நாட்டில் எரிபொருள் நெருக்கடி இல்லை, பொய்யான செய்திகள் பரவுகின்றன – பிரதமர் மஹிந்த

எரிபொருள் நெருக்கடி என்ற தவறான கருத்து காரணமாகவே மக்கள் அச்சத்தில் உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

எரிபொருள் இருப்பு நான்கு நாட்களுக்கு மட்டுமே இருக்கின்றது என தவறான செய்திகள் பரவுவதாக தெரிவித்த அவர், நாட்டில் எவ்வித எரிபொருள் நெருக்கடியும் இல்லை என கூறினார்.

அரசியலில் குறைந்த அனுபவம் கொண்டவர்களினால் வெளியிடப்படும் இவ்வாறான அறிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.

மேலும் இவ்வாறான செய்திகள் காரணமாக நாடு முழுவதும் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பிரதமர் கூறினார்.

அதற்காக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி அனைத்து அரச ஊழியர்களும் உழைக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.

Related Posts