- Sunday
- April 26th, 2026
வடக்கு மாகாணத்தில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 442 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதிலலேயே ஆறு பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் எட்டுப் பேர்...
சுமந்திரனுக்கு வழங்கிய பாதுகாப்பு நீக்கப்பட்ட விவகாரம் -பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை கோரும் சபாநாயகர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த அறிக்கை ஒன்றினை தனக்கு தருமாறு சபாநாயகர் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்துமூல கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார். எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்திலும் கட்சித் தலைவர் கூட்டத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
யாழ்.நகரில் மூன்று இடங்களில் கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 8 தங்கப் பவுண் நகைகள் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். கொழும்புத் துறையில் உள்ள வீடொன்றுக்குள் அண்மையில் புகுந்த மூவரடங்கிய கும்பல் அங்கு வசித்த வயோதிபர்களை மிரட்டி 8 தங்கப் பவுண்...
இந்த முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தமக்கான தேசிய அடையாள அட்டைகளை இன்னும் பெறவில்லையென்றால், பாடசாலை அமைந்துள்ள பிரதேச செயலகத்தில் அது குறித்து விசாரிக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் அதிபர்களுக்கு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த காலங்களில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்த போது மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகளை, சம்பந்தப்பட்ட ஆவணங்களை பிரதேச...
யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை இலங்கைக்கான சுவிஸர்லாந்தின் புதிய தூதுவர் டொமினிக் ஃபேர்கலர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல், யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள தூதுவர், பல தரப்பினரையும் தொடர்ச்சியாக சந்தித்துவரும் நிலையில் நேற்று, நூலகத்திற்கு சென்று பார்வையிட்டதோடு மாநகர முதல்வரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பில்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்துவதில் சிரமங்கள் ஏதாவது இருப்பின் நிகழ்வைப் பிற்போட்டு, கோவிட் 19 நிலமைகள் சீரடைந்த பின் பிறிதொரு நாளில் நடாத்தலாம் என வடக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் ஆலோசனை வழங்கியுள்ளார். யாழ். பல்கலைக் கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 24,...
அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு அஸ்ட்ரா செனகா கொவிஷீல்ட் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வார இறுதி நாட்களில் ஆரம்பிக்கப்படவிருப்பதாக பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதன்படி 30 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச்...
கிளிநொச்சி, பளை பகுதியில் பல ஏக்கர் காணிகளை சீன நிறுவனம் ஒன்றிற்கும், சிங்கள வர்த்தகர்களிற்கும் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது...
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் 6 மணிநேர விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். 26 வயதுடைய இளைஞன் நேற்றையதினம் நண்பகல் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் போராட்டத்தின் போது அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த இளைஞனை...
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இன்று மதியம் கைது செய்தனர். பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் வடக்கு – கிழக்கில்...
யாழ்.மாநகரில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கி வர்த்தக நிலையங்களுக்கு பெயர் பலகை வைத்தால் 50 வீதம் வியாபார கழிவு வழங்கப்படும். என யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தொிவித்திருக்கின்றார். குறித்த விடயம் சபையில் பிரேரணையாக முன்வைக்கப்பட்டு ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இதன்படி புதிதாக தொடங்கும் வியாபார நிலையம் மற்றும் ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கும் வியாபார நிலையங்களில் தாமாகவே விரும்பி...
எதிர்வரும் 20ஆம் திகதி தீச்சட்டி போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பிற்பகல் 5.30 மணியளவில் கிளிநொச்சி ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீனாவின் ஆதிக்கத்தால், இந்தியா- அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இலங்கைப் பிராந்தியத்தில் அமைதியின்மை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அவர், குடா நாட்டில் சீனாவின் ஆதிக்கத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார். மேலும் இந்தியா, அமெரிக்கா போன்ற...
வடக்கு மாகாணத்திற்கு இதுவரை காலமும் வழங்கப்படாமல் இருந்த அதிகாரங்கள் தற்பேர்து கிடைத்துள்ளமை தேசிய நல்லிணக்க பொறிமுறைக்கு கிடைத்த இன்னுமொரு வெற்றி என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்களின் மனங்களில் நம்பிக்கை வலுப்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண காணி ஆணையாளருக்கு வழங்கப்படாமல் இருந்த அதிகாரங்கள் கடற்றொழில் அமைச்சரின் முயற்சி...
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (புதன்கிழமை) உறுதியாகியுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் என்றும் மற்றைய மூவரும் பூநகரியைச் சேர்ந்தவர்கள் என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட 491 பேரின்...
இராணுவ வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதனை தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு அறிவித்துள்ளார். கடந்த காலங்களின் இராணுவத்தின் செயற்பாட்டை தாம் ஏற்றுக்கொள்ள போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கொவிட் 19 தடுப்பூசியை...
வீட்டுத் திட்டத்துக்கான மீதி பணத்தினை பெற்றுத்தருமாறு கோரி சண்டிலிப்பாய் பெரியவிளான் மக்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றலில் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பெரிய விளான் 3 ஆம் வட்டாரம் ஜே 153 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள மக்களுக்கு ஏழு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பொறுமதியிலான வீட்டுத்திட்டம்...
காரைநகர் இந்துகல்லூரிக்கு சொந்தமான 2 பரப்பு காணி மற்றும் பொதுமக்களுக்கு சொந்தமான 6 பரப்பு காணி என 8 பரப்பு காணியை கடற்படையின் எலாற கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் முயற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளது. நில அளவை திணைக்கள அதிகாரிகளால் கடற்படையின் தேவைக்காக குறித்த காணியை அளவீடு செய்வதற்கு இன்று காலை முயற்சிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,...
யாழ்ப்பாணம் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளிலும் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டமை முற்றிலும் ஒரு வணிக நடவடிக்கையாகும் எனவும், சர்வதேச ஏல நடைமுறைகளுக்கு அமையவே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் சீனா தெரிவித்துள்ளது. குறித்த மின் உற்பத்தி திட்டம் குறித்த இந்தியாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சீனா இந்த கருத்தை வெளியிட்டுள்ளதாக, சர்வதேச...
கொரோனா வைரஸின் புதிய வகை ஒன்றை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே கொரோனா வைரஸின் இன்னொரு புதிய வகையை பிரிட்டனில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். இந்நிலையில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. B.1.525 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை கொரோன வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய...
Loading posts...
All posts loaded
No more posts
