யாழ்.மத்திய புகையிரத நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் பார்வையிடல்

யாழ்ப்பாணத்தில் நவீன முறையில் புனரமைக்கப்பட்டு வரும் மத்திய புகையிரத நிலையத்தின் புனரமைப்புப் பணிகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே சிங்ஹா ஆகியோர் பார்வையிட்டனர். (more…)

யாழ். துரையப்பா மைதான புனரமைப்பு : அடிக்கல் நாட்டினார் பஸில்

இலங்கை - இந்திய நட்புறவின் கீழ், இந்திய அரசாங்கமும் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து 145 மில்லியன் ரூபாய் செலவில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கை புனரமைப்பு செய்யவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, (more…)
Ad Widget

கச்சத்தீவை மீட்க இலங்கை மீது போர் தொடுக்க முடியுமா? – இந்திய அரசின் சட்டத்தரணி

கச்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கில் இரு நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்று சென்னை உச்ச நீதிமன்றம் தெரிவித்ததுடன், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு குறித்து இந்திய மத்திய அரசிடம் மனு அளிக்கலாம் என்றும் கூறியுள்ளது. (more…)

வாரியபொல யுவதி பொலிஸில் முறைப்பாடு

வாரியபொலயில் இளைஞர் ஒருவரை அறைந்தார் என்று கூறப்படும் 21 வயதுடைய திலினி அமல்கா என்ற யுவதி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண செவ்வாய்க்கிழமை (26) தெரிவித்தார். (more…)

இராணுவத்தின் வசம் உள்ள காணிகளை பயிர்செய்கைக்காக தருமாறு கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு பிரதேசத்தில் இராணுவ தேவைக்காக எடுக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள வயல் காணிகளில் எதிர்வரும் மாதங்களில் காலபோகச் செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும் (more…)

மனைப்பொருளியல், அழகுக்கலை பயிற்சியை ஆரம்பிக்க நடவடிக்கை

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஆதரவுடன் உடுவில் பிரதேச செயலகத்தால், அழகுக்கலையும் மனைப் பொருளியலுக்குமான பயிற்சிநெறி எதிர்வரும் செப்டெம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக பிரதேச செயலக கிராம அபிவிருத்தி அலுவலர் க.சாந்தநாயகம் இன்று தெரிவித்தார். (more…)

சர்வதேசத்தின் இராஜதந்திர போக்குகளை புரிந்து செயற்பட வேண்டும்: மாவை

உலக நாடுகளின் இராஜதந்திரப் போக்குகளை நாம் புரிந்துகொண்டு செயற்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்தவகையில், இந்தியாவின் இராஜதந்திரப் போக்குளையும் செயற்பாடுகளையும் உணர்ந்து செயற்பட வேண்டியதும் கட்டாயமாகும் (more…)

பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயம் குறித்த நிகழ்ச்சி நிரல்!

இலங்கைக்கான மூன்று நாள் விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸின் இலங்கை விஜயம் குறித்த நிகழ்ச்சி நிரலை கத்தோலிக்கத் திருச்சபையின் சார்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். (more…)

இரண்டு உயிர்களை காவுகொண்ட ஐஸ் பக்கட் சவால்

தற்போது உலகலாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற விடையம் ஐஸ் பக்கட் சவால், இதனை பலர் வினோதமாக எடுத்துக்கொண்டாலும் சில சமயங்களில் அது ஆபத்தில் வந்து முடிகின்றது. அவ்வாறான சம்பவங்கள் அமெரிக்கா மற்றும் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்றுள்ளன. (more…)

பஸிலுக்கு சி.வி.கே.சிவஞானம் கடிதம்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தி வரும் ஒருங்கிணைந்த அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக அபிவிருத்திச் செயற்றிட்டங்களை அமுல்படுத்தல் எனும் திட்டத்துக்காக விதித்துரைக்கப்பட்ட கொள்கைகளும், நடைமுறைகளும் வெளிப்படையாகவே மீறப்படுகின்றன என்பதை வலியுறுத்தி, (more…)

வரி அனுமதிப்பத்திர குறுந்தகவல் திட்டம் அறிமுகம்

வாகனங்களுக்கான வரி அனுமதிப்பத்திரம் தொடர்பான நினைவூட்டலை குறுந்தகவல் ஊடாக வழங்கும் சேவையை கரவெட்டிப் பிரதேச செயலக பிரிவில் செவ்வாய்க்கிழமை (26) முதல் அறிமுகப்படுத்தியுள்ளதாக கரவெட்டி பிரதேச செயலாளர் எஸ்.சிவஸ்ரீ தெரிவித்தார். (more…)

சுயதொழில் கொடுப்பனவுகள் வழங்கிவைப்பு

வட மாகாண சமூக சேவை திணைக்களத்தால், வலி. கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 21 பயனாளிகளுக்கு முதற்கட்ட சுயதொழில் கொடுப்பனவாக தலா 7500 ரூபாய் கடந்த வாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் ம.பிரதீபன் செவ்வாய்க்கிழமை (26) தெரிவித்தார். (more…)

விபத்தில் இரு வயோதிபர்கள் படுகாயம்

யாழ்ப்பாணம், முதிரைச் சந்தியில் வானொன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிபர் ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) காலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வீதியில் வெற்றிலை எச்சில் துப்பினால் அபராதம்

எல்லாவற்றுக்கும் வரி விதிக்கும் அரசாங்கம், வீதியில் வெற்றிலை எச்சில் துப்பினால் அதற்கு அபராதம் விதிக்கவுள்ளது (more…)

வடக்கில் பொருட்களை கொள்வனவு செய்து பொருளாதாரத்தை உயர்த்துங்கள் – ஜெயசேகரம்

விடுமுறை காலத்தில் தமது ஊருக்கு வரும் போது வேறுநாடுகளில் பொருட்களை கொள்வனவு செய்யாது போரினால் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ள உங்கள் பகுதியில் கொள்வனவு செய்து வருமானத்தினை உயர்வடைய செய்யுமாறு (more…)

அச்சுவேலி கைத்தொழில் பேட்டை திறப்புடன் துரையப்பா அரங்கிற்கும் அடிக்கல்

இந்திய அரசின் நிதியின் பங்களிப்புடன் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட அச்சுவேலி கைத்தொழில் பேட்டை இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. (more…)

முகப்புத்தகத்தில் அவதூறு – சகோதரன் மீது தாக்குதல்

கிராமமொன்றைப் பற்றி முகப்புத்தகத்தில் அவதூறாக பதிவேற்றம் செய்த ஜேர்மனில் வசிக்கும் இளைஞர் ஒருவரின் யாழ்ப்பாணத்திலுள்ள சகோதரன் மீது தாக்குதல் நடத்திய இருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. (more…)

வரிப்பணம் செலுத்த தவறின் சட்ட நடவடிக்கை – இறைவரி திணைக்கள யாழ். மாவட்ட ஆணையாளர்

யாழ்ப்பாணத்தில் 3000 பேர் வரையிலேயே இறைவரி திணைக்களத்திற்கு வருமானவரி செலுத்தி வருகின்றார்கள் என யாழ். மாவட்ட ஆணையாளர் மு.கணேசராசா தெரிவித்தார். (more…)

ரஷ்யத் துருப்பினர் தவறுதலாக எல்லையைக் கடந்தனர்

யுக்ரைனில் கைது செய்யப்பட்டுள்ள 10 ரஷ்ய இராணுவத் துருப்புக்களும், தவறுதலாக எல்லையைக் கடந்து சென்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. (more…)

அஜித், விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுத்த குஷ்பு!

டுவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் குஷ்பு. இவர் தினமும் தன் ரசிகர்களின் கேள்விகளுக்கு முடிந்தவரை பதில் அளிப்பார். அல்லது தனியாக ஒரு நாள் இதற்காகவே நேரம் ஒதுக்குவார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts