வரை நடைமுறையில் இருக்கும். அந்தவகையில் வார இறுதி நாள்களான 25 சனி மற்றும் 26 ஞாயிறு ஆகிய தினங்கள் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக நடைமுறையில் இருக்கும்....
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றவர்களின் குடும்பங்களின் இருவேறு வீடுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருள்கள் திருடப்பட்ட நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வீடுகளுக்கு அண்மையில் உள்ள வீட்டில் வசிப்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். அந்த வீடுகளில் திருடப்பட்ட 9 லட்சத்து 45 ஆயிரம்...
வடக்கிலுள்ள தொழில் முயற்சியாளர்கள் தற்போதுள்ள சூழ்நிலைக்கமைய தமது தொழில் முயற்சிகளை மாற்றியமைக்க முன்வர வேண்டுமென யாழ்ப்பாணம் தொழில்துறை மன்றத்தின் தலைவர் விக்னேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “தற்போது உள்ள அசாதாரண சூழ்நிலையானது இலங்கையில் மட்டுமல்லாது ஏனைய நாடுகளிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது....
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடவடிக்கைகளை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு அமைய பல்கலைக்கழக பிரதான வளாகம் இன்று (வெள்ளிக்கிழமை) இராணுவத்தினரால் தொற்று நீக்கலுக்கு உட்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது பல்கலைக்கழகங்களில்...
வெளிமாவட்டங்களில் சிக்கியுள்ளவர்களை சுகாதார முறைப்படி உறவினர்களுடன் விரைவில் சேர்க்க வேண்டியது கட்டாயமானது என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்களுக்கு உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சூழ்நிலையில் தவறான வழியில் சொந்த இடங்களுக்கு வருவதற்கு அவர்கள் எப்படியும் முயற்சிப்பார்கள் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதனைத் தடுக்க முறையான செயன்முறையில் உறவினர்களிடம்...
ஆனையிறவு ஊடான போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் உள்ள மக்கள் தமது தேவைகளுக்காக அடையாள அட்டையைக் காண்பித்து பயணிக்க கிளிநொச்சி நகருக்கு பயணிக்க முடியும் என கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு...
பிந்திய செய்தி - இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 379 இலிருந்து 414 ஆக உயர்ந்தது. மேலும் 30 கடற்படையினருக்கு கொரோனா – மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 409 ஆக அதிகரிப்பு! வெலிசர கடற்படை முகாம் கடற்படைச் சிப்பாய்கள் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல்...
கொரோனா வைரஸ் மருந்தினை மனிதர்களில் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் பிரிட்டனில் இன்று ஆரம்பமாகியுள்ளன. ஒக்ஸ்போர்ட்டில் இரு தொண்டர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் 800 பேரிற்கு பரிசோதனை மருந்துகளை வழங்கவுள்ளதாகஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு வகையான மருந்துகளை இரு குழுக்களை சேர்ந்தவர்களிற்கு வழங்கவுள்ளதாகவும் ஒரு குழுவினரிற்கு கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கவுள்ளதாகவும் மற்றைய குழுவினரிற்கு மூளைக்காய்ச்சல் வருவதை...
“யாழ்ப்பாணம் அரியாலை தேவாலயத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி இடம்பெற்ற சுவிஸ் போதகர் நடத்திய ஆராதனையில் பங்கேற்ற 346 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அனைவரும் பரிசோதனைகள் இன்று முடிவுறுத்தப்பட்டுள்ளன. அவர்களில் 16 பேருக்கு மட்டும் கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது” என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்....
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது. இங்கு மிக அத்தியாவசியமான சேவைகளுக்காக வருபவர்கள் ஆயத்தங்களோடு வரவேண்டும். இங்கு மிக அவதானமாக நடந்து கொள்ளவேண்டும். ஒன்றுகூடிக் கதைத்தல், ஒருவருக்கு அருகில் செல்லுதல் அவ்வாறான செயற்பாடுகளை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளவேண்டும்” இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி...
இலங்கை கடற்படையினர் 29 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பொலனறுவை பகுதியில் அடையாளம் காணப்பட்ட வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை வீரருடன் தொடர்பினை பேணிய கடற்படை வீரர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 30 கடற்படை வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை,...
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களை கைது செய்வதற்கான அதிகாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார். அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களை பொலிஸார் கைது செய்ய முடியும் என்பதுடன், அவர்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும் தண்டப்பண அறவீடும் வழங்கப்படும் என்றும் அவர்...
பாராளுமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களுக்காக கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவித்தல்களுக்கு அமைய ஏற்கனவே தபால் மா அதிபருக்கு கிடைக்கப் பெற்றுள்ள தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணக்கங்களை இம் மாதம் 27 ஆம் திகதி மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள்...
சீருடையின் ஒரு பகுதியாக பயன்படுத்தக்கூடிய புகைப்படக் கருவியொன்றை பொலிசாருக்கு வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்காக பயன்படுத்தக்கூடிய ஒரு தொகை புகைப்படக்கருவிகள் இலங்கை மொபிட்டல் நிறுவனத்தினால் பொலிஸிடம் கையளிக்கட்டுள்ளது நவீன தொழில் நுட்பங்களை பொலிசார் தமது கடமைகளின் போது பயப்படுத்துவதில் அறிமுகம்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீருடையின் ஒரு பகுதியாக பயன்படுத்தக்கூடிய இந்த புகைப்படக் கருவியின்...
Loading posts...
All posts loaded
No more posts
