- Sunday
- May 3rd, 2026
கோவிட் -19 நெருக்கடி காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்ட போதிலும், 2020 க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான 367,000 விண்ணப்பங்கள் இணையம் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன என கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்த தெரிவித்தார். க.பொ.த. உயர்ந்தார்...
மல்லாகம் நீதிமன்றின் உத்தரவை மீறி மலக்கழிவுகளை ஏற்றி வந்து கல்லுண்டாய் வெளியில் கொட்டுவதற்கு முயற்சித்த தனியார் நிறுவனம் ஒன்றின் வாகனம் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணம்-பொன்னாலை வீதி கல்லுண்டாய் வெளியில் இடம்பெற்றது. நவாலி மக்களின் சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு கல்லுண்டாயில் மலக்கழிவுகளைக் கொட்டுவதற்கு...
நாட்டில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக இறப்புக்கள் பதிவானால் சடலங்களை அப்புறப்படுத்துவதற்கான 1000 உறைகளை செஞ்சிலுவைச் சங்கத்திடம் சுகாதார அமைச்சு கோரியிருக்கிறது. கடந்த 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சினால் செஞ்சிலுவைச் சங்கத்திடம் கடிதம் மூலம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகளுக்கான மேலதிக செயலாளர்...
சுகாதார கட்டுப்பாடுகளை மீறி மன்னாருக்கு சென்று பெண் ஒருவரை அழைத்து வந்தார் என்ற குற்றச்சாட்டில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். கடந்த வாரம் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. அதுதொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது இந்த...
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பாடசாலைகள் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அதிபரின் வழிகாட்டலில் மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர சிறப்புச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையிலான மாணவர்களுக்கு பாட ரீதியாக 140 செயலட்டைகள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர்களினால் தயாரிக்கப்பட்டு கல்லூரியின் http://www.jhc.lk/ என்ற இணைத்தளத்தில்...
நாடாளுமன்ற வளாகத்தினை சுற்றி ஆயுதம் ஏந்திய இராணுவம் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதையும் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் எதற்கு என்றும் முன்னாள் அமைச்சர்கள் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். நாடாளுமன்ற பொதுச்செயலாளருக்கு முன்னாள் அமைச்சர்களான எரான் விக்ரமரத்ன மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் எழுதிய கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் “நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு...
நாளை (27) திங்கட்கிழமை முப்படையினர் முகாம்களுக்கு திரும்புதற்கு வசதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களுக்கு நாளைய தினம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவிருந்த நிலையில்குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையைில், இந்த மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (28) அதிகாலை 5.00...
மக்களுக்கும் நாட்டுக்கும் நல்வாசி வேண்டி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பங்குபற்றுதலுடன் பிரித் பாராயண நிகழ்வொன்று வரலாற்று முக்கியத்துவமிக்க கதிர்காமம் புனித பூமியில் நேற்று (25) இரவு இடம்பெற்றது. கதிர்காமம் புண்ணியபூமிக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள் கதிர்காமம் ரஜமகா விகாரையின் விகாராதிபதியும் ருகுனு மாகம்பத்துவையின் தலைமை சங்கநாயக்கருமான சங்கைக்குரிய கொபவக தம்மின் தேரர் அவர்களை சந்தித்து...
எலிக் காய்ச்சலினால் உயிரிழந்த கடற்படை அதிகாரியின் இறுதி கிரிகை, கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர் போன்று இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக இலங்கை கடற்படையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு எலிக் காய்ச்சல் நோய் நிலைமையின் காரணமாக கொழும்பு கடற்படை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்றுவந்த கடற்படை அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். எலிக் காய்ச்சல் நோய் நிலைமையின் காரணமாக கொழும்பு...
ஏழாலையில் எரிகாயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. [caption id="attachment_101888" align="aligncenter" width="1254"] crime scene tape focus on word 'crime' in cenematic dark tone with copy space[/caption] மயிலங்காடு முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாகவே இன்று காலை சடலம் மீட்கப்பட்டது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த நடேசமூர்த்தி...
யாழ்பாணம், ஆனைப்பந்தி- நாவலர் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் வீதியில் சரிந்து வீழ்ந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று மாலை 6.25 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் ஓட்டுமடத்தைச் சேர்ந்த தம்பு வாமதேவன் (வயது-68) என்பவரே உயிரிழந்தவராவார். உறவினர் வீடு ஒன்றுக்குச் சென்று திரும்பிய நிலையிலேயே முதியவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தையடுத்து 1990...
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட இடங்களில் மாத்திரமே அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் அத்தியாவசிய பொருள்களைக் கொள்வனவு செய்ய வெளியில் செல்ல முடியும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண விளக்கமளித்துள்ளார். எனினும் அவசர நோய்க் காரணங்கள் மற்றும் நோய்த் தொற்றுத் தொடர்பான மருத்துவ ஆலோசனையைப் பெற, கிளிக் அட்டைகளுடன் வைத்தியசாலைகளுக்கு செல்வோரிடம் இந்த...
கிளிநொச்சி, இராமநாதபுரம் கிழக்கு அழகாபுரி அ.த.க.பாடசாலையினை கிளிநொச்சி இரணைமடு விமானப் படையினர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் பொறுப்பேற்றுள்ளனர். இரணைமடு விமானப்படை முகாமின் ஒரு பகுதி தற்போது கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமையால் அங்குள்ள விமானப் படையினர் தற்காலிகமாக தங்குவதற்கு எனத்தெரிவித்து குறித்த பாடசாலையினை பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விமானப்படையின் அதிகாரிகள் வடக்கு...
கொரோனோ தொற்று பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், “வெலிசறை கடற்படை முகாமிலிருந்து வீடு திரும்பிய சிப்பாய்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி வருவதனால் அவர்கள் விடுமுறையில் சென்ற மாவட்டங்கள் நான்கு என மொத்தமாக கொரோனா...
யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் வெளிமாவட்ட மாணவர்களின் முழுச் செலவையும் ஏற்றார் தியாகி அறக்கொடை நிலையத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரன். கொரோனா தொற்று ஊரடங்கு சட்டம் காரணமாக சொந்த இடங்களுக்குப் போகமுடியாமல் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த வெளிமாவட்ட மாணவர்களின் உணவுத் தேவையையும் அவர்கள் தமது இடங்களுக்குச் செல்வதற்கான செலவுகளையும் இவரே ஏற்றுள்ளார். அதாவது, மட்டக்களப்பு மற்றும் மலையக...
இதுவரை 95 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இவர்களில் 68 பேர் வெலிசர முகாமில் இருந்தவர்கள் எனவும் ஏனைய 27 பேரும் விடுமுறைக்காக சென்றிருந்தவர்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 477 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மே மாதம் 04ஆம் திகதி திங்கள் அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 திங்கள் அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு மீண்டும்...
யாழ்ப்பாணம் மாநகரப் பகுதியில் உள்ள வீடொன்றில் கலாசார சீரழிவு இடம்பெற்று வந்த நிலையில் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்த இரு பெண்களையும் ஆண் ஒருவரையும் அந்த வீட்டிலையே தனிமைப்படுத்த பொலிஸார் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர். யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் மனோகரா தியேட்டருக்கு...
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், ஏனைய கல்வி நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் மீண்டும் அறிவிக்கும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்க்பபட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம்...
கோவிட் – 19 வைரஸ் காணப்படுகின்ற காலப்பகுதியில் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தமது சேவைகளை மீண்டும் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. இவ்வாறு மீளவும் சேவைகளை ஆரம்பிக்கும்போது கோவிட்-19 வைரஸ் மேலும் பரவக்கூடிய ஆபத்து ஏற்படாத வகையில், அலுவலக சூழலினதும், தமதும், மக்களுடையதும் பாதுகாப்பை ஆகக்கூடிய மட்டத்தில் பேண வேண்டியது அனைவரதும் பொறுப்பு என்பதை கவனத்திற் கொள்ள...
Loading posts...
All posts loaded
No more posts
