- Sunday
- April 5th, 2026
பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டாவை மேலும் ஒரு வாரத்திற்கு தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி முச்சக்கர வண்டிகளுக்கு – 8 லீட்டரும், மோட்டார் சைக்கிள்களுக்கு – 7 லீட்டரும்பேருந்துகளுக்கு – 60 லீட்டரும், கார் – 30, லொரி – 75 லீட்டரும் வழங்கப்படும். அதேவேளை வேன்கள்- 30 லீட்டரும் land vehicles...
இன்று (18) அனைத்து இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளும் யாழ்ப்பாண நீதி மன்றில் ஆஜராக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண வணிக கழகத்தின் தலைவர் ஜெயசேகரன் தெரிவித்தார். நல்லை ஆதீனத்தில் இந்து அமைப்பு பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்தித்தின்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். சித்திரை புத்தாண்டு தினத்தன்று தீவக நுழைவாயிலில் நயினா தீவு அம்மனின் சிலை ஒன்று...
உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளைக் எதிரித்து விமர்சித்த குற்றச்சாட்டில் எதிர்க்கட்சி ஆர்வலர் விளாடிமிர் காரா-முர்சாவுக்கு ரஷ்யாவில் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் ரஷ்ய இராணுவத்தைப் பற்றிய "தவறான" தகவல்களைப் பரப்பி, "விரும்பத்தகாத அமைப்புடன்" இணைந்திருந்த தேசத் துரோகத்தின் குற்றவாளியாக கருதப்படுகின்றார். தேசத்துரோகம் மற்றும் ரஷ்ய இராணுவத்தை அவதூறு செய்த குற்றச்சாட்டின் கீழ் கிரெம்ளின் எதிர்ப்பாளர்...
தினமும் மூன்று லீட்டருக்கும் அதிகமான நீரினை பருகுங்கள் என யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடுமையான வெப்பமான கால நிலை நிலவி வருவதனால், உடலில் உள்ள நீர் சத்துக்கள் இழக்கப்படும். அதனால் சூரியன் உச்சம் கொடுக்கும் மதிய நேரங்களில் வெளி பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள். தினமும் 3 லீட்டர்...
அரிசி, சீனி மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பதால் இவ்வாறு பொருட்களின் விலைகள் உயரும் என தெரிவிக்கப்படுகின்றது. கொள்கலன் போக்குவரத்து குறித்து நிர்ணயிக்கப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளமை காரணமாக இறக்குமதியானர்கள் இந்தக் கட்டணங்களை...
யாழ்.போதனா வைத்தியசாலையில் மீளவும் கொவிட்19 தனிமைப்படுத்தல் விடுதி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை பெண் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மேலும் 3 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் மீளவும் போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தமிழர் மரபுரிமைகளைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் மேற்கொள்ளப்பட்ட அடையாள உண்ணாநோன்புப் போராட்டம் பழரசம் வழங்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டது. தமிழர் மரபுரிமைகளைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்புப் போராட்டமும் கையெழுத்துப் போராட்டமும் நல்லூரில் ஆரம்பமாகியது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் முன்பாக நேற்று (16) காலை 9 மணி அளவில் இப்போராட்டம்...
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசணி அம்மனின் திருவுருவச் சிலை தொடர்பில் யாழ். நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை அவ்விடத்தில் அமைந்துள்ள வீதி வழிகாட்டி பலகையில் யாழ்ப்பாண பொலிஸார் ஒட்டியுள்ளனர். யாழ். பண்ணைச் சுற்று வட்டத்தில் திடீரென தோன்றிய நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி யாழ்ப்பாண பொலிஸார் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். இந்நிலையில், நீதிமன்றினால்...
உக்ரைனில் இருந்து தானியங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு போலந்தும் ஹங்கேரியும் தடை விதித்துள்ளன. போலந்து பிரதம மந்திரி அலுவலகம் இந்த நடவடிக்கை "போலந்து விவசாய சந்தையை ஸ்திரமின்மைக்கு எதிராக பாதுகாக்க" என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து, போலந்து நாட்டின் முடிவு குறித்து உக்ரைன் வருத்தம் தெரிவித்துள்ளது. "ஒருதலைப்பட்சமான கடுமையான நடவடிக்கைகளால் பல்வேறு சிக்கல்களைத்...
இந்தியப் படைகளால் தமிழர் தாயகத்தில் வலிந்து திணிக்கப்பட்ட போரையும் அடாவடிகளையும் நிறுத்த வலியுறுத்தி மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத அறப்போர் புரிந்து காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்து தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப்போராட்டத்தின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (12.04.2023) புதன்கிழமை யாழ் பல்கலை மாணவர்களால் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத்தின்...
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த பனாமா நாட்டு கப்பலில் பதுங்கியிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற குறித்த நால்வரும் கப்பல் ஊழியர்களால் அடையாளம் காணப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். வேலணை, தொண்டமனாறு, புதுக்குடியிருப்பு மற்றும் அராலி வடக்கு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 21, 22 மற்றும் 35 வயதுடைய நால்வரே...
பரந்தன் புகையிரத நிலையத்திற்குள் புகுந்த குண்டர்கள் தாக்குதல் காரணமாக ஊழியர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பரிவுக்குட்பட்ட பரந்தன் புகையிரத நிலைய பகுதியில் நேற்று மாலை மதுபானம் அருந்திய குழுவினரிடம் அப்பகுதியில் மதுபானம் அருந்த வேண்டாம் என ஊழியர்களால் கூறப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த குண்டர் கும்பல் பரந்தன் ரயில் நிலைய...
காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தத கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பயணிகள் படகு சேவையை தொடங்கும் வகையில் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது. இந்த நடவடிக்கை பயணிகள் போக்குவரத்துத் திட்டம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்திப்பகுதியில் வைத்து நேற்று மாலை ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி தெரிவித்துள்ளனர். குறித்த இடத்தில் வசிக்கின்ற 20 வயதான இளைஞர் மனநல சிகிச்சைகளுக்காக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம்...
கடந்த வார இறுதியில்,மிகவும் இரகசியமான அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள் இணையத்தில் கசிந்து உலக அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இரகசிய ஆவணங்களில் இருந்து பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளன. பெப்ரவரி 17 ஆம் திகதியிட்ட ஆவணத்தின் ஒற்றை பகுதி, ஜனாதிபதி அல்-சிசி மற்றும் மூத்த எகிப்திய இராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்ததாக கூறப்படும் உரையாடல்களை...
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலை திட்டமிட்டபடி நடத்த பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், தேவையான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததாலும், ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களாலும் தேர்தலை ஒத்திவைக்க நேரிட்டதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. உள்ளூராட்சி...
எதிர்வரும் சில மாதங்களில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம் என பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார். கடந்த வாரம் பால் மாவின் விலை குறைக்கப்பட்டது. இதற்கமைய...
அரசாங்கத்திற்கு சொந்தமான அச்சுவேலி நெசவுசாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரிந்த மதப் பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் அச்சுவேலி நெசவுசாலை முன்றலில் இன்று(செவ்வாய்கிழமை) காலை 8 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யுத்தத்தின் பின் இயங்காத குறித்த நெசவுசாலை கட்டடத்தில் ஒரு மதஸ்தலம் அமைக்கப்பட்டு பிரார்த்தனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன....
வைகாசி 15ஆம் திகதி நடைபெறவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. அன்றைய தினம் பரீட்சையை நடத்த முடியாது என்பதனால் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து 29 ஆம் திகதி பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் புதிய வாரிக்கொள்கை மற்றும் அதற்கு எதிரான ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக முன்னதாகவும்...
எதிர்வரும் பண்டிகை காலத்தில், சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி,தாங்கள் முன்னெடுக்கப்போகும் நடவடிக்கைகள்,சுற்றுலா பயணங்கள் பற்றிய விபரங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,"நாட்டில் அண்மைய நாட்களில் திட்டமிடப்பட்ட...
Loading posts...
All posts loaded
No more posts
