அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

எதிர்வரும் 2 வாரங்களில் நாடு முழுவதும் அரச துறையில் மட்டுமன்றி தனியார் துறையிலும் அத்தியாவசிய ஒளடதங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அரச ஒளடதவியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்க்கான மருந்துகள் குறைவடைந்துள்ளது என அந்த சங்கத்தின் தலைவர் அஜித் திலக்கரத்ன தெரிவித்தார்.

கடன் சான்றுப் பத்திர விடுவிப்பு, திறைசேரியால் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒளடத தட்டுப்பாடு ஏற்படுகிறது.

அதேநேரம், டொலர் பிரச்சினை காரணமாக தனியார் துறையிலும் ஒளடத தட்டுப்பாடு ஏற்படும் என அரச ஒளடதவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் திலக்கரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிக்கையில் இவ்வாறான அடிப்படையில், ஒளடத தட்டுப்பாடு ஏற்படாது எனத் தெரிவித்துள்ளார். 4 மாதங்களுக்கான ஒளடதங்கள் களஞ்சியத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts