- Saturday
- May 2nd, 2026
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த வழங்கிய கட்டளையை மீளப்பெற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் கட்டளையிட்டது. “தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்துமாறு கோரப்பட்டுள்ள 11 சந்தேக நபர்களுக்கும் நோய் அறிகுறிகள் உள்ளதாக மருத்துவ அறிக்கையை பொலிஸார் சமர்ப்பிக்கவில்லை. அதனால் நோய் அறிகுறி இல்லாதவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தினால் அவர்கள் மன உலைச்சலுக்கும் வேறு...
யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் பொலிஸாரின் தடையையும் மீறி வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிடவர்கள், முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் நடைபெறவிருந்த முள்ளிவாய்க்கால் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, யாழ்ப்பாணத்திலிருந்து இருந்து இன்று காலை முல்லைத்தீவு செல்வதற்காக யாழ்.மன்னார் வீதியூடாக பயணித்த போது...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரை வீடுகளில் தனிமைப்படுத்த நீதிமன்றம் கட்டளையிட்டது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் அணைத்து , மன்றிடம் விண்ணப்பம் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உள்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாள்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி 14...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை செம்மணியில் நடத்துவதற்கு முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், முயற்சித்த போதும் பொலிஸார் அனுமதிக்கவில்லை. நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதாக பொலிஸார் தெரிவித்ததால், அதனை மதித்து நிகழ்வை நடத்தவில்லை எனத் தெரிவித்து விக்னேஸ்வரன், அங்கிருந்து புறப்பட்டார். இந்தச் சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு...
முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு தினமான இன்று (18)உயிர் நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் மலர்த்தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தபட்டுள்ளது. முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்த அஞ்சலி நிகழ்வை மேற்கொண்டார். "எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின்...
வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு திருப்பி அனுப்ப்பபட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11 ஆவது நினைவுநாளான இன்று கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து முள்ளிவாய்க்காலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே வடமாகாண...
விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்து வடக்கு கிழக்கில் எவரும் முள்ளிவாய்க்கால் நினைவுரலை அனுஷ்டிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, இறுதி யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர வேண்டுமெனில் உரிய பிரதேசங்களில் பொலிஸ் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்பதை அவதானிக்க புலனாய்வுத்துறை மற்றும் மேலதிக...
யாழ்ப்பாணம் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகம், உதயன் பத்திரிகை நிறுவனம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரின் இல்லத்தில் இன்று திங்கட்கிழமை நிகழ்வுகள் எதனையும் நடத்த முடியாதவாறு நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். “யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் தலைவர் மாவை சோ....
நாடுமுழுவதும் அபாயகரமான கோவிட் -19 நோயைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் பொதுமக்களை ஒன்று திரட்டி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தடை விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸார் தாக்கல் செய்த மனு மீதே இந்தக் கட்டளையை நீதிமன்றம் ஆக்கியுள்ளது. மனுவில் தமிழ்...
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வில் பங்கேற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினா்கள் 11 பேரையும் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுபதிகாரி பிரசாத் பெர்னாண்டோவால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு அமைய இந்த...
இறுதிப் போரில் உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் தீபங்கள் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று காலை இந்த நிகழ்வு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் அவலத்தின் பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி தாயகம் முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் -19 நோய்ப் பரம்பலைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி நிகழ்வுகளைத்...
பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞனை வைத்தியசாலைக்கு சென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் பார்வையிட்டார். இன்று அதிகாலை ஒரு மணியளவில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது -23) என்ற இளைஞனே கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்று நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நாகர் கோவில் மகா வித்தியாலயம் முன்பாக நடைபெற்றது. 1995ஆம் ஆண்டு 9ஆம் மாதம் 22ஆம் திகதி இலங்கை விமானப்படையின். குண்டு வீச்சுக்கு இலக்காகி நாகர் கோவில் மகா வித்தியாலய மாணவர்கள் 21 பேர்...
நாட்டின் அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக மத்திய விவசாய அமைச்சு மற்றும் மத்திய விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் வட மாகாண விவசாயத் திணைக்களத்தினால் அமுல்ப்படுத்தப்படும் பத்து இலட்சம் வீட்டுத்தோட்டத்தினை உருவாக்கும் 'சௌபாக்கிய வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்ட விதைப்பொதிகள் வழங்குதல்' நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவருகின்றது. யாழ்.மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தினால் 14500 நாற்று விதைப் பைக்கட்களும் மாகாண...
யாழில் கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களுக்கு வைரஸ் தாக்கம் சிறிதளவில் காணப்படுவதால் தொடர்ந்தும் தனிமைப்படுத்தி மீளவும் பரிசோதனை செயப்பட உள்ளதாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழில் நேற்றையதினம் 27 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. இதில் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6...
நாட்டில் கடந்த காலங்களில் வங்கிகளில் இருந்து கடன்பெற்று அவற்றை திருப்பிச் செலுத்தாதவர்களில் அதிகமானவர்கள் ஏழைகளன்றி பணக்காரர்களேயாகும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, வங்கிகளின் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளார். கோரோனாவுக்கு பிந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான நிகழ்ச்சித்திட்டத்திற்கு வங்கித் துறையை பங்குதாரராக்கிக் கொள்ளுதல் மற்றும் அதன்போது வங்கித் துறையில் உருவாகியுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக நேற்று (14)...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பண்பாட்டு நுழைவாயிலில் நினைவேந்தல் தீபங்கள் ஏற்றப்பட்டன.இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றது. அதனை அறிந்த யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெனாண்டோ, கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.வீரசிங்க ஆகியோர் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் சம்பவ இடத்துக்கு...
யாழ்.பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது -22) என்ற இளைஞனே கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் படுகாயமடைந்துள்ளார். “மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக காவல் கடமையில் ஈடுபட்டடிருந்த...
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு நாள் வரும் மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில், நினைவு நாளன்று பயன்தரு மரங்களை நாட்ட உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். இதனால், மக்களின் ஒவ்வொருவரின் வீடுகளிலும் சுற்றுப் புறங்களிலும் பயன்தரு மரங்களை அன்றைய தினம் காலையில் நாட்டுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்....
முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் வாரத்தின் இரண்டாவது நாள் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) நவாலி சென் பீற்றர் தேவாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் இடம்பெற்றது. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த போரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கான நினைவேந்தல் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகிறது. இதன்படி இந்த ஆண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் நேற்று ஆரம்பமாகிய நிலையில்,...
Loading posts...
All posts loaded
No more posts
