Ad Widget

ரூ.100 மில்லியன் அபிவிருத்தி திட்டம் நெடுந்தீவில் ஆரம்பம்

daklas-nedunthevuபொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் 100 மில்லியன் ரூபா அபிவிருத்தி திட்டமொன்று நேற்று வெள்ளிக்கிழமை நெடுந்தீவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழ் தீவுப்பகுதியில் உள்ள 3 பிரதேச சபைகளுக்கும் அமைச்சர் டக்களஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கிணங்க 300 மில்லியன் ரூபாவினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் நெடுந்தீவு பிரதேசத்த்தின் அபிவிருத்திக்கென 42 திட்டங்கள் முன்னொழியப்பட்டு 100 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ளது.

நேற்றயதினம் நெடுந்தீவுக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த அபிவிருத்தித் திட்டங்களை அரம்பித்து வைத்ததுடன் பொது மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

இந்த நிகழ்வுகளில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின், யாழ் அரச அதிபர் சுந்தரம்அருமைநாயகம், வடபிராந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் உடவத்தை, யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி மோகனேஸ்வரன், பிரதேச செயலாளர் ஆ.சிறி, பிரதேச சபைத் தவிசாளர், யாழ் மாவட்ட ஈழமக்கள் ஜனநாயக் கட்சின் அமைப்பாளர் க.கமலேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நெடுந்தீவுக்கு ரூ.4 கோடி செலவில் புதிய படகு

நெடுந்தீவு மக்களின் போக்குவரத்து நடவடிக்கையினை மேம்படுத்த வடதாரகை போன்று புதிய படகொன்றை சேவையில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய 4 கோடி ரூபா செலவில் புதிய படகொன்று கடற்படையினரின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கடற்படையினரின் உதவியுடன் மூன்று மாதங்களுக்குள் இந்த புதிய படகுச் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இப்பகுதி மக்களின் தேவைகள் குறித்து உரிய கவனங்கள் செலுத்தப்பட்டு வருவதுடன் மின்சாரம் இல்லா பகுதிக்கு விரைவில் அதனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts