- Friday
- May 1st, 2026
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த புதிய சுகாதார பணிபுரைகளில் திருத்தங்களை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததோடு பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் நான்கு கட்டங்களுக்கு அமைவாக பாடசாலைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டு கொரோனா...
பாலியல் தொழிலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் தென்னிலங்கை பெண்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர் முன் வீதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதியில் தனித்திருந்து இரு பெண்களை யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று(வியாழக்கிழமை) கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...
பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் ஆரம்பித்தது முதல் தற்போது வரை நாடு மிக சுறுசுறுப்பாகச் செயற்படுவதால் சமூகத்தில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டால்கூட கொரோனா பரவுவதற்கான ஆபத்து அதிகளவில் காணப்படுவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தனது அலுவலகத்திலிருந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அந்த பிரிவின் தலைவர் வைத்தியர் சுதாத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில்...
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். பதவிப் பிரமாண நிகழ்வு நேற்று (12) கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகுல்மடுவ மண்டபத்தில் இடம்பெற்றது. சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணித்த...
மாவை சேனாதிராசாவின் கட்சி தலைமையை நாம் கைப்பற்ற முயலவில்லை. ஊடகங்களே அப்படியொரு செய்தியை உலாவவிட்டுள்ளன. இதனால் மாவை சேனாதிராசாவிற்கு மனவருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்காக நானும், சிறிதரனும் மனம் வருந்துகிறோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். பருத்தித்துறையில், தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 21ஆம் திகதி அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களுடன், மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, அனுரகுமார திசாநாயக்க,...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. உயர்தர புதிய, பழைய பாடத்திட்ட பரீட்சைகளுக்கான நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்கான அட்டவணைகளை கல்வித் திணைக்களத்தின் இணையத்தளமான...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த ஆறு பேரில் மதிப்பீட்டுக் குழு மற்றும் பேரவையின் மதிப்பீடுகளின் அடிப்படையில் மூவரின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக ஜனாதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும், கணிதப் புள்ளி விபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜாவின் பெயர் முதலாவதாக பெயரிடப்பட்டுள்ளது....
இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொள்கை அடிப்படையில் ஒருமித்த நிலைப்பாட்டை கூட்டமைப்பு முன்னிறுத்தினால் அதனுடன் இணைந்து செயற்பட தாம் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வாரம் ஒரு...
தேசியப் பட்டியல் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்ட விவகாரத்தில் கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளது. கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்தக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர்...
யாழ்ப்பாணம் நீர்வேலி வடக்கு பகுதியில் வானில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி கோப்பாய் பொலிஸாரால் நேற்று மாலை மல்லாகத்தில் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் 4 பேர் கொண்ட கும்பல் 20 வயது மதிக்கதக்க யுவதி ஒருவரை கடத்திச் சென்றதாக அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் நியமனம் தொடர்பில் சம்மந்தமில்லாத தரப்பினர் தலையிட்டதும், அது தொடர்பாக அவர்கள் நடந்துகொண்ட விதமுவே அதிருப்தியளிப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். மேலும் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரவிராஜ் சசிகலாவையே பிரேரிக்க இருந்ததாகவும், எனினும் கட்சியினதும் மற்றும் பலரது அறிவுரைகளின்படியே தான்...
ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சர்களின் பதவிப் பிரணமான நிகழ்வு சற்று முன்னர் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி முன்னிலையில் ஆரம்பமானது. இதன்போது இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் நியமனம் பெற்றனர். அவர்களின் முழு விபரம்: *உள்நாட்டலுவல்கள், உள்நாட்டு பாதுகாப்பு...
திரு.டக்ளஸ் தேவானந்தா மீன்பிடி தொழில்துறை அமைச்சராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். கண்டி மகுல்மடுவ மண்டபத்தில் தற்பொழுது நடைபெறும் புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர் அமைச்சராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். கண்டி தலதாமாளிகையில் தற்போது இடம்பெற்று வரும் அமைச்சர்களுக்கான பதவி பிரமான நிகழ்வின் போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஏனைய மாவட்டங்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களாக கொழும்பு – பிரதீப் உதுகொட கம்பஹா மாவட்டம் – சமன் பிரதீப் விதான களுத்துறை – சஞ்சீவ எதிரிமான்ன...
இந்தியாவிலிருந்து சட்டத்துக்குப் புறம்பாக படகுமூலம் நாட்டுக்கு வருகை தந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (ஓகஸ்ட் 11) செவ்வாய்கிழமை உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி பாலகிருஷ்ணன் (வயது-50) என்பவரே நீரிழிவு நோய்...
புதிய அரசின் 28 அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுகளுக்குமான விடயதானங்களும் பொறுப்புகளும் அதிசிறப்பு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் கொள்கை அறிக்கையான சுபீட்சத்தின் நோக்கிற்கமைய நாட்டின் எதிர்கால பயணத்தை முன்னெடுக்கக்கூடிய வகையில் அமைச்சுகளுக்கான விடயதானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது. தேசிய முன்னுரிமைக்கான தேசிய மட்ட வழிகாட்டல் மற்றும் இணைப்பினூடாக...
மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது நாட்டின் நிர்வாகத்தை இராணுவத்திடம் தாரைவார்ப்பதற்கு சமானனது என கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், நாடு இராணுவ மயமாவதாக தாம் கூறியபோது அதனை அரசும் அரசுடன் இணைந்த கட்சிகளும் மறுப்பு தெரிவித்ததாகவும்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையில் – மதிப்பீட்டின் படி முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றவர்களின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்கென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைப்பதற்காக பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக கடந்த...
வவுனியாவில் முன்னாள் போராளி மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் போராளியும், சமூக சேவகருமான வி.விநோதரன் (ஈழம்) என்பவர் மீதே இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா கரப்பன்காட்டு பகுதியில் அமைந்துள்ள தனியார் சமூக சேவை அமைப்பின்...
Loading posts...
All posts loaded
No more posts
