- Saturday
- July 11th, 2026
யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதரை யாழ் மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா,...
ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலவில் அமைக்கப்பட்ட அதிநவீன வசதிகளைக் கொண்ட பாரிய சீமெந்துத் தொழிற்சாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோர் தலைமையில் இன்று (07) திறக்கப்படவுள்ளது. மாகம்புர லங்வா தொழிற்சாலையானது 63 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இது அந்த வலயத்தின் மிகப்பெரிய சீமெந்து உற்பத்தித் தொழிற்சாலையாகும். முதற்கட்டமாக வருடாந்தம் இரண்டு தசம் எட்டு...
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தினர்., யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி!, அரசியல் கைதிகளை நிபந்தனையில்லாமல் விடுதலை செய்!, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு,...
நாட்டை வளப்படுத்துவோம், பாதுகாப்போம் எனது தெரிவித்து ஆட்சிக்கு வந்தவர்கள், குறுகிய காலத்திற்குள் நாட்டை ஆதளபாதாளத்துக்குள் தள்ளியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. எனவே, இந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். ஹட்டனில் நேற்று நடைபெற்ற பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக,...
வலி. தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோவின் வீட்டில் நேற்று மாலையும் தாக்குதல் சம்பவம் நடாத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசாங்கத்துடன் தொடர்புடைய காட்சியின் பெயரைச் சொல்லி ஜிப்ரிக்கோவின் வீட்டின் மேல் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் ஜிப்ரிக்கோ உட்பட அவரது குடும்பத்தினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இளவாலை பொலிஸ்...
எரிபொருள் நெருக்கடி என்ற தவறான கருத்து காரணமாகவே மக்கள் அச்சத்தில் உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எரிபொருள் இருப்பு நான்கு நாட்களுக்கு மட்டுமே இருக்கின்றது என தவறான செய்திகள் பரவுவதாக தெரிவித்த அவர், நாட்டில் எவ்வித எரிபொருள் நெருக்கடியும் இல்லை என கூறினார். அரசியலில் குறைந்த அனுபவம் கொண்டவர்களினால் வெளியிடப்படும் இவ்வாறான அறிக்கைகள் மக்கள்...
அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கான உறுதிமொழிக்கு அமைய, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் இந்தியாவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. அதிகாரப் பகிர்வுக்கான அர்ப்பணிப்பிற்கு அமைவாக மாகாண சபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம் என ஜெனீவாவில் இந்தியா கூறியிருந்தது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல்...
காலத்திற்கு காலம் அறிக்கைகள் வருவதுண்டு எனினும் இங்கு எவ்வாறான நடவடிக்கைகள் உள்ளது என்பதிலேயே கூடுதல் கவனம் வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் . நேற்று ( ஞாயிற்றுக்கிழமை ) வவுனியாவில் கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவிக்கையில்...
யாழ்ப்பாணம் கோவில் வீதியில் தொடருந்தில் பாய்ந்து ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குளிரூட்டப்பட்ட கடுகதி தொடருந்தில் பாய்ந்த அவர் உயிரை மாய்த்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர் அதனை வீதியில் நிறுத்திவிட்டு தொடருந்துப் பாதையில் பாய்ந்தார் என அங்கு...
அமைச்சுகளில் மேலும் சில மாற்றங்கள் இடம்பெற்றுள்ளது. இதற்கமைய, வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய விமலவீர திஸாநாயக்க, அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அத்துடன் வனவிலங்கு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சராக சி.பி.ரத்நாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். அருந்திக்க பெர்னாண்டோ மீண்டும் இராஜாங்க அமைச்சராக சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளார். தென்னை, கித்துள்,...
மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்குள் மதுபோதையில் புகுந்த நபர் ஒருவர் உறுப்பினரின் தந்தையை தாக்க முற்பட்டதுடன் , வீட்டின் வேலிகளை சேதப்படுத்தி சென்றுள்ளார். மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்ட்டமைப்பின் உறுப்பினரான அ.ஜோன் ஜிப்பிரிக்கோ என்பவரின் வீட்டின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பண்டத்தரிப்பில் உள்ள அவரது வீட்டினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு...
யாழ்ப்பாணத்தில் இரத்தக் கரையுடன் வீதியோரம் சடலம் ஒன்று இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொன்னாலை பருத்தித்துறை வீதியில் பொன்னாலைக்கும் திருவடிநிலைப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே இனங்காணமுடியாத நிலையில் நபர் ஒருவரின் சடலம் காயங்களுடன் காணப்படுகின்றது. இவ்வாறு காணப்படும் உடலம் அருகே ஓர் மோட்டார் சைக்கிளும் காணப்படுவதனால் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த மரணம் விபத்தா அல்லது...
கொவிட் தொற்றினால் மரணிப்போரின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 05 முதல் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் இது தொடர்பான திருத்தப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய நிபந்தனைகளாவன, கொவிட் தொற்றினால் மரணிப்போரின் உடல்கள் சுகாதார ஊழியர்களால் சீலிடப்பட்டு, சவப் பெட்டியில்...
கோப்பாயில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் கிருஷ்ணன் கோவில் சந்தியில் நேற்று இரவு 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மூத்த விரிவுரையாளர் கனகசபை பாஸ்கரன் என்பவரே உயரிழந்தார். கரவெட்டியில் உள்ள வீட்டிலிருந்து இரவு மோட்டார் சைக்கிளில் கல்வியியல் கல்லூரியில் நடைபெறவிருந்த நிகழ்வு...
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பழிவாங்கலை நாடவில்லை மாறாக பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மீள்நிகழாமை மற்றும் தொடரும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை உறுதி செய்யுமாறே வேண்டுகின்றனர். அதேபோல் அவர்கள் உண்மை நிலைநாட்டப்படவேண்டும் என கோருகின்றனர். எனவே உண்மை உறுதி செய்யப்படாமல் நீதி நிலைநாட்டப்பட முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையின் தண்டனையின்மை...
டீசல் இல்லையேல் இன்று 90 வீதமான பேருந்துகள் போக்குவரத்திலிருந்து விலகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அங்ஞன பிரியஞ்சித் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். நாட்டில் தற்போதுவரை எரிபொருள் முறையாக கிடைக்காதமையினால் 70 வீதமான தனியார் பேருந்துகள் போக்குவரத்திலிருந்து வெளியேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், பேருந்துகளுக்கு எரிபொருள் முறையாக கிடைக்காத...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், தற்போதுள்ள அமைச்சரவை அமைச்சுப் பதவிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அமைச்சர் காமினி லொக்குகே இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். அதற்கமைய, கீழ்வரும் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எரிசக்தி அமைச்சராக காமினி லொக்குகே பொறுப்பேற்றுள்ளதுடன், மின்சக்தி அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி பொறுப்பேற்றுள்ளார்.ஸ்.பி.திஸாநாயக்க கல்வி அமைச்சராகவும், தினேஸ் குணவர்தன கைத்தொழில்...
மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்திய போராட்டமொன்று நேற்றைய தினம்(வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் நல்லூர் செம்மணி வளைவுப் பகுதியில் இரவு 8.30 மணியளவில் ஒன்றுகூடியவர்களால் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது நாட்டில் பரவலாக பல மணிநேர மின்சாரத்தடை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் மக்களின்...
யாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவருக்கு ஏகாந்த நிலையில் பட்டமும், நினைவுத் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஊடகத் துறையில் சிறப்புக் கலைமாணி பட்டம் பெற்ற செல்வி தில்காந்தி நவரட்ணம் பட்டமளிப்பு விழாவின் போது உயிருடன் இல்லாத நிலையில் அவருக்கான சிறப்புப் பட்டம் அவரது தயாரிடம் வழங்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறையில் சிறப்புத்...
இன்று (03) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனவே, அச்சமடைந்து எரிபொருள் சேகரிப்பதைத் தவிர்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இன்றைய தினத்தின் பின்னர்...
Loading posts...
All posts loaded
No more posts
