Ad Widget

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை! – மேலும் 36 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 36 மரணங்கள் பாதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

19 ஆண்களும் 17 பெண்களுமே இவ்வாறு மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் எம்பிலிபிட்டி, நாவலப்பிட்டி, புசல்லாவ, வென்னொருவ, பன்னல, இரத்மலானை, இராஜகிரிய, வத்தளை, கலபிட்டமட, துல்கிரிய, அஹங்கம, ஊராபொல, கட்டுவ, செவனகல, தெலிகம, எஹலியகொடை, நிகபொத, பெல்லபிட்டிய, பண்டாரகமை, இங்கிரிய, குன்னேபான, கிங்தொட்ட, இமதுவ, தல்பே, தல்கஸ்வெல, எல்பிட்டி, பயாகல, வஸ்கடுவ, ஹேனகம, ஹொரணை, மாத்தளை மற்றும் பேராதனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மரணித்துள்ளதாக அந்தத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1051ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 3623 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 343ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் ஒரு இலட்சத்து 22 ஆயிரத்து 367 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 27 ஆயிரத்து 925 கொரோனா நோயாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts