Ad Widget

யாழ்.சர்வதேச வர்த்தக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் மாநகர சபைக்கு இன்னும் 20 இலட்சம் செலுத்த வேண்டும்!

யாழில் வருடாந்திரம் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியின் போது , யாழ்.மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய நிதியில் 20 இலட்ச ரூபாயை ஏற்பாட்டாளர்கள் இதுவரை மாநகர சபைக்கு வழங்கவில்லை என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று (புதன்கிழமை) மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பிலும் விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக இறுதியாக நடைபெற்ற குறித்த கண்காட்சிக்காக மாநகரசபைக்கு செலுத்த வேண்டிய நிதியான 30 இலட்சம் இதுவரை செலுத்தப்படாதிருந்ததாகவும் அதில் 10 இலட்சம் தற்போது குறித்த தரப்பினரால் செலுத்தப்பட்டுள்ளதாகவும். மிகுதி பணம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் முதல்வர் தெரிவித்திருந்தார்.

அத்தோடு இம்முறை இறுக்கமாக வர்த்தக கண்காட்சியில் காட்சி அறை ஒன்றின் அறவீடு குறைப்பு தொடர்பில் மாநகரசபை இறுக்கமாக இருக்க வேண்டும்.

அத்துடன் நுழைவுச் சீட்டு உள்ளிட்ட விடயங்களில் மோசடி இடம்பெறாத வகையில் கண்காணிப்பு இறுக்கமாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டதுடன் அவ்வாறு மோசடிகள் காணப்பட்டால் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 3 இலட்சம் ரூபா தண்டம் அறவிடப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Posts