Ad Widget

முன்னணியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் கட்சியை விட்டு தற்காலிகமாக இடைநிறுத்தம்!!

எமது இயக்கத்தின் அரசியல் கொள்கைகளிற்கு முரணாக நடந்ததால் உங்களை கட்சியை விட்டு தற்காலிகமாக இடைநிறுத்துகிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் மகேந்திரன் மயூரனிற்கு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை கடிதம் அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில் பின்வரும் காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

| ஜனாதிபதித் தேர்தலை பகிஸ்கரிக்கும் முடிவை எமது அரசியல் இயக்கம் எடுத்திருந்த நிலையில் அப்போது ஜனாதிபதி வேட்பாளர்களும் ஒருவரான சஜித் பிரேமதானவை ஆதரிக்கும் பதிவுகளை தங்களின் உத்தியோகபூர்வ முகநூலில் பகிர்ந்திருந்தமை

2 கொரோனா காலத்தில் இராணுவத்தினர் செய்த உதவிகளுக்காக வர்த்தகர் ஒருவர் இனப்படுகொலை புரிந்த சிறிலங்கா இராணத்தை வெள்ளையடிக்க முற்பட்டு அறிக்கை வெளியிட்டிருந்தார். குறித்த வர்த்தகரது அறிக்கையானது. சிறிலங்கா அரசுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதி விசாரணையை கோரும் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தை பாதிக்கும் என்பதனை கட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் எமது அரசியல் இயக்க உறுப்பினர்கள் மேற்கொண்ட பதிவுகளை கொச்சைப்படுத்தியும், அந்த உறுப்பினர்களை தரக்குறைவாகவும், இராணுவத்தை வெள்ளையடித்த வர்த்தருக்கு சார்பாகவும் பதிவுகளையும் இட்டு குறித்த வர்த்தகரின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தியதோடு மைது அரசியல் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரளாகவும் செயற்பட்டுள்ளமை.

3.எமது அரசியல் இயக்கத்துக்கு அபர்த்தியை ஏற்படுத்தும் முகமாக திட்டமிட்டு தொடந்தும் முகதால் வாயிலாக செயற்பட்டு வருகின்றமை,

போன்ற காரணங்களை குறிப்பிடப்பட்டுள்ன.

Related Posts