வடமாகாண கல்வி அமைச்சை முற்றுகையிட்டு தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்!

தமக்கான நிரந்தர நியமனத்தைகோரி வடமாகாண கல்வி அமைச்சு அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) தொண்டர் ஆசிரியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். நல்லூர் – செம்மணி வீதியில் உள்ள வடமாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் முன்பாக இன்றைய தினம் காலை ஒன்று திரண்ட தொண்டர் ஆசிரியர்கள் அலுவலக பிரதான வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

எரிபொருள் நிரப்பு நிலைய கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவம்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்தும் நோக்கில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் நிலைமையைக் கட்டுப்படுத்த இவ்வாறு இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடுமையான நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. கடும் எரிபொருள் தட்டுப்பாடு...
Ad Widget

மருந்து தட்டுப்பாட்டால் யாழ்.போதனாவில் கண் சத்திர சிகிச்சை இடைநிறுத்தம்!

மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பதில் பணிப்பாளர் மு.நந்தகுமார் தெரிவித்துள்ளார். கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டமை தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. மேலும் சில மருந்துப் பொருட்கள்...

மின் கட்டணம் 500 வீதத்தால் அதிகரிக்கும் அறிகுறி?

மின்கட்டணம் பல மடங்களாக அதிகரிக்கக்கூடும் என தகவல் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “2 ஆயிரத்து 180 ரூபாவாக இருந்த சமையல் எரிவாயுவின் விலை, 4 ஆயிரம் ரூபாவரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை பார்க்கும்போது தலை சுற்றுகின்றது. இந்நிலையில் இன்னும் ஒரிரு நாட்களில் மின்சார...

எரிபொருள், எரிவாயு வரிசையில் காத்திருக்கும் மக்களிடம் மன்னிப்பு கோரினார் இராஜாங்க அமைச்சர்!

எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையில் காத்திருந்து கஷ்டப்படும் மக்களிடம் தாம் மன்னிப்பு கோருவதாக இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். பொலனறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் தற்போது பல பிரச்சினைகள் உள்ளன. தற்போது மக்கள் அரசாங்கத்தை...

முகக்கவசங்களுக்கான விலை இன்று முதல் அதிகரிப்பு!

சந்தையில் முகக்கவசங்களுக்கான விலை இன்று முதல் 30சதவீதத்தினால் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முகக்கவசங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் விதுர அல்கம தெரிவித்துள்ளார். டொலரின் பெறுமதி எதிர்பாராத வகையில் நாளாந்தம் அதிகரிக்கின்றது. சகல விதமான முகக்கவசங்களையும் தயாரிப்பதற்கான...

30 வருடகால இருண்ட யுகத்தை இல்லாதொழித்து வடக்கு மக்களின் சுதந்திரத்தையும்,உரிமைகளையும் மீளப்பெற்றுக்கொடுத்துள்ளோம் – யாழில் பிரதமர்

வடக்கு மாகாணத்தில் காணப்பட்ட 30 வருடகால இருண்ட யுகத்தை இல்லாதொழித்து வடக்கு மக்களின் சுதந்திரத்தையும்,உரிமைகளையும் மீளப்பெற்றுக்கொடுத்துள்ளோம். வடக்கிற்கும்,தெற்கிற்கும் இடையிலான பாலமாக யாழ்தேவி புகையிரதத்தை கருதுகிறேன். எமது ஆட்சியில் இரு மாகாணங்களுக்குமிடையிலான நல்லுறவு அபிவிருத்தி ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 200 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாணம் மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட...

மண்ணெண்ணெய் வரிசையில் காத்திருந்த இரு முதியவர்கள் இதுவரை உயிரிழப்பு!!

மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் வரிசையில் காத்திருந்த நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (20) மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் இந்த இரு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன. கண்டி மற்றும் கடவத்தை பகுதியில் இந்த இரு சோக சம்பவங்களும் பதிவானதாக அவ்வந்த பிரதேசங்களுக்கு பொறுப்பான பொலிஸார் உறுதி செய்தனர். கண்டி - யட்டி நுவர...

மூளாய் பகுதியில் விபத்து : ஒருவர் பலி!!, ஒருவர் காயம் !

யாழ்ப்பாணம் மூளாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள விற்பனை நிலையத்தில் கணக்காளராக பணியாற்றும் காரைநகர் கருங்காலியை சேர்ந்த சங்கரப்பிள்ளை நித்தியானந்தராசா (வயது49) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மாணவனான மூளாயைச் சேர்ந்த ஆனந்தகுமார் கஜீபன் என்ற இளைஞரே...

உணவு இல்லாத காலத்திலும் இனவாதத்தை தூண்டுகின்றது அரசு – சுமந்திரன்

உணவு இல்லாத காலத்திலும் இனவாதத்தை தூண்டும் முகமாக இந்த அரசாங்கம் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. யாழில் உள்ள பௌத்த விகாரைகளுக்கான பிரதமரின் விஜயம் குறித்த கேள்விக்கு பதில் வழங்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார். கடந்த காலத்தைப்போன்று இன்றும் வடக்கில் புத்தர் சிலைகளை வைப்பது பௌத்த தூபிகளை நிர்மாணிப்பது...

யுத்தம் காரணமாக மூடப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சென்றார் பிரதமர் மஹிந்த!

யுத்தம் காரணமாக மூடப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை விஜயம் செய்தார். 1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 1990 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மூடப்பட்டது. 2021 பெப்ரவரி 08 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்தின் படி காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் எஞ்சிய கட்டிடங்களை...

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் விரைவில் 20 புதிய சதொச விற்பனை நிலையங்கள் திறக்கப்படும்!!

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் விரைவில் 20 புதிய சதொச விற்பனை நிலையங்களை திறக்க உள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வர்த்தக துறை அமைச்சர் பந்துல செனவரத்ன யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கைத்தொழில் மற்றும் வர்த்தகம் சம்பந்தமான கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும்...

வடக்கில் இருந்து பனங்கள்ளினை ஏற்றுமதி செய்ய முயற்சி!!

பனங்கள்ளு வடக்கில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கைத்தொழில் வர்த்தகதுறை சம்பந்தமான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போதைய சூழ்நிலையில் வர்த்தக துறை அமைச்சானது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்து ஏற்றுமதியினை...

மண்ணெண்ணெய்க்காக வரிசையில் காத்திருந்த பெண் மயக்கம்!

இலங்கையில் மண்ணெண்ணெய்க்காக 2 கிலோமீட்டர் நீளமான வரிசையில் காத்திருந்த பெண்ணொருவர் மயக்கமடைந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு அதே வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் முதலுதவி செய்வது போன்ற புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

ஒரு வாரத்தில் அனைத்து அரச மருத்துவமனைகளும் மூடப்படும் அபாயம்?

இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து அரச மருத்துவமனைகளும் மூடப்படும் நிலை உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் மருத்துவர் ருக்ஷான் பெல்லன இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். அரசாங்க மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய மருந்துகளை அரசாங்கம் வழங்காவிட்டால் இந்த நிலை ஏற்படும் எனவும் அவர்...

முருகன் ஆலயத்தில் புத்தர் சிலை – அனுமதிக்க முடியாதென தீர்மானம்!!

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் புத்தர் சிலைகளை வைத்து பிரித் ஓதுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாதென ஆலய தர்மகத்தா சபையும் ஆலய பக்தர்களும் ஒன்றிணைந்து தீர்மானமொன்றை எடுத்தனர். ஆலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு...

வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் கைது!

யாழில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்த நிலையில் மானிப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட...

ஒருலட்சம்தானா எனது பிள்ளையின் பெறுமதி? கோகிலவாணி கேள்வி

ஒருலட்சம்தானா எனது பிள்ளையின் பெறுமதி? அவ்வாறு எனது பிள்ளையை பெறுமதி தீர்க்க இவருக்கு என்ன அருகதை இருக்கின்றது? என கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி இராமநாதன் கோகிலவாணி கேள்வி எழுப்பியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகள் சங்க அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு...

நாடளாவிய ரீதியில் இன்று முதல் வழமைக்கு திரும்புகின்றது எரிவாயு விநியோகம்!

நாடளாவிய ரீதியில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் எரிவாயு விநியோகம் செய்யப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு படிப்படியாக நீங்கும் எனவும் லிட்ரோ நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது....

ஜனாதிபதியுடனான கூட்டமைப்பின் கலந்துரையாடல் இரத்து!!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இன்று இடம்பெறவிருந்த சந்திப்பு 25 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகம் ஒத்திவைப்பது குறித்த அறிவித்தது என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எமக்கு உறுதிப்படுத்தினார். ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்போகும் விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தற்போது கலந்துரையாடி வருகின்றனர். குறித்த கலந்துரையாடல்...
Loading posts...

All posts loaded

No more posts