Ad Widget

நாடளாவிய ரீதியில் இன்று முதல் வழமைக்கு திரும்புகின்றது எரிவாயு விநியோகம்!

நாடளாவிய ரீதியில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் எரிவாயு விநியோகம் செய்யப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு படிப்படியாக நீங்கும் எனவும் லிட்ரோ நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் இருந்த 3 ஆயிரத்து 500 தொன் எடை கொண்ட எரிவாயுவை இறக்கும் பணி நேற்று பிற்பகல் ஆரம்பமானது.

எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக ஓமான் நிறுவனத்திற்கு 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எவ்வாறாயினும், நேற்றைய தினமும் எரிவாயு இன்றி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியிருந்ததுடன், நாடளாவிய ரீதியிலள்ள எரிவாயு நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மண்எண்ணெய் பெறுவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மக்கள் வருவதால், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மண்ணெண்ணெய் வரிசையும் காணப்பட்டது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related Posts