Ad Widget

குருந்தூர் மலையில் சர்ச்சையை ஏற்படுத்திய நினைவு கல்வெட்டு!

குருந்தூர் மலையில் பௌத்தாலோகா நற்பணி மன்றத்தின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவு கல்வெட்டு விடயமானது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட விகாரைக்கு அருகில் பாரிய கருங்கல்லினால் மூன்று மொழிகளிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இந்த நினைவு கல்வெட்டு தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குறிய கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த நினைவு கல்வெட்டில், “வெற்றி உண்டாகட்டும்” என்ற தலைப்பில், “முல்லைத்தீவு குருந்தி விகாரையில் அமைந்துள்ள இந்த பிரமாண்டமான தூபி இரண்டாயிரம் வருடங்களை கடந்து பெருமைமிக்கது.

37 அடி உயரமும் 16.5 அடி ஆரையும்கொண்டது இலங்கையில் தற்போது காணப்படுகின்ற தூபிகளில் முற்றத்தில் இருந்தே செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரே ஒரு தூபி இதுவென்பதோடு இதற்கு கீழே காணப்படும் சுவரில் சுமார் இரண்டு அடி உயரம் கொண்ட யானைகளின் வரிசை, யானைகளுக்கிடையே காணப்படும் தூண்கள்,தூபியின் வளையம் உட்பட அனைத்தும் செதுக்கல் வேலைப்பாடுகளும் செங்கற்களாலே செதுக்கப்பட்டுள்ளது.

கலகமுவ சாந்த போதி தேரரின் வழிகாட்டல்களின் கீழ் தொல்பொருள் திணைக்களத்தின் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் அனுரமனதுங்க அவர்களின் பங்குபற்றலுடன், தொல்பொருள் அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழும், இலங்கையின் இராணுவம் மற்றும் சிவில்பாதுகாப்பு படையினரின் அயராத பங்களிப்புடனும், பௌத்தாலோக நற்பணி மன்றத்தின் முழுமையான நிதி பங்களிப்புடனும் தொல்பொருள் திணைக்களத்திடம் கையளிக்கப்படுகின்றது.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குருந்தூர்மலை விகாரை கட்டுவதற்கு தொல்பொருள் திணைக்களம் அனுமதி வழங்கியதா? என்றகேள்வி எழுந்துள்ளது.

தொல்பொருள்திணைக்களம் அகள்வாராச்சி என சொல்லப்பட்ட இடத்தில் பௌத்தாலோகா நற்பணி மன்றத்தினால் எவ்வாறு கட்டப்பட்டது என ஆதி அய்யனார் ஆலய சட்டத்தரணிகளால் அந்த இடத்தில் வைத்து நீதிபதிக்கு ஆட்சேபனையினை தெரிவித்துள்ளார்கள்.

மேலும், நினைவுக்கல் பெயர்பலகை தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் நிறுவப்பட்டுள்ளது என்று தொல்பொருள் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இங்கு கல்லில் பொறிக்கப்பட்ட விடயங்கள் எதிர்காலத்தில் செய்யப்படவுள்ள விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளதே தவிர நிகழ்கால விடயங்கள் சுட்டிக்காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts