நள்ளிரவில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரழப்பு!!

இன்று நள்ளிரவில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வரணி சுட்டிபுரம் பகுதியில் இன்று (05.07.2023) நள்ளிரவு வேளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் வடமராட்சி தேவரையாளி பகுதியைச் சேர்ந்த புஸ்பராசா ராஜ்குமார் (30) என்ற இளம் குடும்பத்தர் உயிரிழந்துள்ளர்.

நண்பர் ஒருவரை சாவகச்சேரியில் இறக்கிவிட்டு வடமராட்சி தேவரையாளி பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்ற வேளையில் மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதிய விபத்து ஏற்பட்டுள்ளது.

திருமணமாகி ஒரு வருடம் கழிந்துள்ள நிலையில் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இளைஞனின் மரணம் அந்தப்பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts