முல்லைத்தீவில் மர்மநபர்களால் ஒருவர் சுட்டுக்கொலை!!

முல்லைத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்லாவி, பாலிநகர் பகுதியில் நேற்று இரவு வீடொன்றில் நுழைந்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். எனினும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு...

இலங்கையை உலுக்கிய கோர விபத்துக்கான காரணம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்

பொலன்னறுவை – மனம்பிடிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்திற்கு சாரதியின் கவனயீனமே காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று ஆற்றில் வீழ்ந்தமையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கதுருவெலயிலிருந்து...
Ad Widget

ரஷ்யாவிற்கு கடும் எச்சரிக்கை!!

உக்ரைனின் துப்பாக்கி சுடும் வீரர் ஒருவரால் 5,900 அடி தொலைவில் இருந்து ரஷ்ய தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். உக்ரைனின் பேய் படையின் ஆல்ஃபா என அறியப்படும் உக்ரைன் துப்பாக்கி வீரர் ஒருவரால் பக்மூத் நகரத்தில் வைத்து ரஷ்ய தளபதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆல்ஃபாவால் 5,900 அடி தொலைவில் இருந்து கொல்லப்பட்டவர் பிராந்திய படைகளின் துணைத்தளபதி எனவும்...

மனிதப் புதைகுழிக்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பாக உரிய விசாரணைகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இதில் காணாமல் போனவரின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் சமூக செயற்பாட்டாளர்கள் அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு...

சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்த விசேட அறிவிப்பு!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் காலப்பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில் உயர் தரப் பரீட்சைகள் இந்த ஆண்டின் இறுதியிலும், சாதாரணத் தரப் பரீட்சைகள் 2024 ஆம் முதல் காலாண்டிலும் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...

அபிவிருத்தி என்ற பெயரால் தமிழர் நிலங்களை கையகப்படுத்த முயற்சி!! : ஐங்கரநேசன்

வடக்கில் சீனித் தொழிற்சாலை அமைப்பது என்பது தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அபிவிருத்தி என்ற பெயரால் நிரந்தரமாகவே கையகப்படுத்தும் ஒரு தந்திரமுமாகும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். வவுனியாவில் சீனித்தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

மண்டைதீவு கிணற்றில் 60 இற்கும் மேற்பட்ட இளைஞர்களின் உடல்கள்!!

மண்டைதீவு தூமையார் ஆலயக் கிணற்றில் 60 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு ஆலயக் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்; தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்டபாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் கொக்குதொடுவாயில் பல பெண் போராளிகளின்...

மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டுமெனக் கோரிக்கை!

முல்லைத்தீவு மற்றும் மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேசம் தீவிர கவனத்தை செலுத்த வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், தமிழர் பகுதிகளிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றினால், மேலும் பல மனித புதைக்குழிகளை கண்டறிய முடியும் என்றும் இவர்கள் தெரிவித்தனர். மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர்...

ஐஸ்லாந்தில் அதிகரிக்கும் நில அதிர்வுகள்!

ஐஸ்லாந்தில் தலைநகர ரெய்க்ஜாவிக் பகுதியில் கடந்த 72 மணி நேரத்தில் 4700 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறித்த நில அதிர்வுகள் அப்பிரதேசங்களில் நிலச்சரிவு அபாய நிலைமையை அதிகரித்துள்ளதாக அரச நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. அதிகரித்த நில அதிர்வுகள் மற்றும் எரிமலை சாம்பல் ஆகியவை எரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அபாய நிலைமையை...

யாழ்.பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு மிரட்டல்!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரவையின் உறுப்பினர்கள் சிலருக்குத் தெரியாத கைத்தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பு மேற்கொள்ளப்பட்டு, நாங்கள் அரச புலனாய்வுச் சேவையில் இருந்து...

யாழ் முச்சக்கர வண்டிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

யாழில் முச்சக்கர வண்டிகளிற்கு டக்சி மீற்றர் பொருத்தப்பட்டு, பொலிஸாரால் ஸ்டிக்கர் ஒட்டப்படுதல் வேண்டும் என யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் யருஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் மேலும் அவ்வாறு செய்யத் தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு புதைகுழியில் 13 மனித எச்சங்கள் அடையாளம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த மனிதப்புதைகுழி தொடர்பில் எதிர்வரும் 13 ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அகழ்வுப்பணியுடன் தொடர்புடைய திணைக்களங்கள் மற்றும் அமைப்புக்களுடன் விசேட கலந்துரையாடல் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்தே...

ஆசிரியரின் தாக்குதலுக்கு உள்ளான மாணவி வைத்தியசாலையில் அனுமதி!!

யாழ். வலிகாமம் வலயத்தைச் சேர்ந்த தரம் மூன்றில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி(08) ஒருவர் ஆசிரியரின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவியின் கையில் ஆசிரியர் பலமாகத் தாக்கியதில் மாணவி கையைத் தூக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார். இந்நிலையில் மாணவியின் நிலையை அறிந்து கொண்ட பாடசாலை நிர்வாகம்...

ரஷ்ய அதிபர் புடினை பார்க்க கண்ணீர் விட்டு கதறியழுத சிறுமி!

ரஷ்ய அதிபர் புடினை காண முடியாமல் கதறியழுத சிறுமியை, அதிபர் மாளிகைக்கு வரவழைத்து புடின் விருந்தளித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள (Dagestan) தாகெஸ்தான் குடியரசுக்கு அதிபர் புடின் சுற்றுப்பயணம் சென்ற போது, அவரை பார்க்க 8 வயது சிறுமி (Raisat Akipova) ரைசாட் அகிபோவா வருகை தந்துள்ளார். இருப்பினும், கடும்...

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் காணப்படும் பகுதியில் அகழ்வு பணிகள் ஆரம்பம்!!

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளது என சந்தேகிக்கப்படும் மனித எச்சங்கள் காணப்படுகின்றன பகுதியில் அகழ்வு பணிகள் ஆரம்பம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளது பெண் போராளிகளது உடல்களாக இருக்கலாம் என சந்தேகப்படும் மனித எச்சங்கள் உடைகள் மீட்கப்பட்ட பகுதியில் வியாழக்கிழமை (06) அகழ்வு பணிகள்...

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் குறித்து அங்கஜன் அறிக்கை!

யாழ். பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக வருபவர் பல்கலைக்கழக மற்றும் தமிழ் பாரம்பரியங்களை பாதுகாப்பவராக செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தனிச் சிறப்புள்ளது. எதிர்வரும் 12 ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தர் தெரிவு இடம்பெற...

மன்னார் மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் அதிரடித் தீர்மானம்!!

மன்னார் ‘சதோச’ மனித புதைகுழி அகழ்வு தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை ஒன்றைத் தயாரிக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகச் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். குறித்த வழங்கானது நேற்ற முன்தினம் (05) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதே இவ்உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி நிரஞ்சன் கருத்துத் தெரிவிக்கையில் ”இந்த புதை குழியில்...

பளையில் கோர விபத்து! பாடசாலை மாணவன் உயிரிழப்பு!!

பளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று மாலை (05.07.2023) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பளை முள்ளையடி பகுதியைச் சேர்ந்த ராஜபாஸ்கரன் யகுசிகன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துவிச்சக்கர வண்டியில் சென்ற குறித்த மாணவன் மீது பட்டா ரக வாகனம் ஒன்று மோதியதில்...

சர்வதேச எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரஷ்ய விமானம்: அச்சத்தில் உலக நாடுகள்

ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய அணு ஆயுதக்கட்டுப்பாட்டு விமானம் நேட்டோ எல்லைக்கருகே பறந்தமையினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பாக ஆகாயத்தில் பறந்தபடி ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆணை பிறப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த விமானம், நேட்டோ எல்லைக்கருகே பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேட்டோ சார்பில் எஸ்தோனியா நாட்டில் நிறுத்தப்பட்டிருந்த பிரித்தானிய விமானப்படை விமானங்கள் இரண்டு சீறிப்பறந்து இந்த ரஷ்ய...

மானிப்பாயில் ஆயுதங்கள் மீட்பு!

மானிப்பாய் பகுதியில் நான்கு துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்குரிய தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உயரப்புலம் அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணி ஒன்றில் , அதன் உரிமையாளர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குழி ஒன்றினை தோண்டிய போதே அதனுள் ஆயுதங்கள் காணப்பட்டுள்ளன. அதனை அடுத்து, மானிப்பாய் பொலிஸாருக்கு காணி உரிமையாளர் அறிவித்ததை அடுத்து...
Loading posts...

All posts loaded

No more posts