Ad Widget

மாடுகளைக் கொலை செய்வதைத் தடுக்கும் பிரதமரின் முன்மொழிவுக்கு ஆளும் கட்சி ஒப்புதல்!!

இலங்கையில் மாடுகளை வெட்டுவதைத் தடுக்கும் திட்டத்திற்கு ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ச, இலங்கையில் மாடுகளைக் கொலை விதிக்கும் சட்டத்தைக் கொண்டு வருதற்கான முன்மொழிவை முன்வைத்தார். அதற்கு ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழு ஒப்புதல் வழங்கியது என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

“கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரை பாராட்டினார்கள்.

உத்தியோகபூர்வ முன்மொழிவு எதுவும் பிரதமரால் சமர்ப்பிக்கப்படவில்லை, ஆனால் விரைவில் இந்த முன்மொழிவை முன்வைக்க அவர் எதிர்பார்க்கிறார்.

மாடுகளைக் கொலை செய்வதனைத் தடுக்கும் திட்டத்தை எப்போது, எப்படி சமர்ப்பிக்க வேண்டும் என்பதை பிரதமர் தீர்மானிப்பார்” என்றும் அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

இதேவேளை, மாட்டிறைச்சி இறக்குமதிக்கு தடை விதிக்கப்படாது என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இறைச்சி பிரியர்களுக்கு நிவாரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts