விலைக்குறைப்புச் செய்யாத உணவகங்களின் புகைப்படத்தை வெளியிடுங்கள் : அசேல சம்பத்

கொத்துரொட்டி மற்றும் பிரைட் ரைஸின் விலைகளைக் குறைக்காத உணவகங்களின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுமாறு அகில இலங்கை சிற்றுச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஹோட்டல் துறைக்கு மின் கட்டணம் 27 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், 5 ஆயிரம் ரூபாயிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட சமயல் எரிவாயுவின் விலை, 2900 ரூபாய் அளவில் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால்தான் கொத்துரொட்டி மற்றும் பிரைட் ரைஸின் விலைகளை 10 வீதத்தால் குறைக்க நாம் தீர்மானித்துள்ளோம்.

இன்று முதல் இது நடைமுறைப்படுத்தப்படும். எனவே, நுகர்வோர் இன்றுமுதல் இந்த விலைக்குறைப்புடன் இவற்றை கொள்வனவு செய்ய முடியும்.

அதையும்மீறி, ஏதேனும் ஒரு ஹொட்டலில் பழைய விலையில் இவை விற்கப்பட்டால், அந்த ஹொட்டலின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிடுமாறும் நுகர்வோரிடத்தில் கேட்டுக் கொள்கிறேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts