Ad Widget

முன்னாள் புலி உறுப்பினர் விடுதலை

judgement_court_pinaiமுப்படை மற்றும் பொலிஸார் மீது தாக்குதல்களை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த முன்னாள் விடுதலை புலிகளின் உறுப்பினர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி சுனந்த குமார ரத்நாயக்கா முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்திய போதே நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், பருத்தித்துறையை சேர்ந்த முன்னாள் விடுதலை புலி உறுப்பினர் ஒருவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த திகதியொன்றில் வில்பத்துவ வனப் பகுதியிலிருந்து பாதுகாப்புப் படையினருக்கு தாக்குதல் நடாத்தினார் என்று அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

சந்தேக நபர் தற்பொழுது கடும் நோய்வாய்பட்டுள்ளதோடு அவரது உடலின் ஒரு பகுதி இயங்காதுள்ளதாகவும் அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதவான் சந்தேக நபரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

Related Posts