Ad Widget

மின்வெட்டுக் காரணமாக கோவிட்- 19 தடுப்பூசிகளின் தரத்தில் பாதிப்பு ஏற்படும்!!

மின்வெட்டு கோவிட்-19 தடுப்பூசிகளின் தரத்தை பாதிக்கலாம் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது;

நிலவும் மின் நெருக்கடி காரணமாக நாடுமுழுவதும் தினமும் பல மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பெரும்பாலான பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகங்களில் மின்பிறப்பாக்கி வசதிகள் குறைவாகவே உள்ளது. பெரும்பாலான அலுவலகங்களில் இந்த வசதி செயல்படவில்லை.

எனவே தடுப்பூசிகளை சேமிப்பதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

பைசர் (Pfizer) உள்ளிட்ட தடுப்பூசிகள் குளிர்ந்த நிலையில் சேமிக்கப்பட வேண்டும். எனவே சுகாதார அதிகாரிகளும் அரசும் சரியான சூழ்நிலையில் தடுப்பூசிகளை சேமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

சுகாதார அதிகாரிகள், இலங்கை மின்சார சபை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்சாரம் துண்டிக்கப்படும் போது தடுப்பூசிகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள நிலமைகளை கருத்தில் கொள்ளத் தவறினால், பொதுமக்களுக்கு தரமான தடுப்பூசிகளை வழங்க முடியாது – என்றார்.

Related Posts