- Saturday
- July 11th, 2026
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நேற்றையதினம் (24) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஐந்து வருட பூர்த்தியை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட பந்தலிற்கு முன்பாக குறித்த போராட்டமானது இடம்பெற்றுள்ளது. இதன் போது காணாமல் போன உறவுகளின் படங்களினை ஏந்தியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியவாறும் குறித்த...
நாட்டில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) 5 மணித்தியாலங்களுக்கும் அதிக காலம் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி A,B,C ஆகிய வலயங்களுக்கு 4 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதேபோல ஏனைய வலயங்களுக்கு உட்பட்ட இடங்களில் 5 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்...
யாழ்ப்பாணத்தில் தொடருந்துடன் மோதுண்டு இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொக்குவில் ரயில் கடவையில் இன்று இந்தச் விபத்துச் சம்பவம் இடம்பெற்றது. ராஜ்குமார் ஜெயந்தினி (வயது 23) என்ற இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார். கொக்குவில் தொழிநுட்ப கல்லூரிக்கு முன்பாக உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை துவிச்சக்கர வண்டியை கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது...
காணி அபகரிப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷக்கு பல தடவைகள் அறிவித்த போதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து...
யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிப பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்கிழமை 22ஆம் திகதி மதியம் இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது 72) எனும் பெண்ணே அடித்துக்கொலை செய்யப்பட்டு இருந்தார். அப்பெண் தனிமையில் இருந்த...
சுழற்சி முறையில் இன்றைய தினமும் (வியாழக்கிழமை) நான்கு மணித்தியாலங்களுக்கு அதிக காலம் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய நாளைய தினம் A,B மற்றும் C ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு 4 மணித்தியாலமும் 40 நிமிடமும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது. ஏனைய...
நல்லூர் இராசதானியின் தோரணவாசலை புனரமைப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.மரபுரிமை மையம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நாளை(வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்கு இதன் ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது. யாழ்.மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசியர் பரமு புஸ்பரட்ணம், யாழ்.மரபுரிமை மையத்தின் உபதலைவர் பேராசிரியர் ரவிராஜ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் நேற்று (புதன்கிழமை) இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகையை சேர்ந்த 22 மீனவர்களை கைது செய்த கடற்படையினர், அவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மயிலிட்டி துறைமுகத்திற்கு கடற்படையினர் கொண்டு சென்றுள்ளனர்.
அண்மைய நாட்களில் எரிவாயு, அரிசி, சீனி, பால்மா மற்றும் சீமெந்து தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. இன்று நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனை தெரிவித்தார். எவ்வாறாயினும் தற்போது எரிவாயு, சீனி மற்றும் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை எனவும், விலை உயர்வாகவே இருப்பதாகவும்...
யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த அரசியல் கைதிகள் இன்று (புதன்கிழமை) அதிகாலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கடிதம் மூலம் சிறைச்சாலை பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளனர். இரத்தினசிங்கம் கமலாகரன், வைத்தியலிங்கம் நிர்மலன் மற்றும் பத்மநாதன் ஐங்கரன் ஆகியோரே இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் – மல்லாகம் மற்றும் தெல்லிப்பழை பகுதிகளில் இன்று (புதன்கிழமை) காலை இலங்கை தமிரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய கையெழுத்து போராட்டத்தில் இலங்கை தமிரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண சபை...
கிளிநொச்சியில் அத்தியாவசிய தேவைகளிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல், டீசல் வினியோகம் இடம்பெற்று வருகின்றது. கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் முதல் பெற்றோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகின்றது. எரிபொருள் பெற்றுக்கொள்ள வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதுடன், அதிர்ப்தி வெளியிடுகின்றனர். பெற்றோலுக்கு பதிலாக சுப்பர் பெற்றோலை பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க...
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம், மீசாலை வடக்கு பகுதியை சேர்ந்த 45 வயதான நபரே இவ்வாறு காணாமல்போயுள்ளார். காய்ச்சல் காரணமாக கடந்த 16ஆம் திகதி சாவகச்சோரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபருக்கு அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நோய் தீவிரமடைந்ததால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு...
கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைகள் சில குருநகர் கடற்பகுதியில் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பிரஜை ஒருவர் இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வவருகிறார், அதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணத்திற்கு கொழும்பில் இருந்து கடந்த 19 ஆம் திகதி சிறிய படகொன்றில் வந்துள்ளார். படகில் யாழ்ப்பாணம்...
யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூவில் உள்ள வீடொன்றில் வசித்த வயோதிபப் பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். நேற்று செவ்வாய்கிழமை நண்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது 72) என்ற வயோதிபப் பெண்ணே அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். தனிமையில் இருந்த வேளை, வீட்டு வேலைக்கு வந்த இளைஞனே பெண்ணை பூ சாடியால் அடித்துக்கொலை...
5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு விரைவில் கொவிட் தடுப்பூசி வழங்க எதிர்பார்த்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படாவிட்டால் நோய் நிலைமை மோசமடைந்து சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். இதேவேளை கொவிட் வைரஸ் தொற்று காரணமாக நாளாந்தம்...
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளார். நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார். மேலும், எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்வது குறித்து எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் மனித புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராவதற்கு வவுனியா மேல்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன் ஊடகங்கள் செய்திசேரிப்பதற்கான அனுமதியினையும் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மன்னார் மனிதப்புதைகுழி விடயம் தொடர்பாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேலினால் வுனியா மேல்திமன்றில் மீளாய்வு மனு ஒன்று தாக்கல்செய்யப்பட்டது. அதன் தீர்ப்பு நேற்று(செவ்வாய்கிழமை) வழங்கப்பட்டது. குறித்த தீர்ப்பின் பின்னர் சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல்...
நாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாகவே மின்வெட்டுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டதாக அந்த ஆணைக்குழு கூறியது. அதன்படி, இன்றைய தினம் A,B மற்றும் C ஆகிய...
பிரபாகரனின் இறப்புத் தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துக்களானது பித்தலாட்டங்களும் பொய் பிரட்டுக்களுமே இருப்பதாகவே நாங்கள் உணருகின்றோமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின்...
Loading posts...
All posts loaded
No more posts
