- Saturday
- July 11th, 2026
2025 இலும் சிம்மாசன உரை பற்றி கதைத்துக் கொண்டிருக்கப் போகின்றோம் என்றால் எங்களை போன்ற மடையர்கள் இருக்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானியாவின் தென் ஆசிய மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் தரிக் அஹமட் பிரபுவிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். அதுதொடர்பில் தெரியவருவதாவது, “தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரித்தானிய கொண்டிருக்கின்ற கரிசனைகளுக்கும், அதற்காக வழங்கி வரும் ஒத்துழைப்புக்களும் முழுமையான நன்றிகள். தமிழ் மக்கள் தமது கருமங்களை சுதந்திரமாக...
நாடளாவிய ரீதியில் பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் வீதம் அதிகரிகரித்துள்ளது. இதே நிலைமை தொடருமானால் பாடசாலை கட்டமைப்பு முழுமையாக சரிவடையும். எனவே பாடசாலைக்கு அழைக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட வேண்டும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வீதியில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் 400 மீற்றர் நீளமான வீதிவிடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , குறித்த பகுதியில் இராணுவத்தினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு , கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு செல்லும் கட்டுவன் – மயிலிட்டி வீதியில் 400 மீற்றர் நீளமான வீதி இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு...
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 11.45 மணியளவில் பரவிய பாரிய தீ பிரதேசசபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இராணுவ தீயணைப்பு பிரிவினரும் களத்தில் இறங்கி மேலும் தீ பரவாத வகையில் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில்...
யாழில் வருடாந்திரம் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியின் போது , யாழ்.மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய நிதியில் 20 இலட்ச ரூபாயை ஏற்பாட்டாளர்கள் இதுவரை மாநகர சபைக்கு வழங்கவில்லை என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று (புதன்கிழமை) மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் சட்டத்தரணி...
யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி 12 ஆவது தடவையாக இம்மாதம் ஜனவரி 21, 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது. கண்காட்சி தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் நந்தரூபன்,...
வடமாகாண அமைச்சின் செயலாளர்களுக்கு இன்று (வியாழக்கிமை) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இடமாற்றம் வழங்கி மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் நிர்வாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன், மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக மாற்றம் பெற்றுள்ளார்....
கொவிட்-19 தொற்று உறுதியானவர்களுக்கு வயதெல்லையின்றி நீரிழிவு நோய் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் நிலவுவதாக புதிய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவர் விசேட வைத்தியர் மனில்க சுமனதிலக இதனைத் தெரிவித்துள்ளார். கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் குருதியில் சீனியின் மட்டம் உயர்ந்து காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக கொவிட் தொற்று உறுதியான அனைவரும் குருதியின்...
வடக்கில் இனி அரச உத்தியோகத்தர்கள் பொது மக்களின் குறை நிறைகளைக் கேட்டறியும் வேலைத்திட்டம் விரைவில் உருவாக்கப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண ஆளுநராக நான் கடமைகளை பொறுப்பேற்று மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. எனக்கு...
தமிழ் மக்களுக்கான சுபீட்சமான எதிர்காலத்தினை உருவாக்குவதற்கு வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையின் அர்த்தத்தினைப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை விளக்க உரை தொடர்பாக பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்...
இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு தினங்களில் நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது. அனைத்து அமைச்சுக்கள், உள்ளூராட்சி மன்ற நிறுவனங்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன. கடந்த வருடத்தில் நாட்டில்...
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விரைவில் சந்திக்க எதிர்பார்த்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்குகின்ற கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமருக்கான கடிதம் ஒன்றை, இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளித்தன. இந்தநிலையில் இதுகுறித்து இந்திய...
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை வரவு செலவுத் திட்ட முன்மொழிவிற்கு அமைய அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக...
திருநெல்வேலி சந்தை பகுதியில் வழமையாக பொங்கல் தினத்திற்கு முதல் நாள் பொருட்கள் கொள்வனவு செய்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் வீதி முழுவதும் சனக்கூட்டம் நிறைந்து காணப்படும் நிலையில் இம்முறை தைப்பொங்கலுக்கு பொருட்கள் கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். தமிழர்களின் திருநாளாகிய தைப்பொங்கல் திருநாள் நாளை இடம்பெறவுள்ள...
இந்தியப் பிரதமருக்கு தமிழ் கட்சிகளால் அனுப்பப்படவுள்ள கடித விடயத்தில் தமிழரசுக்கட்சி ஈடுபடத்தொடங்கியதில் இருந்து அதன் பொருள் அதனுடையநோக்கம், அது எதனைக்கோருகின்றது அதன் தலையங்கம் அனைத்தையும் மாற்றியமைத்திருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவிற்கு விஐயம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “உள்ளூராட்சி...
பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றி துணி வைத்து சத்திரசிகிச்சை முன்னெடுத்தமையே குறித்த பெண்ணின் உயிரிழப்புக் காரணம் என சட்ட மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட தரப்புகளை மன்றில் முன்னிலையாகுமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், உயிரிழந்த பெண்ணின் சடலத்தை நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ள நீதிவான் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு பணித்துள்ளார். நெல்லியடியிலுள்ள குறித்த...
தற்போதைய இளைஞர்கள் எடுத்த எடுப்பில் அரசியல் தலைவர்களாக வரவேண்டும் என நினைக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போதைய இளைஞர்கள் எடுத்த எடுப்பில் அரசியல் தலைவர்களாக வரவேண்டும் என நினைக்கிறார்கள். அரசியல் பணக்காரர்களாக...
யாழ்.மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக முத்தமிழ் விழா எதிர்வரும் 16ஆம் திகதி காலை 8.30 மணி முதல் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளது. முத்தமிழ் விழா தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு யாழ்.மாநகர சபையில் இடம்பெற்ற போதே யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “காலை முதல்...
யாழில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். புற்றுநோய் காரணமாக கர்ப்பப்பையை அகற்றும் சத்திரச்சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவரது உடலில் துணி ஒன்று வைத்துத் தைக்கப்பட்டதனால் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அதுவே உயிரிழப்புக் காரணம் எனச் சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை யாக்கருவைச் சேர்ந்த மனோன்மணி...
Loading posts...
All posts loaded
No more posts
