Ad Widget

சர்வதேச எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரஷ்ய விமானம்: அச்சத்தில் உலக நாடுகள்

ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய அணு ஆயுதக்கட்டுப்பாட்டு விமானம் நேட்டோ எல்லைக்கருகே பறந்தமையினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பாக ஆகாயத்தில் பறந்தபடி ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆணை பிறப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த விமானம், நேட்டோ எல்லைக்கருகே பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேட்டோ சார்பில் எஸ்தோனியா நாட்டில் நிறுத்தப்பட்டிருந்த பிரித்தானிய விமானப்படை விமானங்கள் இரண்டு சீறிப்பறந்து இந்த ரஷ்ய விமானத்தை இடைமறித்துள்ளன.

லிதுவேனியாவில், அடுத்த வாரம், நேட்டோ அமைப்பின் தலைவர்கள் உச்சி மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக திட்டமிட்டுவரும் நிலையில், புடினுடைய விமானம் அந்தப் பகுதியில் பறந்ததையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த விமானத்தில் ரஷ்ய தளபதிகளில் ஒருவரோ, அல்லது புடினோ இருந்திருக்கலாம் என கருதப்படுகின்றது.

Related Posts