Ad Widget

கொவிட்-19 தொற்று உறுதியானவர்களுக்கு நீரிழிவு நோய் தாக்கும் அபாயம்!!

கொவிட்-19 தொற்று உறுதியானவர்களுக்கு வயதெல்லையின்றி நீரிழிவு நோய் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் நிலவுவதாக புதிய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவர் விசேட வைத்தியர் மனில்க சுமனதிலக இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் குருதியில் சீனியின் மட்டம் உயர்ந்து காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக கொவிட் தொற்று உறுதியான அனைவரும் குருதியின் சீனி மட்டத்தைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவர் விசேட வைத்தியர் மனில்க சுமனதிலக அறிவுறுத்தியுள்ளார்.

Related Posts