டீசலின் விலை 75 ரூபாயினாலும், பெற்றோலின் விலை 50 ரூபாயினாலும் அதிகரிப்பு!!

எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய அனைத்து விதமான ஒரு லீட்டர் டீசலில் விலை 75 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பானது, நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக Petrol...

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 50 இலட்சம் ரூபாவை அன்பளிப்பாக வழங்கிய குடும்பம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 50 இலட்சம் ரூபா பணம், கனடா நாட்டை சேர்ந்த புலம்பெயர்ந்த குடும்பம் ஒன்றினால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் உயிரிழந்த சீலா சுகுமார் ஞாபகார்த்தமாக இந்த உதவி சுகுமார் குடும்பத்தினரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமார் கருத்து தெரிவிக்கையில், குறித்த உதவி...
Ad Widget

கிளிநொச்சியில் எரிபொருள் பெற்றுக்கொள்ள டோக்கன் முறை!

எரிபொருள் பெற்றுக்கொள்ள டோக்கன் முறை கிளிநொச்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது நாட்டில் ஏற்ப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸ் பாதுகாப்பு காணப்படுவதுடன் டோக்கன் நடைமுறையும் காணப்படுகின்றது. அவ்வாறு டோக்கன் பெற்றவர்களுக்கும் மாத்திரமே எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது. அத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளே வழங்கப்படுவதன் காரணமாக வாடகை வாகன சாரதிகள் நாளாந்தம்...

இலங்கை மின்சார சபையின் மின் உற்பத்தி அலகு மூடப்பட்டது!

களனிதிஸ்ஸ அனல்மின் நிலைய வளாகத்திலுள்ள இலங்கை மின்சார சபையின் GT-7 இன் ஒற்றை மின் உற்பத்தி அலகு மூடப்பட்டுள்ளது. டீசல் இல்லாத காரணத்தினால் இன்று(வியாழக்கிழமை) காலை திடீரென மூடப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்தார். GT-7 ஆலையின் செயல்பாடுகள் காலை 7:21 மணிக்கு திடீரென நிறுத்தப்பட்டதாக அவர் கூறினார். அனல்மின் நிலையம் நிறுத்தப்பட்டதால், தேசிய...

மீண்டும் பால் மாவின் விலை பாரியளவில் அதிகரிக்கப்படுகின்றது?

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலையை 300 ரூபாவால் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கப்படும் என சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் ஒரு தொன் பால் மாவின் விலை 5...

யாழ்.பல்கலை மருத்துவபீட, போலி அடையாள அட்டையுடன் யுவதி கைது!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட போலி அடையாள அட்டையுடன் தங்கி இருந்த யுவதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையை காண்பித்து , தான் மருத்துவ பீட மாணவி என கூறிதிருநெல்வேலி பகுதியில் வாடகை அறையில் தங்கி இருந்துள்ளார். அவரது நடவடிக்கைகள் நடத்தைகளில் வீட்டு உரிமையாளர் சந்தேகம்...

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ட்ரூ நவமனி இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். பல அனல் மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருளின் கையிருப்பு குறைந்தளவே காணப்படுவதாகவும், இதன்காரணமாகவே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திலும் டீசலின் கையிருப்பு குறைவடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த...

அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் நிறுத்தம்!

அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் முற்றாக நிறுத்தப்படுவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய அமைச்சின் செயலாளர்கள் உட்பட அரச அதிகாரிகளுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 225 லீற்றருக்கு மேலதிகமாக விசேட கடமைகளுக்காக...

அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவிப்பு!

அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சினால் இதுகுறித்த அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய மின் தூக்கி பாவனையை குறைத்து முடிந்தளவு படிக்கட்டுகளை உபயோகிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மின் தூக்கியில் ஒருவர் மாத்திரம் பயணிப்பதை தவிர்த்து, சுகாதார...

அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை!!

367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று நள்ளிரவு முதல் அனுமதிப்பத்திரம் இன்றி அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உரிம முறையின் கீழ், ஒவ்வொரு இறக்குமதியாளரும் தங்கள் இறக்குமதிகளை தொடர்பாக நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்க வேண்டும். அனுமதிக்கு முன் அந்த நேரத்தில்...

யாழில் அதிநவீன உல்லாச படகுச் சேவை திறந்து வைப்பு

யாழ் மாவட்டத்தில் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் முகமாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் உல்லாசத்துறை ஆடம்பர படகு சேவையின் வெள்ளோட்ட நிகழ்வு இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ் குடாநாட்டின் சுற்றுலா பயணிகளின் எண்ணங்களை நிறைவேற்ற “விக்டோரியா இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்” (Victoria international private Limited) மற்றும் “லியானா கடல்...

சிறுமியை கடத்தி சென்று குடும்பம் நடாத்திய இளைஞன் பொலிஸாரினால் கைது!

15 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்தி சென்று, குடும்பம் நடாத்திய 18 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 18 வயது இளைஞனும் 15 வயதான சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு...

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து புதிய எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட தகவல் !

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், எண்ணெய்க் கப்பலுக்கான கட்டணம் முன்னர் 32 மில்லியன் டொலர்களாக மதிப்பிடப்பட்டது என கூறினார். இருப்பினும் சிங்கப்பூர் நாணய விகிதங்களுடன் ஒப்பிடுகையில்...

அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

எதிர்வரும் 2 வாரங்களில் நாடு முழுவதும் அரச துறையில் மட்டுமன்றி தனியார் துறையிலும் அத்தியாவசிய ஒளடதங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அரச ஒளடதவியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்க்கான மருந்துகள் குறைவடைந்துள்ளது என அந்த சங்கத்தின் தலைவர் அஜித் திலக்கரத்ன தெரிவித்தார். கடன் சான்றுப் பத்திர விடுவிப்பு, திறைசேரியால் நிறுத்தப்பட்டுள்ளது....

பயணிகள் பஸ்ஸை செலுத்தி வந்த சாரதி மீது கத்தி வெட்டு!!

பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணத்துக்குப் பயணித்த தனியார் பயணிகள் பஸ் சாரதி, கோப்பாய் பகுதியில் வைத்து கத்தி வெட்டுக்கு இலக்காகியுள்ளார். கத்தி வெட்டுக்கு இலக்கான பருத்தித்துறை, 4ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த வேலு ஜஸ்டின் ராஜ் என்பவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் நடந்துள்ளது. யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த...

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத் துறையில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றது. சுதேஸ்வரன் சுதர்சன் (வயது-29) என்ற இளைஞரே உயிரிழந்தார். கொன்கிறீட் கல் அரியும் இயந்திரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது அதில் ஏற்பட்ட மின் ஒழுக்கு இளைஞனை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா...

தந்தையின் போதையால் தான் நிம்மதி இழந்துள்ளதாக மாணவியொருவர் அச்சுவேலி பொலிஸில் தஞ்சம்!

வீட்டில் தன்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை என கூறி அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த மாணவியை, பொலிஸார் கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தை பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, “மதுபோதையில் வரும் தந்தை, தாயுடன் சண்டை பிடிப்பதாகவும் இருவராலும் தான் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என தெரிவித்து குறித்த மனைவி...

தொடர் போராட்டத்தின் 5 ஆம் ஆண்டு நிறைவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் !

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினத்தில் (08) மகளிர் தினத்தை துக்க தினமாக கடைபிடித்து முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. முல்லைத்தீவு புனித இராஜப்பர் ஆலய முன்றலில் ஆரம்பமான இந்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம்...

கால்பந்து வீரர் பியூஸ்லஸின் உடல் அடக்கம்!! மன்னாரில் கடைகள் அடைக்கப்பட்டு துக்கநாளக அனுஷ்டிப்பு!!

இலங்கை கால்பந்து அணி வீரர் டக்சன் பியூஸ்லஸின் உடல் நேற்று திங்கட்கிழமை மாலை மன்னார் பொது சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்டது. இலங்கை கால்பந்தாட்ட அணியில் விளையாடும், டக்சன் பியூஸ்லஸ், மாலைதீவில் கழகமொன்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் விளையாடி வந்தநிலையில் கடந்த 26 ஆம் திகதி உயிரிழந்திருந்தார். மன்னார் பனங்கட்டுகொட்டு கிராமத்தைச் சேர்ந்த பியூஸ்லஸ், பருத்தித்துறையை வசிப்பிடமாகக் கொண்டவர்....

அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி 230/= ஆக வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி 230 ரூபாவாக குறைத்துள்ளது. வெளிவாரி அதிர்ச்சிகளின் தீவிரத்தன்மையையும் உள்நாட்டுப் பக்கத்தில் அண்மைக்கால அபிவிருத்திகளினையும் பரிசீலனையிற்கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது அத்தகைய பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொள்வதற்கு அனைத்தையுமுள்ளடக்கிய கொள்கைசார்ந்த திட்டமொன்றினை 2022 மார்ச்சு 04 இல் அறிவித்திருந்தது. தோற்றம்பெற்றுவரும் பேரண்டப்பொருளாதார மற்றும் நிதியியல்...
Loading posts...

All posts loaded

No more posts