- Sunday
- April 26th, 2026
வடக்கு மாகாணத்தில் கோவிட் -19 தடுப்பூசி மருந்தும் வழங்கும் நடவடிக்கையில் இரண்டாவது கட்டமாக தனியார் சுகாதாரத் துறையில் கடமையாற்றும் மருத்துவ வல்லுநர்கள், மருத்துவ அதிகாரிகள், பல் மருத்துவர்கள், பதிவு மருத்துவ அதிகாரிகள் (RMO) ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது. இவ்வாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;...
யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த முதியவரின் சடலத்தை அடையாளம் காணுமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அறிவித்துள்ளது. நேற்று இரவு யாழ்ப்பாணத்திலிருந்து செம்மணி வீதி ஊடாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார். முதியவர் உயிரிழந்த நிலையில் சடலமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டார்....
வட மாகாணத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று(செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் பூநகரியில் சேவையாற்றும் தனங்களப்பு பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 376 பேரின் மாதிரிகள்...
நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளின் கனிஷ்ட பணிக்குழாமினர் இன்று (புதன்கிழமை) காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர். சில கோரிக்கைகளை முன்வைத்து, அவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாக ஒன்றிணைந்த சுகாதார ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், களுபோவில, ராகம, அநுராதபுரம் போதனா வைத்தியசாலைகள் என்பனவற்றின் கனிஷ்ட...
மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விழாவின் போது கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தருகின்றவர்களை தவிர்த்து மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களின் பங்களிப்புடன் மஹா சிவராத்திரி விழாவை கொண்டாட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று (15) திங்கட்கிழமை மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி...
யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் மது அருந்திவிட்டு சபை அமர்பில் கலந்து கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளாத உறுப்பினர் ப.தர்சானந் சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்பு இன்றையதினம் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போதே இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது....
இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, வெள்ளை கொடியை காண்பித்தவர்களையும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொல்வதை பார்த்திருக்கின்றோம் என முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது நவநீதம் பிள்ளை மேலும் கூறியுள்ளதாவது,...
பிரித்தானியாவின் புதிய வகை கொரோனா வைரஸ் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள போதிலும் அது நாட்டிற்கு ஆபத்தில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நிலைமை குறித்து அவதானத்துடன் செயற்பட்டு வருவதாகவும், நாட்டை முடக்கும் தேவை இல்லை என்றும் அவர் கூறினார். இதேவேளை, கொரோனா நோயாளர்கள் இன்னும் இரண்டு மாதங்களில் குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக அரச...
மத்திய சுகாதார அமைச்சினால் வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு 50 மருத்துவ அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தனர். நேற்று பெப்ரவரி 15ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இவர்களில் யாழ்ப்பாணம்...
24 மணித்தியாலங்களுக்கு அனைத்து இறுதி சடங்குகளையும் நிறைவு செய்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேற்று (15) இரவு கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் திருமண நிகழ்வுகள் மற்றும் ஏனைய விழாக்களில் கலந்து கொள்ள...
கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி கோவிட்- 19 சிகிச்சை நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப் பீட மாணவி தனது ஆண்டு இறுதிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சிறப்பு ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பதுளையைச் சேர்ந்த கலைப்பீட மாணவி ஒருவர் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில்,...
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை இடம்பெற்ற மக்கள் எழுச்சிப் பேரணியில், நீதிமன்ற கட்டளையை மீறி யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கலந்துகொண்டமையினால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றில், யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு பதில் நீதவான் முன்னிலையில் நேற்று...
பாடசாலைகளில் நிகழ்ச்சிகளை நடத்துதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாகவே இவ்வாறு நிகழ்ச்சிகளை நடத்துதற்கு மீள் அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக அனைத்து மாகாண, வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கும் கல்வியமைச்சின் செயலாளரினால்...
வடக்கு மாகாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்களில் 5 பேர் மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை பணியாளர் என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 416 பேரின்...
நாட்டு மக்கள் ஒரு வருடத்தில் சுமார் 5,000 கோடி ரூபா பெறுமதியான வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனி மற்றும் இனிப்பு பண்டங்களை பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2020 ஆம் ஆண்டு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட...
புதிதாக சமுர்த்தி பயனாளிகளை இணைத்துக்கொள்வதில் அரசியலுக்கு அப்பால் ஒழுங்குமுறையான வேலைத்திட்டம் ஒன்றை அறிமுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த புதிய நடைமுறையின் கீழ் பல்வேறு காரணங்களினால் பிரதேச செயலாளர் மட்டத்தில் வெளியேறும் சமுர்த்தி பயனாளிகளின் குடும்பங்களுக்காக தகுதிகளை கொண்ட புதிய குடும்ப பயனாளிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.. இதற்கான சுற்றறிக்கை ஒன்று கடந்த 11 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதற்கமைவாக...
வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் கொரோனா நிலைமைகள் தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 379...
மேல் மாகாணத்தில் அதி அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த செயற்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பாதிக்கப்படக்கூடியவர்கள், அதிக ஆபத்துள்ள குழுக்கள் மற்றும் பொதுமக்களுடன் நெருக்கமாக பழகும் நபர்களை...
வலிகாமம் கல்வி வலயத்துக்கு உள்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 11இல் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் சிலரால் துன்புறுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யபட்டுள்ளது. குறித்த பாடசாலையில் தரம் 11இல் பயிலும் மாணவன் ஒருவன் உடலில் பச்சை குத்தியுள்ளதாக ஆசிரியர்கள் சிலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தரம் 11இல் பயிலும்...
புதிய கோவிட்-19 வைரஸ் பாதிப்பு குறித்து சரியான தொழில்நுட்ப மதிப்பீடு செய்யப்படும் வரை நாடு பூட்டப்பட வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். நாடு முடக்கத்தின் கீழ் வைக்கப்படும் என்று செய்திகள் பரப்பப்படுகின்றன. எனினும், இப்போதைக்கு, நாங்கள் ஒரு முடக்கத்துக்குச் செல்ல விரும்பவில்லை என்று இராணுவத் தளபதி...
Loading posts...
All posts loaded
No more posts
