வடக்கு கிழக்கு மக்களின் இதயம் எனக்கு தெரியும்:போர் வெற்றி விழாவில் ஜனாதிபதி

வடக்கு கிழக்கு மக்கள் தேர்தலொன்றில் பொன்னம்பலத்தை தோல்வியடையச்செய்து கொப்பேகடுவையை வெற்றிப்பெறச்செய்தவர்கள். அங்குள்ள மக்களின் இதயத்தைப்பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

த.தே.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிக்களுக்கிடையில் மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம்! சிவாஜிலிங்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிக்களுக்கிடையில் இந்த மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. (more…)
Ad Widget

யாழ் மற்றும் வன்னியில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இராணுவத்தினர் அவசியம்!- கோத்தபாய

வடக்கில் யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இராணுவத்தினரின் பிரசன்னம் அவசியமானது என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று காலை 11 மணி தொடக்கம் 12.30 மணிவரையில் மாணவர்களால் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

புலிகளை நினைவு கூர்ந்து பொது நிகழ்வுகளை நடாத்துவது தண்டனைக்குரிய குற்றம்!- இராணுவம்

இறுதி யுத்தத்தில் இறந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை நினைவு கூர்ந்து பொது நிகழ்வுகளை நடாத்துவதோ அனுஷ்டிப்பதோ தண்டனைக்குரிய குற்றமாகும். (more…)

வடக்கு இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது!– அரசாங்கம்

வடக்கு இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.வெளிநாட்டுச் சக்திகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைக்கு அமைய இராணுவ முகாம்களை அகற்றிக்கொள்ள முடியாது. (more…)

யாழ்.பல்கலைக்கழத்திலிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேறினார்கள்! இராணுவம் குவிப்பு! மாணவா்கள் பதற்றம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் அஞ்சலி நிகழ்வுகளை நடாத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேறிச் சென்றுள்ளனர். (more…)

வடமாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க 721, 488 பேர் தகுதி: பிரதி தேர்தல் ஆணையாளர்

வடக்குமாகாண சபைத் தேர்தல் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு பட்டியலின் அடிப்படையிலேயே நடைபெறும் என்றும் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு 721, 488 பேர் தகுதியுடையவர்களாக உள்ளனர் என்று (more…)

கழுத்தை வெட்டி கொன்றவருக்கு மரண தண்டனை!

ஊர்காவற்துறை சரவணை பகுதியில் கழுத்து வெட்டி கொலை செய்த நபருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. (more…)

அம்மனுக்கு போலி நகையை தானம் செய்த பெண் கைது

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு போலி நகையினை தானமாகக் கொடுத்ததுடன், தகராறிலும் ஈடுபட்ட பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)

3 பெண் பிள்ளைகள் கொலை:தந்தைக்கு எதிரான வழக்கு நீதியமைச்சருக்கு மாற்றம்

மன வளர்ச்சி குன்றிய பெண் பிள்ளைகள் மூவரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தந்தைக்கு எதிரான வழக்கு விசாரணையின் ஆவணங்கள் நீதியமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. (more…)

இந்திய பிரஜை நலன்புரி முகாமிற்கு அனுப்பி வைப்பு

யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட இந்திய பிரஜை மிரிஹான நலன்புரி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். (more…)

யாழ். பிரதேச செயலரை கைதுசெய்வேன்: சமன் சிகேரா

யாழ். பிரதேச செயலரை விரைவில் கைதுசெய்யவுள்ளதாக யாழ்.தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார். (more…)

வடமாகாணத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு நிலுவைக்கொடுப்பனவு வழங்கப்பட்டது

வடமாகாணத்தில் கடமையாற்றி வரும் ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவைக்கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை வடமாகாண ஆளுனர் செயலகத்தில் நடைபெற்றது. (more…)

மக்கள் முன்னணியின் சுவரொட்டிகள்

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட தினத்தை நாம் கொண்டாடுவோம் என்ற வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. (more…)

காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த வர்த்தகர்களிடம் தண்டப்பணம் அறவீடு

காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 27 வர்த்தகர்களுக்கு 1 லட்சத்து 2 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணம் நீதிமன்றங்களினால் அறவிடப்பட்டுள்ளதாக பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ்.மாவட்ட அதிகாரி என்.சிவசீலன் தெரிவித்தார். (more…)

ஆட்டோக்களுக்கு ஸ்ரிக்கர்; விரைவில் பதிவு செய்யுமாறு கோரிக்கை

யாழ். மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்ரிக்கர் ஒட்டும் நிகழ்வு இன்று யாழ். மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் இடம்பெறவுள்ளதாக யாழ்.மாவட்ட முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் தெரிவித்தார். (more…)

10 இலட்சம் செலவில் நிமிர்ந்து நிற்கும் யாழ்.மணிக்கூட்டு கோபுரம்

யாழ். மணிக்கூட்டு கோபுர திறப்பு விழா இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.யாழ்.மாநகரப் பகுதியில் மீள் நிர்மானப்பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை திறக்கப்படவுள்ளது. (more…)

சுற்றுலா வீசாவில் நாட்டுக்குள் பிரவேசித்து வர்த்தகத்தில் ஈடுபட்ட இந்தியர் கைது

சுற்றுலா வீசாவில் இலங்கை வந்து வர்த்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்தியர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

சங்கானை பிரதேச வைத்திய சாலையின் முன்மாதிரியான செயற்பாடுகள்

சங்கானை பிரதேச வைத்தியசாலையின் முன்னோடி செயற்பாடுகள், வேலைத்திட்டங்களை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் நோயாளர் நலன்புரி சங்க நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டு அறிந்துகொண்டனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts