- Saturday
- May 2nd, 2026
எதிர்வரும் 30 நாட்களுக்குள் உலக சுகாதார ஸ்தாபனம் எடுக்கும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லையென்றால் அமெரிக்காவின் நிதியுதவிகளை உலக சுகாதார ஸ்தாபனம் இழக்க வேண்டி வரும் என காலக்கெடுவிதித்து எச்சரிக்கை விடுத்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப். இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடித்திலேயே...
ஏப்ரல் 16 முதல் மே 31 வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் ஒவ்வொரு சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் ஜூலை 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர, அதிசிறப்பு வர்த்தமானி ஊடாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த விதிமுறைகள் மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் கீழ் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் வழங்கிய அனைத்து சாரதி...
நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்திகளில் உண்மையில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து பாதுகாப்பு செயலாளர் அறிக்கையொன்றினையும் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளார். நாட்டின் அனைத்து உளவுத்துறை பிரிவுகளும் ஓரிடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் உள் மற்றும் வெளி அச்சுறுத்தல்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக குறித்த உளவுத்துறை பிரிவு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புச்...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1020 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 442 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவருவதாகவும் 569 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் திருநெல்வேலி, முடமாவடிப் பகுதியில் மக்களின் குடியிருப்புக்குள் இன்று அதிகாலை 3 மணியளவில் முதலை ஒன்று புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த பகுதியில் புகுந்த முதலை தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கிய போதும் காலை 6 மணியளவிலேயே பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர். இந் நிலையில் குறித்த இடத்திலிருந்து முதலை இராமலிங்கம் வீதியில்...
யாழ், செம்மணிப்பகுதியில் ஏ9 வீதியோரமாக தூக்கில் தொங்கியபடி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். செம்மணிப்பகுதியில் இன்று (19) காலை சடலத்தை அடையாளம் கண்ட பொதுமக்கள் சாவகச்சேரி பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், தற்போது பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏ9 வீதியோரமாக உள்ள அரச மரமொன்றில் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சாவகச்சேரியில் புகைப்பரிசோதனை...
கொவிட்-19 வைரஸ் தொற்றினால் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததினால் , பாடசாலை பரீட்சாதிகளில் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் அனுமதிக்கான விண்ணப்பங்களை, உறுதிசெய்வதற்கு மே 20, 21, 22 ஆகிய தினங்களில் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்களை கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு, சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய, சுகாதார பாதுகாப்பு முறைகளை...
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான நினைவுகளை இந்திய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். மேலும் அமைதிக்கான முயற்சிகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்ட போதிலும் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதியன்று பிரபாகரன் இறந்துவிட்டார் என்றும் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். குறித்த பதிவில்...
இடைநிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. நாளை(புதன்கிழமை) முதல் இந்த சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய வாரநாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 வரை சேவைகள் வழங்கப்படவுள்ளதாகவும், முன்கூட்டியே தொலைபேசி மூலம் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனப் பதிவு,...
யாழ்ப்பாணம் பலாலி விமானப்படைத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த 98 பேர் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டனர். கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை, வாழைத் தோட்டத்தில் கோரோனா தொற்று பரவல் ஏற்பட்டதால் அந்த இடத்தைச் சேர்ந்த 98 பேர் கடந்த மாதம் 22ஆம் திகதி பலாலி விமான படை முகாமின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில்...
2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுவித்தலைப் புலிகளை எவ்வாறு அழித்தார்களோ அதேபோல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் அளித்து விட வேண்டும் என சிங்கள பேரினவாத சக்திகளும் சில தமிழ் அரசியல் சக்திகளும் பலமாக செயற்பட்டு வருகின்றன என அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...
வடக்கில் அவசியமற்று கூட்டம் கூடுவதை தடுக்க தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவித்தெள்ளது. நேற்றயதினம் மாலை இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்த பல்வேறு கெடுபிடிகள் பொலிஸார் மற்றும் படையினரால் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில் கோவிட் – 19 நோய்த்...
அம்பன் புயல் தாக்கத்தினால் கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் குறித்த புயல் தாக்கத்தினால் பள்ளிக்குடாவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும், கௌதாரி முனையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த...
யாழ். குடாநாட்டில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் அதிகளவான வீதி விபத்துக்கள் மீண்டும் ஏற்பட ஆரம்பித்துள்ளதாக யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே த.சத்தியமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார். தெடர்ந்து த.சத்தியமூர்த்தி கருத்து தெரிவிக்கையில், குறிப்பாக உந்துருளியில் பயணம் செய்யும் இளைஞர்கள் கடுமையான வீதி விபத்துக்கு...
யாழ்ப்பாண மாவட்டத்தில் 1 இலட்சத்து 35 ஆயிரத்து 113 குடும்பங்களுக்கு முதல்கட்டமாக 5ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரணம் பெற்றுக்கொள்ளும், 76 ஆயிரத்து 32 பயனாளிகளுக்கும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள 11 ஆயிரம் குடும்பத்தினர் உட்பட 1 இலட்சத்து 35 ஆயிரத்துக்கு 113...
இனப்படுகொலையாளிகள் மீண்டும் அரியணையில் ஏறுவதற்கும் என்றுமில்லாதவாறு சிங்கள பௌத்த பேரினவாதம் திரட்சி பெறுவதற்கும் நாம் விட்ட தவறுகளே காரணம் என முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ். நல்லூர் வீதியில் அமைந்துள்ள தனது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் தீபம் ஏற்றிய...
ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இலங்கையின் 300 – க்கு மேற்பட்ட இணையத்தளங்கள் மீது இன்று காலை சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு தமிழீழம் சைபர் போர்ஸ் எனும் அமைப்பு உரிமை கோரியுள்ளது. மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் கிரு ஊடகம், அமைச்சரவை அலுவலக குடியரசு...
சுகாதார அதிகாரிகள், முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடிந்தது என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் கொரோனா தொற்றுநோயை நீண்ட காலத்திற்கு முன்பே முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்த அவர் இது ஒரு சாதகமான அறிகுறியாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார். இந்த...
அம்பன் சூறாவளி வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “AMPHAN” (உச்சரிப்பு UM-PUN) என்ற பாரிய சூறாவளியானது பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று (2020 மே 18ஆம் திகதி) அதிகாலை 02.30 மணிக்கு மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 740 கி.மீ தூரத்தில்...
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் 11ஆம் ஆண்டு நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. இன்று காலை அனுமதிக்கப்பட்ட உறவுகள் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்று கூடினர். காலை 10 மணியளவில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான பிரதான நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது. உறவுகளை இழந்தவர்கள், கண்ணீர் விட்டும், கதறியும், முள்ளிவாய்க்கால் மண்ணில் அழுது புரண்டு தமது...
Loading posts...
All posts loaded
No more posts
