Ad Widget

இலங்கையின் புதிய சட்டமா அதிபராக தமிழர்!

இலங்கையின் புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்தினத்தை நியமிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் முன்மொழிவை ஏற்று நாடாளுமன்றத் தெரிவுக்குழு இந்த ஒப்புதலை அளித்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019, மே 10இல் சட்டமா அதிபராகப் பொறுப்பேற்ற ஜெனரல் தப்புல டி லிவேராவின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், பதில் மன்றாடியார் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம் சட்டமா அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சோசலிசக் குடியரசாக அறிவிக்கப்பட்டதற்குப் பின்னர் இலங்கையின் சட்டமா அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள மூன்றாவது தமிழரும் நான்காவது சிறுபான்மையினராகவும் சஞ்சய் ராஜரத்தினம் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts