Ad Widget

மீண்டும் பாரிய சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் அபாயம் – லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் மீண்டும் பாரிய சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தனது கையிருப்பில் உள்ள எரிவாயு திங்கட்கிழமை (14) வரை மட்டுமே போதுமானது என பிரதான எரிவாயு விநியோகஸ்தரான லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் தலா 3500 மெட்ரிக் டொன் எரிவாயுவுடன் இரு கப்பல்கள் இலங்கை கடலில் நங்கூரமிட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை ( 14) அக்கப்பல்களில் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்ய கடன் கடிதங்கள் வெளியிடப்பாடாவிட்டால் மீள சமயல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என லிட்ரோ நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஒரு வாரமாக எந்தவொரு சமயல் எரிவாயு சிலிண்டரையும் பிரதான சமயல் எரிவாயு விநியோக நிறுவனமான ‘ லிட்ரோ ‘ நிறுவனம் விநியோகிக்கவில்லை. இதனால் பல பகுதிகளிலும் சமயல் எரிவாயு தட்டுப்பாடு மிக ஆழமாக உணரப்பட்டுள்ளது.

தகனசாலைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள், பேக்கரிகள் என எவற்றுக்கும் எரிவாயு விநியோகம் கடந்த 7 நாட்களில் ( கடந்த வெள்ளி 11 ஆம் திகதிவரை )இடம்பெறவில்லை என லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.

இவ்வாறான நிலையில் நாட்டில் பல உணவங்களுக்கு மேலதிகமாக சுமார் 1000 இற்கும் அதிகமான பேக்கரிகள் சமயல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக கால வரையறையின்றி மூடப்பட்டிருந்தன.

பல உணவகங்களில் சேவைகள் மட்டுப்பாடுத்தப்பட்டன. வீடுகளிலும் சமயல் எரிவாயு தட்டுப்பாடு பாரிய தாக்கங்களை ஏற்படுத்தின. அதன் தக்கம் தற்போதும் தொடர்கிறது.

இவ்வாறான நிலையிலேயே கடந்த வெள்ளியன்று (11) எரிவாயு கப்பல் ஒன்றுக்கு மட்டும் கடன் கடிதம் வெளியிடப்பட்டு அக்கப்பலில் இருந்த 3600 மெட்ரிக் டொன் எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டது.

நாட்டில் ஒரு நாளைக்கு 1100 மெட்ரிக் டொன் எரிவாயு பயன்பாட்டுக்கு அவசியமாவதுடன் அக்கப்பலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு, கையிருப்பானது 14 ஆம் திகதியுடன் தீர்ந்து போகும்.

அவ்வாறன நிலையில் ஏனைய கப்பல்கலுக்கும் கடன் கடிதம் வெளியிடப்பாடது விடத்து, சமயல் எரிவாயு தட்டுப்பாடு மீண்டும் ஏற்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவிக்கிறது.

லிட்ரோ நிறுவனமானது சாதாரண உணவகங்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் 12.5 கிலோ நிறையுடைய 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களை நாளொன்றுக்கு சந்தைக்கு விநியோகிக்கும் நிலையில் கடந்த மார்ச் முதலாம் திகதி முதல் அந்த விநியோக நடவடிக்கைகள் முற்றாக முடங்கியிருந்தன.

இதனைவிட கடந்த 4 ஆம் திகதி முதல், நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தகன சாலைகளில் பயன்படுத்தபப்படும் 37.5 கிலோ நிறையுடைய எரிவாயு சிலிண்டர் விநியோகமும் லிட்ரோ நிறுவனத்தால் நிறுத்தப்பட்டுள்ளன. இத்தகைய சிலிண்டர்கள் நாளொன்றுக்கு 2600 முதல் 3000 வரையில் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளன.

இதனைவிட, முதலாம் திகதி முதல் நளார்ந்த 15 ஆயிரம் சிலிண்டர்கள் வரை விநியோகிக்கப்பட்டு வந்த 5 கிலோ நிறையுடைய சிலிண்டர்கள், 16 ஆயிரம் வரையில் விநியோகம் செய்யப்பட்டு வந்த 2.3 கிலோ நிறையுடைய சிலிண்டர்களின் விநியோகமும் முடங்கியிருந்தன. அவை சீர் நிலைமைக்கு திரும்புவதாக நம்பப்பட்ட நிலையில், மீள தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே நாட்டில் லாப் சமயல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு காணப்படும் நிலையில், நிலவும் டொலர் பிரச்சினை இடையே இனி மேல் சமயல் எரிவாயு இறக்குமதி தொடர்பில் தாம் இரு முறை சிந்திக்கப் போவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Related Posts