இலங்கை காவல்துறையின் பல்வேறு பதவி நிலைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இலங்கை காவல்துறையின் பல்வேறு பதவி நிலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கடந்த 12.02.2021 ம் திகதிய அரச வர்த்தமானியில் வெளியாகியுள்ள அரச வேலைவாய்ப்பு அறிவித்தல்களில் இப்பதவிக்கான முக்கிய தகவல்கள் உள்ளடக்கப்பட்டு மும்மொழிகளிலும் வர்த்தமானி வெளியாகியுள்ளது. இதன் படி இலங்கைக் காவல்துறையில் நிலவும் காவல்துறை கான்ஸ்டபில் ,பெண் காவல்துறை கான்ஸ்டபிள், காவல்துறை கான்ஸ்டபிள்...

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தடுப்பூசி

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பல கட்டங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்த பல்கலைக்கழக மானிய ஆணையகம் நடடிவடிக்கை எடுத்துள்ளது. அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, இந்த திட்டம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதேவேளை கண்டி, பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் எட்டு மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாக...
Ad Widget

ஜெனீவாவில் இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்காகவே வடக்கின் 3 தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளன – விக்னேஸ்வரன்

ஜெனீவாவில் இந்தியாவின் ஆதரவை இலங்கை அரசு பெறுவதற்காகவே வடக்கின் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகள் சீன நிறுவனம் ஒன்றுக்கு மின்சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,...

ஜெனீவா விடயம் – வடக்கில் நுழையும் சீனக் கம்பனிகள் விடயம்: தமிழ் கட்சிகள் எடுத்துள்ள முடிவு!!

தமிழ் தேசியக் கட்சிகள் இணைந்து மூன்று முக்கிய விடயங்கள் குறித்து தீர்மானங்களை எடுத்துள்ளன. இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இந்நிலையில், இந்தச் சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில், “தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தக்கூடிய...

தனியார் வைத்தியசாலைகளின் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் தடுப்பூசி

தனியார் வைத்தியசாலைகளில் பணிபுரியும் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வாரம் முதல் முன்னெடுக்கபப்படவுள்ளது. அதன்படி, இந்த திட்டம் எதிர்வரும் புதன்கிழமை முதல் முன்னெடுக்கப்படும் என விஷேட வைத்தியர் அமல் ஹர்ஷ த சில்வா தெரிவித்துள்ளார். பிரதான வைத்தியசாலைகளில் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சாதாரண தனியார் வைத்தியசாலைகளில்...

கொழும்பு, வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் புதிய வகை கொரோனா வைரஸ் – மக்களுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட B.1.1.7 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி கொழும்பு, அவிஸ்ஸாவெல்ல, பியகம மற்றும் வவுனியாவில் இருந்து இனங்காணப்பட்ட தொற்றாளர்களுக்கு இவ்வாறு புதிய வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை மிக வேகமாக பரவுக்கூடும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மரபணு உயிரியல்...

கொழும்பு- யாழ். நகர்சேர் கடுகதி சேவையில் இன்று முதல் 2ஆம்,3ஆம் வகுப்புகள் இணைப்பு!!

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் சேவையில் ஈடுபடும் தொடருந்தில் இன்று முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு பயணிகள் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இந்த தகவலை யாழ்ப்பாணம் ரயில் நிலைய பிரதான அதிபர் தி.பிரதீபன் தெரிவித்தார். இந்த சேவை தொடர்பில் அவர் அவர் மேலும் தெரிவித்ததாவது; கல்கிசையிலிருந்து தினமும் அதிகாலை 5.10 மணிக்கு புறப்படும்...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை – சர்ச்சைகள் குறித்து வெளிப்படுத்தினார் சுமந்திரன்!

பல்லாயிரக்கணக்கான மக்களின் பேராதரவுடன் நடைபெற்று முடிந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் குறித்து முன்வைக்கப்படும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் விளக்கமளித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியினை...

ஐபிஎல் வீரர்கள் ஏலம் பட்டியலில் யாழ்ப்பாணம் வீரர் வியாஸ்காந்த் இடம்பிடித்தார்!!

14ஆவது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ள நிலையில் புதிய வீரர்கள் பட்டியலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்தின் பெயரும் இடம்பெற்றது. இலங்கையைச் சேர்ந்த 9 வீரர்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்களிலேயே விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் 2021 இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏலம் வரும்...

வடக்கில் மேலும் 7 பேருக்கு கோரோனா தொற்று; ஒருவர் யாழ்.கச்சேரி பஸ் சேவை நடத்துனர்

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை- கச்சேரி தனியார் பேருந்து சேவையின் நடத்துனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 379 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன....

லுணுகல, எகிரியா பகுதிகளில் நில அதிர்வு

லுணுகல, எகிரியா பகுதியில் இன்று அதிகாலை 4.53 மணியளவில் ஒரு சிறிய நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. பல்லேகல மற்றும் ஹக்மன பகுதிகளிலும் இந்த நில அதிர்வு எதிவாகியுள்ளதாக புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி 31...

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழ் பாதுகாப்பு பிரிவினர் மீது நம்பிக்கை இல்லை!!

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழ் பாதுகாப்பு பிரிவினர் மீது நம்பிக்கை இல்லை போல தனக்கு தோன்றுகின்றது என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகளாகவும், பொலிஸ்...

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஐந்தாவது மரணம் பதிவானது!

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஐந்தாவது மரணம் பதிவாகியுள்ளது. மன்னார் மாவட்டத்தின் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்ணொருவரே கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிபப் பெண் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன் அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இதேவேளை, மன்னார் மாவட்டத்தினைச்...

வட மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த 118 மையங்கள் – வைத்தியரத் ஆ.கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக 118 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுவருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. அவர்களில் 85 சதவீமான உத்தியோகத்தர்கள் தடுப்பூசிகளைப்...

இரண்டு முகக்கவசங்களை அணிவதன் ஊடாக கொரோனாவிலிருந்து அதிக பாதுகாப்பை பெற முடியும்!

இரண்டு முகக்கவசங்களை அணிவதன் ஊடாக கொரோனா வைரஸிடம் இருந்து அதிக பாதுகாப்பை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தொற்று நோய் பிரிவினர் இதுகுறித்த தகவல்களினை வெளியிட்டுள்ளனர். சத்திரசிகிச்சை முகக்கவசத்துடன் துணியிலான முகக்கவசமொன்றை அணிவதன் ஊடாக வைரஸிடம் இருந்து 92.5 சதவீத பாதுகாப்பை பெற முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பொது இடங்களுக்கு செல்லும் போது...

மணல் கடத்தல்காரர்களுக்கு இராணுவம் துணையா? இரண்டு டிப்பர்கள் விடுவிப்பு!!

வடமராட்சி கிழக்கு, குடத்தனையில் சட்டத்துக்கு புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்டு மணல் ஏற்றியவாறு இரண்டு டிப்பர் வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட நிலையில் இராணுவத்தினரின் அழுத்தத்தால் விடுவிக்கப்பட்டுள்ளன என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அத்துடன், மணல் கடத்தில் ஈடுபடுவோரை கைது செய்யும் நோக்குடன் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் அணிக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று...

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மக்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!!

காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்என சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார். கொவிட் நோயாளிகளைக் கண்டறிவது தொடர்பாக சுகாதார பரிசோதக அதிகாரிகள் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதால், பொதுமக்கள்...

குருந்தூர் மலையில் மீட்கப்பட்டது பல்லவர் கால தாரா லிங்கம்!! – சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள்

குருந்தூரில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கமானது பல்லவர்காலத்திற்குரியது. அது தாரா லிங்கம் என அழைக்கப்படுகிறது. இவ்வாறுல சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார். அதுதொடர்பில் அவர் தெரிவித்ததாவது; மிக அண்மைய காலங்களில் தொல்பொருள் திணைக்களமானது பல ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த எமது இந்து சைவப்பாரம்பரியங்கள் மிக்க இடங்களை பௌத்தத்திற்குரியயவையாக சொந்தம் கொண்டாடி வருகின்றன....

வடக்கில் 21 பேருக்கு கோரோனா- இருவர் யாழ்.பல்கலை மாணவர்கள்; ஐவர் வங்கி ஊழியர்கள்

வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 2 பேர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 776 பேரின் மாதிரிகள் பிசிஆர்...

பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை மையப்படுத்திய பாரிய அபிவிருத்தித் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் – டக்ளஸ்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப்பங்களிப்பில் பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை மையப்படுத்திய பாரிய அபிவிருத்தித் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....
Loading posts...

All posts loaded

No more posts