Ad Widget

மேலும் சில அமைச்சுகளில் மாற்றம்!

அமைச்சுகளில் மேலும் சில மாற்றங்கள் இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய, வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய விமலவீர திஸாநாயக்க, அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

அத்துடன் வனவிலங்கு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சராக சி.பி.ரத்நாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

அருந்திக்க பெர்னாண்டோ மீண்டும் இராஜாங்க அமைச்சராக சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

தென்னை, கித்துள், பனை, இறப்பர் செய்கைகள் மேம்பாடு மற்றும் அவை சார்ந்த பொறிமுறை பண்டங்களின் உற்பத்தி, ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சராக மீளவும் ஜனாதிபதி முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அவர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

Related Posts