Ad Widget

“கொழும்புக்கு பயணிப்பதைத் தவிருங்கள்” – இராணுவத் தளபதி

கொழும்புக்கான பயணத்தை அவசர தேவை கருதி மேற்கொள்ள வேண்டும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுள்ளார்.

“தற்போதைய சூழலில் கொழும்புக்கான பயணத்தைத் தவிர்க்கவேண்டும். அவசர விடயத்தைத் தவிர ஒருவர் கொழும்புக்கு வரக்கூடாது” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் கூடுதலான கோரோனா தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த மாவட்டங்களின் மக்கள் மிக அவதானத்துடன் செயல்பட வேண்டும்.

கூடுதலான அச்சுறுத்தல் உள்ள பகுதிகள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்படுகின்றனர்.

நாட்டின் ஏனைய பாகங்களிலும் ஓரிருவர் ஏனும் தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்படுகின்றனர். நாட்டு மக்கள் மிக பொறுப்புடன் செயல்பட வேண்டும். எங்கும் தொற்றாளர்கள் இருக்கலாமென்ற நோக்கில் எமது செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

நாட்டின் சகல பாகங்களிலும் இந்த எச்சரிக்கை உண்டு. சுகாதார வழிமுறைகளை பேணி செயல்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம். மாவட்டத்திற்கு மாவட்டம் பயணிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்” என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

Related Posts