தமிழர்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர் – அத்துரலிய

தமிழ் மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் எதிரானவர்கள் அல்லர். பயங்கரவாதமானது எம் இரு சமுதாயத்தினரையும் அழிவை நோக்கி இட்டுச் சென்றதாலேயே அதனை தோல்வியடையச் செய்வதற்கு நாம் முயற்சித்தோம். பௌத்த பிக்குமார் என்ற வகையில் எம் மனதில் ஒரு காலமும் தமிழருக்கெதிரான மனோபலம் இருந்ததில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்தார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில்...

தர்மம் வழங்கிய முதலமைச்சர்

யாழ். மத்திய பஸ் நிலையத்தில் பிச்சை எடுக்கும் பெண்ணொருவருக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தர்மம் வழங்கினார். வடமாகாணத்திலுள்ள சாலைகளுக்கு பஸ்கள் வழங்கும் நிகழ்வு யாழ். மத்திய பஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட முதலமைச்சர், பஸ்களை சாலை முகாமையாளர்களிடம் கையளித்தார். நிகழ்வு முடிவடைந்தததும், முதலமைச்சர் தனது வாகனத்தில் ஏறி புறப்பட்டத்...
Ad Widget

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

2015ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் காலிறுதிப்போட்டியில் வெற்றிபெறுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை கிரிக்கெட் அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டுள்ளார். அவர், தனது வாழ்த்துக்களை ஸ்கைப் ஊடாக தெரிவித்ததாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஆஸ்திரேலியாவில் 3 காலிறுதிப் போட்டிகளும்,...

யாழ்.மாவட்ட அரச அதிபராகிறார் வேதநாயகன்

யாழ்.மாவட்ட அரச அதிபராக இடமாற்றம் பெற்றுள்ள, முல்லைத்தீவு மாவட்டத்தின் தற்போதைய அரச அதிபர் நா.வேதநாயகன், யாழ்.மாவட்டத்தில் தனது கடமைகளை எதிர்வரும் 23ஆம் திகதி பொறுப்பேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கிளிநொச்சி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அதற்குப் பதிலாக யாழ்.மாவட்ட அரச அதிபராக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் நியமிக்கப்பட்டிருந்தார். கிளிநொச்சி...

வடக்கு மாகாண மக்கள் தங்களுடைய தனித்துவத்தை உலகறியச்செய்ய வேண்டும் – வடக்கு முதல்வர்

வடக்கு மாகாண மக்கள் தங்களுக்கு வழங்கப்படுகின்ற நன்மைகளை நல்ல முறையில் பராமரித்து சேவையினை ஆற்றுவார்கள் என்ற செய்தியை உலகத்திற்கு எடுத்துக் காட்டும் வகையில் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இலங்கை போக்குவரத்து சபையின் வடக்குமாகாணத்திலுள்ள யாழ். மாவட்ட சாலைகளுக்கான புதிய பேருந்துகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று யாழ். மத்திய...

லாகூரில் கிறிஸ்தவ தேவலாயங்கள் மீது தாக்குதல்: 14 பேர் பலி

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இரண்டு கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தபோதே இத்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இத்தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் என்று கருதப்படும் இத்தாக்குதல்கள், லாகூர் நகரில் கிறிஸ்தவ மக்கள் செறிவாக வாழும் புறநகர்ப் பகுதியான யௌஹனாபாதில் நடைபெற்றுள்ளது....

மனுஸ் தீவு முகாமில் அவலநிலை: ஊடகவியலாளர் ஆய்வு

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரச் சென்றவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பப்புவா நியு கினீயின் மனுஸ் தீவு அகதி முகாமில் மிகவும் கஷ்டமான சூழ்நிலை காணப்படுவதாக, அங்கு சென்று தகவல் சேகரித்துள்ள ஊடகவியலாளர் இயய்ன் பிளாக்வெல் கூறுகிறார். மனுஸ் தீவில் உள்ள இந்த அகதிகள் தடுப்பு முகாமில் ஆயிரத்துக்கும் அதிகமான அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அது சுகாதாரக்...

தமிழக மக்கள் உணர்ச்சிவசப்படுவது இலங்கை தமிழர்களுக்கு பாதகமாகவும் முடியலாம்

இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் உணர்ச்சிகரமாகச் செயற்படுகின்ற தமிழக மக்கள், அவதானத்துடன் செயற்படுவது பயனுள்ளதாக இருக்கும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்திய செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இலங்கைப் பிரச்சினை பற்றிய முடிவுகளை மேற்கொள்வதற்கு முன்னர், அங்கு என்ன நடக்கின்றது, என்பதைக் கவனத்திற் கொண்டு, ஏதேனும் முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் தங்களுடன் பேசுவது பயனுள்ளதாக இருக்கும் என்று...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்கும் பிரேரணைக்கு அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவரும் புதிய அரசியல் சாசன சீர்திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது. இலங்கையில் மீள்குடியேற்றம் மற்றும் இந்து விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரான டி எம் சுவாமிநாதன் இதனை உறுதிப்படுத்தினார். முன்வைக்கப்பட்டுள்ள 19ஆவது அரசியல் சட்டத் திருத்த பிரேரணையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: இலங்கையயில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட...

ரஜினியின் புது படத்தை இயக்க 7 டைரக்டர்கள் போட்டி

ரஜினி அடுத்த படத்துக்கு தயாராகியுள்ளார். சமீபத்திய படங்களான கோச்சடையான், லிங்கா இரண்டுமே எதிர் பார்த்த வசூலை ஈட்ட வில்லை. எனவே அடுத்த படத்தின் கதையை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறார். புதிய படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்க போவதாக கூறப்படுகிறது. இருவரும் நேரில் சந்தித்து பேசி இதை முடிவு செய்துள்ளனர். ஆஸ்கார் ரவிச்சந்திரன் ‘ஐ’ படத்தை...

கூட்டுறவுப் பணியாளர்களுக்கு 30 வீத சம்பள உயர்வு – பொ.ஐங்கரநேசன்

வடமாகாணத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்கள் அனைவருக்கும் 30 வீத சம்பள உயர்வு வழங்கப்படும் எனவும், தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது மரணம் அடைந்த பனைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூபா ஒரு இலட்சம் உதவுதொகையாக வழங்கப்படும் எனவும் வடக்கு மாகாண கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவித்துள்ளார். வடமாகாணத்தில் உள்ள பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்களுக்கும் அமைச்சர்...

வீட்டிலுள்ளவர்களை கட்டிவைத்து நகை, பணம் கொள்ளை

வரணி இடைக்குறிஞ்சி பகுதியிலுள்ள வீடொன்றில் சனிக்கிழமை(14) இரவு முகத்தை துணியால் மறைத்தபடி நுழைந்த நால்வர் கொண்ட குழு, வீட்டிலிருந்தவர்களை அடித்து, கட்டிவைத்ததுடன் நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக கொடிகமம் பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை (15) தெரிவித்தனர். வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 25 பவுண் நகைகள் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் என்பன இவ்வாறு...

தபால் ரயிலில் மோதி ஒருவர் பலி

கிளிநொச்சி, பளை தர்மகேணி பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை கடக்கமுயன்ற அதேயிடத்தை சேர்ந்த குருபரன் தவசீலன் (வயது 32) என்பவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார் என்று பளைப் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து – யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தபால் ரயிலில் மோதியதில், இவர் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் பளை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்...

தமிழர்கள் ஐக்கியப்பட வேண்டுமென என்று பிரதமர் வலியுறுத்தினார் – மனோ

'தமிழர் ஒற்றுமை' (Tamil Unity) என்ற அடிப்படையில் தமிழர்கள் தங்களுக்கிடையிலான பேதங்களை மறந்து ஐக்கியப்பட வேண்டும். இது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய முதல் அவசியமாகும். இதன் மூலமாகவே ஐக்கிய இலங்கைக்குள் நீங்கள் சமத்துவமாக வாழ முடியும். அதற்கு இந்தியா துணை இருக்கும் என்று இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கிற்கு வெளியே தென்னிலங்கையில் வாழும்...

அரசியல் கைதிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும்; தேசிய பாதுகாப்புச் சபைக்கு ஜனாதிபதி உத்தரவு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான அறிக்கையை தனக்கு சமர்ப்பிக்குமாறு தேசிய பாதுகாப்புச் சபைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டார். வழக்குத் தாக்கல் இன்றி 182 முதல் 189 பேர் வரையானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று நீதி அமைச்சர் அண்மையில்...

அநாமதேய தொலைபேசி அழைப்புகள்; உறவுகளே உசார்!

வெளிநாடுகளுக்குச் சென்று காணாமற் போனவர்களின் உறவினர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் அநாமதேய நபர்கள் காணாமற் போனோரின் பெயருக்கு பெரும் தொகைக்கான காசோலை வந்துள்ளதாக கூறி ஏமாற்றும் சம்பவங்கள் நடக்கின்றன. சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பில் கவனமாகச் செயற்படுமாறு அறிவுறுத் தப்படுகிறது. கடந்தவாரம் இவ்வாறான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த கணக்கொன்றுக்கு 25ஆயிரம் ரூபாவை வைப்பிலிட்டால் தங்களுக்குரிய 4...

முதலமைச்சர், ஆளுநரின் வாகனங்களும் சோதனை

வடமாகாண ஆளுநர் எச்.என்.ஜி.எஸ் பளிஹக்கார, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரின் வாகனங்கள் கடும் சோதனைக்கு பின்னரே யாழ். பொதுநூலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கு சனிக்கிழமை (14) விஜயம் மேற்கொண்டு யாழ். பொதுநூலகத்தில் கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டதையடுத்து, இந்திய நிதியுதவியில் முற்றவெளியில் கலாச்சார மண்டபம் கட்டுவதற்கான திரைநீக்கமும் செய்து வைத்தார். இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக...

மோடி – மஹிந்த சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது இருவரும் மனம்விட்டு பேசியதாக அறியமுடிகிறது. பாரதப் பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது ஏற்பாடு செய்யப்பட்ட 40இற்கும் மேற்பட்ட உத்தியோகபூர்வ சந்திப்புகளின் இறுதிச் சந்திப்பாக இது அமைந்தது என...

நாட்டினை அபிவிருத்தி செய்வதற்கு அனைவரும் செயற்பட வேண்டும் – யாழில் மோடி

இந்த வீடுகள் வெறும் செங்கற்களாலோ அல்லது சுவர்களாலோ அமைக்கப்பட்டது அல்ல. உங்களின் வளர்ச்சியில் செல்வதற்கும் இலங்கை மக்களின் துயரங்களை நீக்கக்கூடியதும் யாழ்ப்பாணத்தில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையினை அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே அமைக்கப்பட்டுள்ளன என இந்திய பிரதமர் மோடி தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கான விஜயம் கொண்ட இந்திய பிரதமர் கீரிமலை கூவில் பகுதியில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை...

வடக்கு முதல்வரை சந்தித்தார் இந்தியப் பிரதமர்!

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சனிக்கிழமை நண்பகல் யாழ் பொதுநூலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
Loading posts...

All posts loaded

No more posts