யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழா!

யாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று(வியாழக்கிழமை) பல்கலைக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கில் யாழ். பல்கலைக்கழக வேந்தர் தகைசார் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது. யாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, இன்றைய தினம் ஆரம்பமாகி நாளை மற்றும் சனிக்கிழமை ஆகிய தினங்களில் பல்கலைக் கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறுகின்றது. இன்றும்...

நாட்டில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?

எரிவாயுவை இறக்குமதி செய்து விநியோகம் செய்யும் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதிக்கான நாணய கடிதங்களை திறப்பதற்கு வங்கிகள் அனுமதி வழங்காமையால் இவ்வாறு எரிவாயு விநியோக நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Ad Widget

வடக்கில் எதிர்வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வடக்கில் எதிர்வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருக்குமாறும், வெங்காயம் மற்றும் சிறு தானிய செய்கையாளர்கள் விதைத்தல் மற்றும் அறுவடை செயற்பாடுகளை தவிர்த்து கொள்வது சிறந்தது எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான...

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமனம்

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணை தலைவராக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் செயற்பட்டு வரும் நிலையில் அவருக்கு எதிராக பொதுமக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு பல முறைப்பாடுகள் பிரதமர் அலுவலகத்திற்குகிடைக்கப் பெற்றதையடுத்து யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் பிரதமர் மகிந்த...

பெரசிட்டமோல் வில்லையொன்றின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

500 மில்லிகிராம் பெரசிட்டமோல் வில்லையொன்றின் அதிகபட்ச சில்லறை விலையை 2 ரூபாய் 30 சதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வௌியிடப்பட்டுள்ளது. 2022 பெப்ரவரி 28 முதல் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சினால் குறித்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்று ஏழரை மணித்தியால மின்வெட்டு!

நாடளாவிய ரீதியில் இன்றும்(வியாழக்கிழமை) ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய காலை 08 மணி தொடக்கம் மாலை 06 மணி வரையான காலப்பகுதியில் 05 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. மாலை 06 மணியிலிருந்து இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்...

எரிபொருள் தட்டுப்பாடு ஜனாதிபதியின் தோற்றுப்போன மனநிலையை காட்டுகின்றது – சிறிதரன்

நாட்டில் காணப்படும் எரிபொருள் தட்டுப்பாடு என்பது ஜனாதிபதியின் தோற்றுப்போன மனநிலையை உலகிற்கு காட்டி நிற்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார். கிளிநொச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்த அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது என்றும் தெரிவித்தார். விவசாயத்தை தமது ஜீவனோபாயமாக கொண்டு வாழ்ந்துவரும் மக்கள், இயற்கை...

இலங்கை தொடர்பில் ஐ.நா தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுகின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது – சுமந்திரன்!

இலங்கை தொடர்பில் ஐ.நா தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுகின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று(செவ்வாய்கிழமை) யாழ்ப்பாணம் – உடுப்பிட்டியில் இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்...

சிறுவர்கள் மத்தியில் வேகமாக பரவும் கொரோனா தொற்று!!

சிறுவர்கள் மத்தியில் கொரோனா தொற்றின் பரவலானது மிக வேகமாக அதிகரித்து வருவதாக சீமாட்டி ரிச்வே வைத்தியசாலையின், வைத்தியர் ஹசித்த லியனாராச்சி குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று பரவல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நாளொன்றிற்கு...

மின் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி வழங்கியுள்ள வாக்குறுதி!!

நாட்டில் நிலவும் மின் நெருக்கடியைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் மக்களுக்கும் உறுதியளித்துள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, மின் உற்பத்திக்கான எரிபொருளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்வதற்கு வசதி செய்து தருமாறு திறைசேரி மற்றும்...

இன்று 7 1/2 மணிநேர மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று ஏழரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த அனுமதியின‍ை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது. அதன்படி காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை சுழற்சி முறையில் 5 மணிநேர மின்வெட்டும், மாலை 6.00 மணி முதல்...

விடுதலைப் புலிகளினால் ஏற்பட்ட தாக்கங்களை காட்டிலும் தற்போது பாரதூரமான சவால்களை எதிர்கொண்டுள்ளோம் – உதய கம்மன்பில

தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஏற்பட்ட தாக்கங்களை காட்டிலும் தற்போது பாரதூரமான சவால்களை தாம் எதிர்கொண்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அச்சம் கொண்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். ஆகவே பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது அவசியம் என சுட்டிக்காட்டினார். மேலும், டொலர்...

12 இந்திய மீனவர்கள் விடுதலை!!

கிளிநொச்சி, இரணைதீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 13 ஆம் திகதி எல்லை தாண்டிய நிலையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 12 இந்திய மீனவர்களையும் அவர்களின் இரண்டு படகுகளையும் கைது செய்த கடற்படையினர் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைத்தனர். 12 இந்திய மீனவர்களும் B/202/2022 ,B/203/2022...

மின்வெட்டுக் காரணமாக கோவிட்- 19 தடுப்பூசிகளின் தரத்தில் பாதிப்பு ஏற்படும்!!

மின்வெட்டு கோவிட்-19 தடுப்பூசிகளின் தரத்தை பாதிக்கலாம் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது; நிலவும் மின் நெருக்கடி காரணமாக நாடுமுழுவதும் தினமும் பல மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகங்களில் மின்பிறப்பாக்கி வசதிகள் குறைவாகவே உள்ளது. பெரும்பாலான அலுவலகங்களில்...

வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைக்குமாறு ஆலோசனை!!

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கவனத்திற்கொண்டு வாரத்தில் வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைத்து வேலைசெய்யும் மணித்தியாலத்தை அதிகரிப்பதற்கு மத்திய வங்கி யோசனைகளை முன்வைத்துள்ளது. அதன்படி காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேலை நேரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களிலிருந்து வேலைசெய்யும் பணியாளர் காலை 9 மணி முதல்...

பூநகரியில் விபத்து – பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு – மற்றுமொருவர் படுகாயம்!

பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை காந்திபுரத்தை சேர்ந்த பொலிஸ் கொஸ்தாபலான கணேசரட்ணம் ஹரிகரன் (வயது 24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்துள்ளார்....

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 977 பேர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 645,037ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 20,128 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரதமரை சந்திக்க அவசியம் இல்லை ; ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றினை கையளிக்க முயற்சித்தோம் – சுமந்திரன்

அலரிமாளிகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாட பிரதமர் இணக்கம் தெரிவித்து காலம் ஒதுக்கிய போதும் அதனை நிராகரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர், பிரதமரை தாம் ஆர்ப்பாட்டம் செய்யும் வீதிக்கு வந்து கதைக்குமாறு தெரிவித்துள்ளனர். கூட்டமைப்பினர் நியாயமாக நடந்துகொள்ள முயற்சியுங்கள். என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர சபையில் தெரிவித்தார். பிரதமரை சந்திக்கவோ...

வடக்கு கிழக்கில் பௌத்த சிங்கள மயமாக்கள் முன்னெடுக்கப்படுகின்றது – செல்வராஜா கஜேந்திரன்

தமிழ் மக்களின் பூர்விக நிலங்கள் அபகரிக்கப்பட்டு வடக்குக், கிழக்கில் பௌத்த சிங்கள மயமாக்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதா தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தாவர, விலங்கினப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,...

லீசிங் பணம் கட்டுவதற்காக வயோதிப் பெண்ணை கோடாரியால் அடித்துக் கொன்றேன்!!

“மோட்டார் சைக்கிள் லீசிங் பணம் கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால் வயோதிபப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை அபகரித்துச் சென்றேன்.”இவ்வாறு யாழ்ப்பாணம் மாநகரில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இளம் குடும்பத்தலைவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடந்த செவ்வாய்கிழமை (பெப்.22) அன்று யாழ்ப்பாணம் இராசாவின் ஒழுங்கையில் உள்ள...
Loading posts...

All posts loaded

No more posts