- Saturday
- July 11th, 2026
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மரணச் சான்றிதழ், 100,000 ரூபாய் இழப்பீடு மற்றும் காணி வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஐ.நா. கூட்டத்தொடரின் பின்னர் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமக்கு உண்மையும் நீதியும் மட்டுமே வேண்டும் என்றும் இழப்பீடும் தேவையில்லை என்றும் தெரிவித்தே...
நாட்டில் தற்போது டொலர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொருட்களை இறக்குமதிசெய்வதில் பல்வேறு சிக்கல் நிலைதோற்றம் பெற்றுள்ளது. இதனால் நாட்டு மக்கள் எரிபொருள், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தவற்கு நாள்தோறும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சர்வதேச...
ஊர்காவற்றுறை பகுதியில் 2017 ஜனவரி 24ஆம் திகதி கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட 7 மாத கர்ப்பிணித் தாயின் வழக்கு விசாரணைகள் 5 ஆண்டுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவில் 12 வயதுச் சிறுமியை வன்புணர்ந்து கொலை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட ஈபிடிபியின் முன்னாள் உறுப்பினரே...
நாட்டில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் , கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கனிசமானளவு குறைவடைந்துள்ளது. 80 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு இரு கட்ட தடுப்பூசிகளும் வழங்கப்பட்டமையே இதற்கான காரணமாகும் என்று விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் திங்கட்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இடையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. சந்திப்பிற்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூடுவதுடன், சந்திப்பின் நோக்கம், முன்வைக்க வேண்டிய காரணிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசியல் தீர்வு விடயங்களில் அரசாங்கம் காட்டவேண்டிய...
பிரதேச அபிவிருத்திகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளின் போது யாழ் மாவட்ட செயலகத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளை கண்டித்து யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக கண்டன போராட்டமொன்று இடம்பெற்றது. ஈழமக்கள் ஐனநாயக கட்சியினுடைய ஏற்பாட்டில் நேற்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக ஒன்றுகூடிய அக்கட்சியினுடைய உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் வாயில் கதவை அடைத்து போராட்டத்தில்...
" ஆசியாவின் அதிசயமான நாட்டில் வாழ வைப்போம் என இலங்கை மக்களுக்கு தேர்தல் காலத்தில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இன்று ஆசியாவின் படுபாதாளத்துக்குள் நாட்டு மக்களை இந்த குடும்ப ஆட்சி தள்ளியுள்ளது." - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற எம். உதயகுமார் குற்றஞ்சாட்டினார். அத்துடன், நாட்டு மக்களின் தோழன் சஜித்,...
2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் தமிழ்செல்வன் கஜலக்ஸன் 198 புள்ளிகளைப் பெற்றுள்ளார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு 9.55 மணிக்கு பரீட்சைகள் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் வெளியிடப்பட்டன. அதனடிப்படையில் 10.20 மணிவரை உத்தியோகபூர்வமாக வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் கல்வி வலயப்...
நாடளாவிய ரீதியில் மீண்டும் பாரிய சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தனது கையிருப்பில் உள்ள எரிவாயு திங்கட்கிழமை (14) வரை மட்டுமே போதுமானது என பிரதான எரிவாயு விநியோகஸ்தரான லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் தலா 3500 மெட்ரிக் டொன் எரிவாயுவுடன் இரு கப்பல்கள்...
50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் விலையை 350 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் புதிய விலை 1,850 ரூபாயாக அதிகரித்துள்ளது. சீமெந்து மூட்டையின் விலை தற்போது 1,500 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை இன்று (திங்கட்கிழமை) முதல் மேற்கொள்ளப்படமாட்டாது என வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனையில் மாதிரி சேகரிப்பு பணியிலிருந்து வைத்தியர்கள் விலகுவதால் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நிறுத்தப்படுகிறது என அவர்...
தாய்க்கும் மகளுக்கும் கத்தியால் குத்திய நபர் தனது உயிரையும் மாய்க்க முயன்ற நிலையில் மூவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடும்ப பெண் மற்றும் அப்பெண்ணின் மகள் ஆகியோர் மீது ஒருவர் வீடு புகுந்து சரமாரியாக கத்தியால்...
லங்கா IOC நிறுவனம் எரிபொருளுக்கான விலையை அதிகரித்ததை போன்று, ஏனைய நிறுவனங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு வெளியில் நடக்கும் விடயங்கள் காரணமாகவே இவ்வாறான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக...
நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. செரன்டிப் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாணின் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்...
தேசிய ரீதியில் செயற்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கத்தினால் நாடுதழுவிய ரீதியாக எதிர்வரும் 14 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தனது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீண்ட கால அடிப்படையில் காணப்படும் சம்பள முரண்பாடுகள்,...
உணவுப் பொதியின் விலையானது இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 முதல் 30 ரூபாய் வரையில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. மேலும், கொத்து ரொட்டியின் விலையை 10 முதல் 15 ரூபாவினால் அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிபொருட்களின் விலை சடுதியாக அதிகரித்தன் காரணமாக, இந்த...
பேரறிவாளன் சுதந்திர மனிதராக நடமாட வேண்டும் எனும் நீண்ட நாள் கனவு பலித்தது என அற்புதம்மாள் தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தரப்பில் விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரரான பேரறிவாளன் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில்...
மின்சாரம் தாக்கியதில் கணவனும் மனைவியும் பரிதாபமாக உயரிழந்துள்ளனர்.புத்தூரில் இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றது. சம்பவத்தில் மாசிலாமணி குகபிரகாசம் (வயது-59) அவரது மனைவி குகபிரகாசம் சுகுனா (வயது- 55) என்பவர்களே உயிரிழந்தனர். மின் இணைப்பு வயர் துண்டித்து தண்ணீரில் மின் ஒழுக்கு ஏற்பட்டதால் இந்த இடர் இடம்பெற்றது என்று ஆரம்ப விசாரணைகளின் பின் பொலிஸார் தெரிவித்தனர். மகள்...
டொலரின் பெறுமதிக்கு ஏற்றவாறு, ஒளடதங்களின் விலைகளை நியாயமான அளவில் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒளடத இறக்குமதியாளர்களுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அத்துடன், ஒளடதங்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்குமாறு அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்று தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரி மனை யன்னல் மற்றும் யன்னல் கம்பிகள் களவாடப்பட்டுள்ளன. மந்திரி மனையின் பின் பக்கமாக காணப்பட்ட யன்னல்களின் கம்பிகள் மற்றும் யன்னல் என்பவையே பெயர்த்தெடுக்கப்பட்டு திருடப்பட்டுள்ளன. இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கட்டிடத்தின் வரலாற்று பின்னணி மந்திரி மனை...
Loading posts...
All posts loaded
No more posts
