யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நினைவுகூரல்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவுகூரல் நிகழ்வு யாழில் இடம்பெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை 3.30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டு ஊடகத் துறைக்காக உயிர்நீத்த ஊடகவியலாளர்களுக்கு தமது அஞ்சலியினை செலுத்தினர். ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005...

அரசாங்கம் உடனடியாக பதிலளிக்க வேண்டும்- தமிழ் சிவில் சமூக அமையத்தின் அறிவிப்பு

கொவிட்-19 அபாயத்தை முறையாக எதிர்கொள்வதற்கு பொது நலனை முன்னிறுத்த அரசாங்கத்திடம் 8 கேள்விகளுக்கான பதிலை கேட்டுநிற்கிறது தமிழ் சிவில் சமூக அமையம். தமிழ் சிவில் சமூக அமையத்தின் இணைப் பேச்சாளர்களான அருட்பணி வீ. யோகேஸ்வரன் மற்றும் கலாநிதி குமரவடிவேல் குருபரன் ஆகியோரினால் இந்தக் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த அறிவிப்பில், “ஒரு பொது சுகாதார அபாயக் காலப்பகுதியில்...
Ad Widget

இன்று இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் நான்காம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணி வரை தொடர்ந்து அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று இரவு முதல்...

யாழ்ப்பாண படையினர் கிருமி ஒழிப்பு நடவடிக்கையில்!!

covid-19யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51, 52 மற்றும் 55 ஆவது படைப் பிரிவில் உள்ள இராணுவத்தினரால் சுன்னாகம், கொகுவில், சன்னகன்னை, தெல்லிப்பளை, நல்லூர், உடுவில், திருநல்வேலி, வல்வட்டிதுறை, கொடிகாமம், சாவகச்சேரி, அச்சுவேலி, நெல்லியடி, பளை, கோயில்வயல், ஐய்யகச்சி, முகாவில், முல்லியன், அம்பன், வெத்திலைகேணி, போக்கருப்பு மற்றும் மருதங்கேனி பிரதேசங்களில் பொது இடங்களில்...

யாழ். மாநகர சபை அமர்வு: தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி வெளிநடப்பு

யாழ். மாநகர சபையின் அமர்வு மாநகர சபையின் பிரதி முதல்வர் ஈசன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. மாநகர சபையில் உள்ள சபை மண்டபத்தில் சமூக இடைவெளியைப் பேணி கூட்டத்தினை நடத்துவதற்கு போதுமானதாக இல்லாத காரணத்தினால் இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் அமர்வு இடம்பெற்றுள்ளது. கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது, அதிகாரம் இல்லாத குறித்த கூட்டத்தில்...

வட்டுக்கோட்டையில் ஊரடங்கு வேளையில் 4 பாடசாலைகளில் திருட்டு; மூவர் சிக்கினர்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 ஆரம்ப பாடசாலைகளின் அலுவலகங்களை உடைத்து பெறுமதியான பொருள்களைத் திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூவரை வரும் மே 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட திருடப்பட்ட பொருள்கள் நீதிமன்றில் சான்றுப்பொருள்களாக பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டன. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுக்கோட்டை...

யாழ்ப்பாணம் உள்பட 21 மாவட்டங்களில் தற்போதைய ஊரடங்கு நடைமுறை வெள்ளிவரை தொடரும்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த, நாட்டின் ஏனைய 21 மாவட்டங்களில் இன்றிரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் நேற்று (28) காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது. தினமும் அதிகாலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படும்...

கடன் தவணைப் பணம் வசூலிப்பதில் நிதி நிறுவனங்கள் – வாழ்வாதாரம் இல்லாதோர் பாதிப்பு!

நுண்நிதக் கடன்கள் மற்றும் நிதி நிறுவன கடன்களை வசூலிப்பதற்கு ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து நெருக்கடிகளை தருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண கால பகுதியில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் மக்கள் பெற்ற கடனுகளுக்கான தவணை கட்டணங்களை மூன்று மாத காலத்திற்கு மீள பெற வேண்டாம் என அரசினால் மத்திய வங்கி ஊடாக...

நான் வாழப்போகும் சில நாட்களாவது மகனுடன் வாழ விடுங்கள்!- முருகனின் தாய்!!

“முருகனின் நினைவோடே அவரது தந்தை மரணித்துவிட்டார். நான் வாழப்போகும் சில நாட்களாவது எனது மகனோடு வாழ வேண்டும் என ஏங்குகிறேன்” என தமிழக சிறையில் வாடும் முருகனின் தாயார் தெரிவித்துள்ளார். இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஈழத் தமிழரான முருகனின் தந்தையார் நேற்று அதிகாலை சாவகச்சேரி வைத்திசாலையில் காலமானார். பளை...

தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே வெளியில் செல்ல முடியும் – க.மகேசன்

யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே மக்கள் வெளிச்செல்ல முடியும் என அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(செவ்வாய்க்கிழமை) தேசிய அடையாள அட்டையின் 3 அல்லது 4 இலக்கத்தை கொண்டவர்கள் மட்டுமே வெளிவர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “யாழ்.மாவட்டத்தில் இன்று ஊடரங்கு...

தனிமைப்படுத்தல் மையம்: கோப்பாய் கல்வியியற் கல்லூரி கைவிடப்பட்டது- யாழ். பல்கலை வளாகம் குறித்து ஆராய்வு?

யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள இராணுவ முகாம்களுக்கு விடுப்பை முடித்து கடமைக்குத் திரும்பும் படையினரை தங்கவைத்து பரிசோதனைகளை முன்னெடுக்கும் வசதி கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் இல்லை எனத் தெரிவித்து அங்கிருந்து படையினர் வெளியேறியுள்ளனர். எனினும் தனிமைப்படுத்தல் நிலையத்தை (இராணுவத்தால் கூறப்படும் போக்குவரத்து மையம்-Transit Centre) திருநெல்வேலி பாற்பண்மை பகுதியிலுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ பீடத்தின் புதிய...

தந்தை செல்வாவின் 43 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகரான தந்தை செல்வாவின் 43 ஆவது நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 26 ஆம் திகதி தந்தை செல்வாவின் நினைவு தினமாக இருந்தாலும் நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் காரனமாக இன்று இடம்பெற்றுள்ளது. யாழ். தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை...

தங்கநகை அடகு முற்பணத்துக்கு அதிகூடிய மாதாந்த வட்டி ஒரு சதவீதம் – மத்திய வங்கி

நாட்டில் கோரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக எழுந்துள்ள பொருளாதார நிலமைகளைக் கருத்திற்கொண்டு தங்க நகை அடகு முற்பணத்துக்கான அதிகூடிய மாத வட்டியாக ஒரு சதவீதத்தை இலங்கை மத்திய வங்கி நிர்ணயித்துள்ளது. இந்த புதிய வட்டிக் குறைப்புநேற்று திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரவேண்டும் என்று அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளிடமும் இலங்கை மத்திய வங்கி...

கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன!!

2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (திங்கட்கிழமை) மாலை வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் பெறுபேறுகள் பதிவேற்றப்படுகின்றன என்றும் பதிவேற்றியவுடன் முடிவுகளைப் www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்கு சென்று பார்வையிட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான...

யாழ்.மாநகரில் இலத்திரனியல் கடைகள் உள்பட மூன்று இடங்களில் திருட்டு!!

யாழ்ப்பாணம் மாநகரில் வெவ்வேறு இடங்களில் பெறுமதியான இலத்திரனியல் பொருள்களைத் திருடியமை மற்றும் திருடப்பட்ட பொருள்களை வாங்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் எட்டுப்பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து திருட்டுப் பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பொம்மைவெளி, நாவாந்துறை மற்றும் கஸ்தூரியார் வீதி ஆகிய இடங்களைச் சேர்ந்த 8 சந்தேக நபர்களே நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால்...

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி முப்படையினரிடம் ஒப்படைப்பு!!

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் முப்படையினரை தனிமைப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளது. அந்தக் கல்லூரியின் மாணவர் விடுதிகள் இராணுவத்தினரால் கோரப்பட்டதையடுத்து வழங்கப்பட்டுள்ளது. கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதியுடன் இடைநிறுத்தப்பட்ட நிலையில் விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் வீடு திரும்பினர். இந்த நிலையில் அங்கு முப்படையினரைத் தனிமைப்படுத்துவதற்கான...

யாழில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் கைது!

யாழ்.அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அத்தியடி பிள்ளயார் ஆலயத்தில் நேற்று சதுர்த்தியை முன்னிட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அது தொடர்பக்க அறிந்து கொண்ட பொலிசார் ஆலயத்திற்கு விரைந்து பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 17 பேரை கைது செய்து யாழ்ப்பாண...

மக்கள் வெளியில் நடமாடுவது முற்றாகத் தடை – அஜித் ரோஹன

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்ந்து மக்கள் வெளியில் நடமாடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். கொழும்பில் ஊடங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “ஊரடங்கு தளர்த்தப்பம் பிரதேசங்கள், மற்றும் ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில் சுகாதார நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படல் வேண்டும். மாவட்டங்களுக்கிடையில் பயணங்களை மேற்கொள்ளுதலோ, அத்தியாவசியத் தேவையின்றி...

யாழிற்கு வருவோருக்கான பி.சி.ஆர். பரிசோதனை யாழ்.மாவட்டச் செயலகத்தில் முன்னெடுப்பு!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தோருக்கான கொரோனா பி.சி.ஆர். பரிசோதனை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெறுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். கொழும்பிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு ஏற்றிவந்த லொறிகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறித்த பரிசோதனை இன்று (திங்கட்கிழமை) யாழ். மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள்...

யாழில் வீடொன்றில் தங்கியிருந்த பெண்களுடன் தொடர்பில் இருந்த ஆண்கள் குறித்து விசாரணை!

யாழ்ப்பாணதத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வீடொன்றில் தங்கியிருந்த பெண்களுடன் தொடர்பில் இருந்த ஆண்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.நாவலர் வீதியில் உள்ள வீடொன்று, அதன் உரிமையாளரால் பிறிதொரு நபருக்கு வாடகைக்கு வழங்கப்பட்டது. வாடகைக்குப் பெற்றவர் அதனை தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிடமாக வாடகைக்கு வழங்கி வந்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் குறித்த...
Loading posts...

All posts loaded

No more posts